ராஜ் தர்பங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ் தர்பங்கா
கி.பி. 1557 [1]–கி.பி 1947
தலைநகரம்தர்பங்கா
பேசப்படும் மொழிகள்மைதிலி, சமசுகிருதம்
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்
  • சுதந்திர மாநிலம் (கி.பி.1684 - 1804 )[2]
மகாராஜா 
வரலாற்று சகாப்தம்மத்தியகால இந்தியா
• தொடக்கம்
கி.பி. 1557 [1]
• முடிவு
கி.பி 1947
முந்தையது
பின்னையது
ஓனிவார் வம்சம்
இந்தியக் குடியர்சு
தற்போதைய பகுதிகள்இந்தியா மற்றும் நேபாளம்

தர்பங்கா ராஜ் (Raj Darbhanga) ராஜ் தர்பங்கா மற்றும் கந்த்வாலா வம்சம் என்றும் அழைக்கப்படும் இது ஒரு மைதிலி பிராம வம்சமும் பிராந்தியங்களின் ஆட்சியாளர்களும் ஆவர். மிதிலை பகுதியின் ஒரு பகுதியாக இருந்த இது இப்போது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. [3]

மைதிலி பிராமணர்கள் இதன் ஆட்சியாளர்களாக இருந்ததால் தர்பங்கா நகரத்தில் உள்ள இவர்களின் பகுதி மிதிலை பிராந்தியத்தின் மையமாக மாறியது. ஏனெனில் ஆட்சியாளர்கள் மைதிலி கலாச்சாரம் மற்றும் மைதிலி மொழியின் ஆதரவாளர்களாக இருந்தனர். [4] [5]

அதன் உச்சத்தில், வம்சம் 4000 சதுர மைல்களை உள்ளடக்கியிருந்தது. மேலும், "வட பீகார் ஜமீந்தாரிகளின் மிகப்பெரிய மற்றும் பணக்காரர் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் மிகப்பெரிய ஜமீந்தாரிகளில் ஒருவர்" என்று விவரிக்கப்பட்டது. [6] ஆங்கிலேயர்களால் ஒரு சமஸ்தானமாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், ராஜ் தர்பங்கா பெரியதாக இருந்தது. மேலும், பல சமஸ்தானங்களை விட, குறிப்பாக மேற்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களை விட அதிக அதிகாரங்களைக் கொண்டிருந்தது.

மகாராஜா பகதூர் சர் காமேஷ்வர் சிங் ராஜ் தர்பங்காவின் கடைசி ஆட்சியாளராக இருந்தார். அவர் 1962 இல் வாரிசு இல்லாமல் இறந்தார்.

வரலாறு[தொகு]

தர்பங்கா கோட்டையின் பிரதான வாயில்

கந்த்வால் வம்சத்தினர் 1960கள் வரை முகலாய பேரரசர் அக்பரின் காலத்தில் பிரபலமடைந்த மைதில் பிராமணர்கள் . அவர்களின் நிலங்களின் பரப்பளவு, காலப்போக்கில் வேறுபட்டது. மேலும் ஆங்கிலேயர் காலத்தில், முந்தைய சனத் ஏற்பாட்டின் கீழ் இவர்களுக்கு வழங்கப்பட்ட பகுதியை விட இவர்களின் உரிமைப் பகுதி சிறியதாக இருந்தது. பிரித்தானிய இந்தியாவின் செல்வாக்கு நேபாளத்தில் இருந்த பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தபோது இவர்களின் பகுதிகளும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. இருப்பினும், இவர்களின் சொத்துக்கள் கணிசமாக இருந்தன. இவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த போது, பிரதேசங்கள் சுமார் 4500 கிராமங்கள் கொண்ட 6,200 சதுர கிலோமீட்டர்கள் (2,400 சதுர மைல்) பரப்பளவில் இருந்தன என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

1947 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய அரசு பல நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடங்கியது. மேலும், ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்டது. தர்பங்கா ராச்சியத்தின் அதிகாரமும் குறைந்தது.

இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் இருந்த பல சமஸ்தானங்களுடன் ஒப்பிடும் போது ராஜ் தர்பங்கா மிகவும் பெரியதாக இருந்தது, அவற்றில் பல 200 மக்களை மட்டுமே கொண்டிருந்தன. இந்த சமஸ்தானங்களுக்கு ராஜ் தர்பங்காவிற்கு இருந்த அதிகாரம் இல்லை. [7] அதன் ஆண்டு வருமானம் தோராயமாக 4 மில்லியன் ரூபாயும் பல சமஸ்தானங்களுக்கு இணையாக இருந்தது. [8]

தர்பங்கா ராஜ் காலத்தில் கட்டப்பட்ட பல அரண்மனைகள் உள்ளன. 1934 நேபாளம்-பீகார் பூகம்பத்திற்குப் பிறகு கட்டப்பட்ட நர்கோனா அரண்மனை மற்றும் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் மற்றும் இலட்சுமிவிலாஸ் அரண்மனைக்கு நன்கொடை அளிக்கப்பட்டது. இது 1934 பூகம்பத்தில் கடுமையாக சேதமடைந்து, மீண்டும் கட்டப்பட்டு, பின்னர் காமேஷ்வர் சிங் தர்பங்கா சமஸ்கிருத பல்கலைக்கழகம் மற்றும் தர்பங்கா கோட்டைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள ராஜ்நகரில் உள்ள ராஜ்நகர் அரண்மனை வளாகம் மற்றும் சிம்லாவின் கைத்துவில் உள்ள தர்பங்கா ஹவுஸ் (தற்போது லொரேட்டோ கான்வென்ட் தாரா ஹால் பள்ளி) உட்பட இந்தியாவின் பிற நகரங்களிலும் தர்பங்கா ராஜ் பல அரண்மனைகளைக் கொண்டிருந்தது.

