கும்பகோணம் வட்டம்
Appearance
கும்பகோணம் வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கும்பகோணம் நகரம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் தேவனாஞ்சேரி, முருக்கங்குடி, நாச்சியார்கோயில், சோழன்மாளிகை மற்றும் கும்பகோணம் என 5 உள்வட்டங்களும், 124 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]
இவ்வட்டத்தில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]
- மக்கள்தொகை = 436,592
- ஆண்கள் = 216,463
- பெண்கள் = 220,129
- குடும்பங்கள் = 110,486
- கிராமப்புற மக்கள்தொகை = 48.8%
- எழுத்தறிவு = 85.68%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,017 பெண்கள் வீதம் உள்ளனர்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 43367
- குழந்தைகள் பாலின விகிதம்: 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள்.
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 80,045 மற்றும் 349
சமயம்
[தொகு]- இந்துக்கள் = 87.01%
- இசுலாமியர்கள் = 8.06%
- கிறித்தவர்கள் = 4.74%)
- பிறர்= 0.09%