பேராவூரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேராவூரணி
—  தேர்வு நிலை பேரூராட்சி  —
பேராவூரணி
இருப்பிடம்: பேராவூரணி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E / 10.3; 79.18ஆள்கூறுகள்: 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E / 10.3; 79.18
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பேராவூரணி வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
தேர்வுநிலை பேரூராட்சித்தலைவர் இல்லை
மக்கள் தொகை

அடர்த்தி

22,084 (2011)

1,184/km2 (3,067/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


16 மீட்டர்கள் (52 ft)

பேராவூரணி (ஆங்கிலம்:Peravurani), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டம் மற்றும் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேராவூரணி சட்டமன்ற தொகுதி ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஓர் தேர்வு நிலை பேரூராட்சியும் ஆகும்.[3]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E / 10.3; 79.18 ஆகும்.[4] இவ்வூர், கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அரசியல்[தொகு]

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பேராவூரணி தொகுதியாகவும் உள்ளது. [5]

மக்கள்தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 5,853 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 22,084 ஆகும். அதில் 10,643 ஆண்களும், 11,441 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,075 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2122 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 45% உள்ளனர். ஆகவுள்ளமக்கள்தொகையில் இந்துக்கள் 83.45% , இசுலாமியர்கள் 9.98%, கிறித்தவர்கள் 6.52% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[6]

சுற்றுலாத்தளம்[தொகு]

  • பேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் மனோரா எனும் கடற்கரைச் சுற்றுலாத்தளமாக உள்ளது. இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது.
  • பேராவூரணி அருகே உள்ள

பின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில்.

  • ஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்,மேற்கு நோக்கி சந்நதியானது அமைந்திருக்கும்.
  • பாளத்தளி துர்க்கை அம்மன் கோயில்
  • கழனிவாசல் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் [7]
  • விளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது.

தொழில்[தொகு]

  • இப்பகுதியில் நெல் விளையும் வயல்வெளிகள் நிறைந்து காணப்படுகின்றன.மேலும் இப்பகுதி காவிரி பாயும் கடைமடை பகுதியாகும்.
  • தமிழ்நாட்டிலயே இங்கு தான் தென்னை சாகுபடி அதிகம்.
  • இங்கு விளையும் தேங்காய்கள் எண்ணெய் உற்பத்திக்காக காங்கேயம், பல்லடம் போன்ற ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • இந்த தொகுதியின் கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராவூரணி&oldid=3252443" இருந்து மீள்விக்கப்பட்டது