மதம்[தொகு]

மகாராஜா ரமேஷ்வர் சிங், வேதங்கள் மற்றும் வேத சடங்குகள் போன்ற பழைய இந்து பழக்கவழக்கங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான தங்களின் முயற்சியின் ஒரு பகுதியாக, சாமவேத படிப்பை மீண்டும் அறிமுகப்படுத்தினார். தென்னிந்தியாவில் இருந்து சில நன்கு அறிந்த சாமவேதிய அறிஞர்களை அங்கு கற்பிக்க அழைக்கப்பட்டனர். [9]

அனைத்து சாதியினருக்கும் பெண்களுக்கும் இந்து வேதங்களை கிடைக்கச் செய்ய முயன்ற புதிய பழமைவாத இந்து அமைப்பான ஸ்ரீ பாரத் தர்ம மகாமடலின் பொதுத் தலைவராக மகாராஜா ரமேஷ்வர் சிங் இருந்தார். ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் தாந்த்ரீக நூல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்ட அகமானுசந்தான சமிதியின் முக்கிய புரவலர்களில் ஒருவராகவும் இருந்தார். [10]

கல்வி ஊக்குவிப்பு[தொகு]

இந்தியாவில் கல்வி பரவுவதில் தர்பங்காவின் அரச குடும்பம் பங்கு வகித்தது. பனாரசு இந்து பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், பட்னா பல்கலைக்கழகம், காமேசுவர் சிங் தர்பங்கா சமசுகிருத பல்கலைக்கழகம், தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், [11] மற்றும் இந்தியாவின் பல கல்வி நிறுவனங்களுக்கு தர்பங்கா ராஜ் முக்கிய நன்கொடை அளித்துள்ளது.

மகாராஜா ராமேஷ்வர் சிங் மதன் மோகன் மாளவியாவால் தொடங்கப்பட்ட பனாரசு இந்து பல்கலைக்கழகத்திற்கு முக்கிய நன்கொடையாளராகவும், ஆதரவாளராகவும் இருந்தார். அவர் ரூ. 5,000,000 தொடக்க நிதியாக வழங்கினார். [12] மகாராஜா பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராகவும் இருந்தார். [13]

சான்றுகள்[தொகு]

  1. "Raj Darbhanga - home of Indias wealthiest Zamindars (Column)". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 8 October 2021.
  2. Rorabacher, J. Albert (2016). Bihar and Mithila: The Historical Roots of Backwardness. Routledge. பக். 255-270. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-35199-757-7. https://books.google.com/books?id=jWIPDQAAQBAJ&pg=PT216. 
  3. Tahir Hussain Ansari (20 June 2019). Mughal Administration and the Zamindars of Bihar. Taylor & Francis. பக். 200–223. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-00-065152-2. https://books.google.com/books?id=kUueDwAAQBAJ. 
  4. Henningham, Stephen (1990). A Great Estate and Its Landlords in Colonial India: Darbhanga, 1860-1942. Oxford University Press. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195625592. https://books.google.com/books?id=Z9fHAQAACAAJ. 
  5. Jha, Makhan. Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788175330344. https://books.google.com/books?id=A0i94Z5C8HMC&pg=PA62e. 
  6. Henning Brown, Carolyn (1988). "Raja and Rank in North Bihar". Modern Asian Studies 22 (4): 757–782. doi:10.1017/S0026749X00015730. https://www.jstor.org/stable/312524. 
  7. Ramusack, Barbara (2004). The Indian Princes and Their States. Cambridge University Press. பக். 3–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781139449083. https://books.google.com/books?id=Kz1-mtazYqEC&dq=zamindaris+princely+states+200+western+india&pg=PA3. Ramusack, Barbara (2004).
  8. Yang, Anand (1999). Bazaar India: Markets, Society, and the Colonial State in Bihar. University of California Press. பக். 69–70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520211001. https://books.google.com/books?id=Xa8wDwAAQBAJ&q=editions:_mchmV45tZYC. 
  9. "Michael Witzel" (PDF). Archived from the original (PDF) on 10 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-06-08.
  10. Sir John Woodroffe, Tantra and Bengal: An Indian Soul in a European.
  11. "Breaking news, views, current affairs & Infotainment : Khabrein.info". khabrein.info. Archived from the original on 7 March 2008.
  12. History of BHU பரணிடப்பட்டது 1 சூன் 2007 at the வந்தவழி இயந்திரம்
  13. Source – Radhakrishnan: His Life and Ideas By K. Satchidananda Murty, Ashok Vohra at page 92
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்_தர்பங்கா&oldid=3788498" இலிருந்து மீள்விக்கப்பட்டது