திருவிடைமருதூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவிடைமருதூர் வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருவிடைமருதூர் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், கதிராமங்கலம், ஆடுதுறை என 5 உள்வட்டங்களும், 89 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 231,151 ஆகும். மக்கள்தொகையில் 115,300 ஆண்களும், 115,851 பெண்களும் உள்ளனர். 56,999 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 73.8% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 82.79% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23907 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 971 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 69,455 மற்றும் 655 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.48%, இசுலாமியர்கள் 8.56%, கிறித்தவர்கள் 2.85% மற்றும் பிறர் 0.02% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிடைமருதூர்_வட்டம்&oldid=2724723" இலிருந்து மீள்விக்கப்பட்டது