சங்ககிரி மலைக்கோட்டை
சங்ககிரி மலைக்கோட்டை | |
---|---|
பகுதி: தமிழ்நாடு | |
சேலம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | |
![]() | |
நுழைவுவாயில் | |
வகை | கோட்டைகள் |
இடத் தகவல் | |
உரிமையாளர் | தமிழ்நாடு அரசு |
கட்டுப்படுத்துவது | விஜயநகரப் பேரரசு மைசூர் அரசு ஐக்கிய இராச்சியம்
இந்திய அரசு (1947-) |
நிலைமை | இடிந்த நிலை |
சங்ககிரி மலைக்கோட்டை (Sankagiri hill) சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் 'சங்கரி துர்க்கம்' என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும். இது சேலத்திலிருந்து 35 கி.மீ. மேற்கில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
[தொகு]- இந்த கோட்டை சங்கு போன்ற வடிவம் கொண்டதாலும், கிரி என்றால் மலை என்று அர்த்தம் என்பதாலும் இதற்கு சங்ககிரி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
- இந்த கோட்டையில் ஆள் இறங்கும் குழி, தோல் உரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை, உருட்டிவிட்டான் பாறை ஆகியவற்றில் தண்டனை பெறுபவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1]
வரலாறு
[தொகு]வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[2] இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக்கோட்டை தமிழகத்தின் மிக உயரமான மலைக்கோட்டையாகும்.
மலையின் அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன. மலையிலுள்ள பாறைகள் மிக அழகான முறையில் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களும் மிகவும் உறுதிவாய்ந்தவையாக உள்ளன. கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் ஐதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரால் இக்கோட்டை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என அறியப்படுகிறது. 9வது வாயிலில் 1799 என்ற ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஆங்கிலேயர்களால் இவ்வாயில் கட்டப்பட்டிருக்கலாம்.[3]


கோட்டையின் மூன்றாவது வாயிலில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இக்கோவிலுள்ள கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் வேலைப்பாடு மிகுந்தவை. இக்கோவிலின் ஒருபகுதி இந்தியத் தொல்பொருள் துறையினரால் புணரமைக்கப்பட்டுள்ளது. 5ஆவது வாயிலை அடுத்து படைவீரர்கள் தங்குமிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. 5-ஆம் 6-ஆம் வாயில்களுக்கிடையில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றும் அதனருகில் மர்மமான சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது. 6-ஆவது வாயிலுக்கருகில் வெடிமருந்து வைப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. கோட்டையின் உச்சியில் சென்ன கேசவப்பெருமாள் கோவில் உள்ளது. முக்கிய விழா நாட்கள் தவிர பிற நாட்களில் இக்கோவிலின் உற்சவர் மலை அடிவாரத்தில் வைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் சோமேசுவரசுவாமி கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தி பாதுகாப்பில் உள்ளது.[3]
கோட்டையில் உள்ள வழிபாட்டுத் தளங்கள்
[தொகு]- கீழ் அரணில் சிவன் கோவில்
- வரதராசப் பெருமாள் கோவில்
- சென்ன கேசவப் பெருமாள் கோவில்
- தஸ்தகீர் மகான் தர்கா
- கெய்த் பீர் பள்ளிவாசல்
தீரன் சின்னமலை
[தொகு]இக்கோட்டையில் தீரன் சின்னமலையை ஆங்கிலேயர் 1805ம் ஆண்டு சூலை 31ந் தேதி (ஆடி 18 அன்று) தூக்கிலிட்டார்கள்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சுற்றுலாத் தளங்களில் தமிழகக் கோட்டைகள், ஜி எச் பாரிஸ், புஷ்பா நூலகம், 2000, பக்: 96
- ↑ வீரம், தியாகம், ஆன்மீகத்தின் அடையாளம் சரித்திரம் பேசும் சங்ககிரி கோட்டை: புராதனங்கள் சிதையும் அவலம். தினகரன் நாளிதழ். 17 நவம்பர் 2019.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோட்டை விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
{{cite book}}
: CS1 maint: year (link) - ↑ 3.0 3.1 வி. கந்தசாமி (2011 (மூன்றாம் பதிப்பு)). தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ். p. 195. ISBN 978-81-8379-008-6.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: year (link) - ↑ http://www.hindu.com/2007/07/10/stories/2007071051470300.htm பரணிடப்பட்டது 2007-12-01 at the வந்தவழி இயந்திரம் தீரன் சின்னமலை 1805ல் தூக்கிலிடப்பட்டார்