மனோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனோரா கோட்டை

மனோரா கோட்டை (Manora Fort, Thanjavur ) இந்தியாவின் பட்டுக்கோட்டை, தமிழ்நாட்டிலிருந்து 20 கிமீ (12 மைல்) தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 60 கிமீ (37 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. 1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். அந்நினைவுச்சின்னத்தை மனோரா என்று அழைக்கின்றனர். இது எட்டு மாடி, அறுகோண வடிவ கோபுர அமைப்பைக் கொண்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 23 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கோட்டை மினாரெட் என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து மனோரா என்ற பெயரைப் பெற்றது. [1]

டிசம்பர் 2004 இல், இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக, இக் கோட்டை உட்பட ஐந்து நினைவுச்சின்னங்கள் சேதமடைந்தன. [2] இப் பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்காவை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடம் கட்டுவது உள்ளிட்ட பல கூடுதல் வசதிகளை உருவாக்குவதன் மூலம் கட்டமைப்பை புதுப்பிக்கவும் அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் 2007 ஆம் ஆண்டில் மாநில சுற்றுலாத் துறையால் திட்டமிடப்பட்டது. [3]

வரலாறு[தொகு]

1815 ஆம் ஆண்டில் வாட்டர்லூ போரில் நெப்போலியன் போனபார்டே (15 ஆகஸ்ட் 1769 - 5 மே 1821) மீது ஆங்கிலேயர்கள் வெற்றிகரமாக முன்னேறியதை நினைவுகூரும் வகையில் 1814-1815 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மராத்தா ஆட்சியாளர் இரண்டாம் சரபோஜி (பொ.ச. 1777-1832) என்பவரால் இந்த கோட்டை கட்டப்பட்டது. [4][5][5][6] இந்த கோட்டை அரச குடும்பத்தின் வசிப்பிடமாகவும், ஒரு கலங்கரை விளக்கமாகவும் செயல்பட்டது. ஒரு கல் கல்வெட்டு இதைப் பற்றி குறிப்பிடுகையில், "பிரித்தானிய அரசின் ஆயுதங்களின் வெற்றிகளையும், நெப்போலியன் போனபார்ட்டின் வீழ்ச்சியையும் நினைவுகூரும் வகையில் ஆங்கிலேயரின் நண்பரும் கூட்டாளியும்" என்று கூறுகிறது.

அமைப்பு[தொகு]

இந்த கோட்டை பட்டுகோட்டையிலிருந்து 20 கிமீ (12 மைல்) தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 65 கிமீ (40 மைல்) தொலைவிலும் வங்காள விரிகுடாவின் கரையில் சின்னமனை (விஜயகுமார் வீரப்பன்) அல்லது சரபேந்திரராஜன்பட்டினம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மனோரா என்ற சொல் கோபுரம் என்று பொருள்படும். இது, மினார் என்ற வார்த்தையிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது. அறுகோண வடிவமும் 8 அடுக்குள்ள இந்தக் கோபுரத்தின் உயரம் 120 அடி, உச்சியை அடைய 120 படிகள் உள்ளன.[7] கோபுரம் ஒரு சுவர் மற்றும் ஒரு அகழியால் சூழப்பட்டுள்ளது. இது ஒரு கோட்டையை ஒத்திருக்கிறது. இந்த நினைவுச்சின்னம் பகோடா போல தோற்றமளிக்கிறது. வளைந்த ஜன்னல்கள், வட்டமான படிக்கட்டுகள் மற்றும் மேற்கூரையின் கீழ்பகுதி ஆகியவை ஒரு மாடியை மற்றொன்றிலிருந்து பிரிக்கின்றன.

இது தஞ்சை மாவட்டக் கடலோரத்தில் உள்ள அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் உள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேதமும் புனரமைப்பும்[தொகு]

2004ல் நிகழ்ந்த ஆழிப்பேரலையால் சேதமடைந்தது.[8] நினைவுச்சின்னத்தின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2003 இல் நிறைவடைந்தது. கோட்டையின் இரண்டாம் நிலை வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி உண்டு. 2004 இல் இந்தியப் பெருங்கடல் சுனாமியின் போது கோட்டையின் கணிசமான பகுதி சேதமடைந்தது. [5] கோட்டையைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தமிழக மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ரூ.193,195,000 (அமெரிக்க $ 45,000) ஒதுக்கியது. இப்பகுதியில், கூடுதல் வசதிகளைக் கொண்ட குழந்தைகள் பூங்காவை அபிவிருத்தி செய்வதற்கும், கூடுதல் விளக்குகளை வழங்குவதற்கும், காட்சி பலகைகளை நிறுவுவதற்கும், சாலையோரம் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கும், சேது சாலையில் இருந்து கோட்டைக்கு புதிய சாலையை அமைப்பதற்கும், கடற்கரையில் வெட்டப்பட்ட குடை கூரை கட்டமைப்புகளை மாற்றுவதற்கும் இந்த திட்டம் இருந்தது. இந்த கோட்டை மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

2007 ல் இது, தமிழ்நாடு சுற்றுலாத்துறையினரால் புனரமைக்கப்பட்டது.[9]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Joshi, G.V. (15 February 2003). "Victory Tower". The Hindu. http://www.hinduonnet.com/thehindu/yw/2003/02/15/stories/2003021500770300.htm. பார்த்த நாள்: 9 April 2008. 
  2. Ramakrishnan, T. (7 January 2005). "Mughal-era fort, Dutch tombs damaged". The Hindu. பார்த்த நாள் 9 April 2008.
  3. Srinivasan, G. (19 September 2007). "Manora fort to get a facelift". The Hindu: Tamil Nadu News. பார்த்த நாள் 2013-07-07.
  4. "Manora - Sarabendraraja Pattinam". Department of Archaeology, Government of Tamil Nadu. பார்த்த நாள் 2013-07-07.
  5. 5.0 5.1 Gerald, Olympia Shilpa (29 March 2012). "Hidden 100: Fort on the coast". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/travel/hidden-100-fort-on-the-coast/article3257748.ece. பார்த்த நாள்: 2013-07-07. 
  6. Jayewardene-Pillai, Shanti (2007). Imperial Conversations: Indo-Britons and the Architecture of South India. Yoda Press. பக். 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788190363426. https://books.google.com/books?id=36IBkEKlEC8C&pg=PR9&dq=manora+fort+%2B+serfoji&hl=en&sa=X&ei=08UKUsTOPKPg2AX4j4HQBQ&ved=0CEEQ6AEwBA#v=onepage&q=manora%20fort%20%2B%20serfoji&f=false. 
  7. http://www.tamilnadutourism.org/tamil/thanjavur.html
  8. http://www.hindu.com/2005/01/07/stories/2005010715140700.htm
  9. http://hindu.com/2007/09/19/stories/2007091961370900.htm

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரா&oldid=2946812" இருந்து மீள்விக்கப்பட்டது