மதுக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுக்கூர்
—  பேரூராட்சி  —
மதுக்கூர்
இருப்பிடம்: மதுக்கூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°29′N 79°24′E / 10.48°N 79.4°E / 10.48; 79.4ஆள்கூற்று: 10°29′N 79°24′E / 10.48°N 79.4°E / 10.48; 79.4
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எ. அண்ணாதுரை இ .ஆ .ப [3]
பெருந்தலைவர் பஷீர் அஹமது
மக்கள் தொகை 15,171 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


3 metres (9.8 ft)

மதுக்கூர் (ஆங்கிலம்:Madukkur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். [4]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°29′N 79°24′E / 10.48°N 79.4°E / 10.48; 79.4 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அரசியல்[தொகு]

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. [6]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,171 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். மதுக்கூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுக்கூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள்[தொகு]

 • அத்தி கோ. இராமலிங்கம், பேச்சாளர், இலக்கியவாதி
 • மரைக்காயர் - இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்று அழைத்து வந்தனர்.
 • மதுக்கூர் மஜீத் - இவரது முழுப்பெயர் அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால் பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார்.
 • மதுக்கூர் கண்ணன் - அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. யார் திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள்.
 • மதுக்கூர் இராமலிங்கம் - தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும் லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்.

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21
 5. "Madukkur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
 6. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
 7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுக்கூர்&oldid=2583576" இருந்து மீள்விக்கப்பட்டது