இலால்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலால்குடி
இலால்குடி
இருப்பிடம்: இலால்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E / 10.87; 78.83ஆள்கூற்று: 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E / 10.87; 78.83
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. எஸ். பழனிச்சாமி இ. ஆ. ப. [3]
சட்டமன்றத் தொகுதி இலால்குடி
சட்டமன்ற உறுப்பினர்

சௌந்திரபாண்டியன் (திமுக)

மக்கள் தொகை 21,204 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


57 metres (187 ft)

இலால்குடி (ஆங்கிலம்:Lalgudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E / 10.87; 78.83 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 57 மீட்டர் (187 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,204 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இலால்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலால்குடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கோயில்கள்[தொகு]

இலால்குடி பேருந்து நிலையம் அருகே சப்தரிசிசுவரர் சிவாலயம் அமைந்துள்ளது. இச்சிவாலயத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கெளதமர், ஆங்கீரசர், மரிசீ ஆகிய ஏழு ரிசிகள் தங்களின் சாபம் நீக்க சிவபெருமானை வழிபட்டு, மோட்சம் அடைந்துள்ளனர்.[6] இச்சிவாலயத்தில் மிகவும் அரிதான உடல் என்ற வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

எண்ணற்ற அரிய சிற்பங்கள் இச்சிவாலயத்தில் காணப்படுகின்றன. புலிதொப்பைக் கொண்ட பூதகணங்கள், பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கின்ற பூதகணங்கள், வீணை தட்சிணாமூர்த்தி, மகாகாளர் சிற்பம் ஆகியவை உள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "Lalgudi". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  6. http://www.shivasiddhar.org/?p=641
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்குடி&oldid=2476372" இருந்து மீள்விக்கப்பட்டது