மிதிலை பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நேபாளம் மற்றும் இந்தியாவின் கிழக்கு பிகார் பகுதியில் (பச்சை நிறத்தில்) அமைந்த மிதிலைப் பிரதேசம்
மிதிலை அரச குலத்தில் பிறந்த தீர்த்தங்கரர் நமிநாதரின் சிற்பம், மதுரா அருங்காட்சியகம்

மிதிலைப் பிரதேசம் அல்லது மிதிலாஞ்சல், தெற்காசியாவின் தற்கால நேபாளத்தின் தென்கிழக்கு பகுதி, இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கிழக்குப் பகுதி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் வடக்குப் பகுதி புவியியல், மொழி மற்றும் பண்பாடு வகையில் ஒத்தப் பிரதேசமாக அமைந்துள்ளது. தொன்மையான இப்பிரதேசத்தில் மைதிலி மொழி பேசப்படுவதால், இப்பிரதேசத்திற்கு மைதிலி அல்லது மிதிலை எனப் பெயராயிற்று.[1]

மிதிலை பிரதேசத்தின் வடக்கில் இமயமலையும், தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் முறையே கங்கை ஆறு, கோசி ஆறு, கண்டகி ஆறுகளும் எல்லையாக அமைந்துள்ளது.[2] மிதிலை பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்கால பிகார் மாநிலத்தில் அமைந்துள்ளது. [3]மிதிலைப் பிரதேசத்தில் 40 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

பொதுவாக மிதிலை பிரதேசம் எனில் தற்கால இந்தியாவில் உள்ள மிதிலையும், நேபாளத்தில் உள்ள மிதிலையும் சேர்ந்த விதேக நாட்டைக் குறிக்கும். மிதிலை பிரதேசம் தற்கால கிழக்கு பிகாரின் கங்கைச் சமவெளியும், ஜார்காண்ட் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளையும் கொண்டது.

கங்கைச் சமவெளியில் அமைந்த பண்டைய விதேக நாட்டின் தலைநகரான மிதிலை தற்கால இந்தியாவின் வடக்கு பிகார் வரை விரிவடைந்துள்ளது. முதலில் மிதிலையின் தலைநகராக ஜனக்பூர் இருந்த போதிலும், பின்னர் மன்னர் இராஜா தர்பங்கா காலத்தில் பிகாரில் உள்ள தர்பங்காவிற்கு மாற்றப்பட்டது. [4][5]

பெயர்க் காரணம்[தொகு]

மித்தி எனும் வட மொழிச் சொல்லிற்கு மண் எனப் பொருள். ஜனகரின் முன்னோரான வேத கால மன்னர் நிமி மிதிலாபுரி நகரத்தை நிறுவினார்.

மிதிலை பிரதேசத்திற்கு திரபுக்தி (ஆறுகளால் சூழப்பட்டது) என்ற பெயரும் உண்டு. [6]

வரலாறு[தொகு]

வேத காலம்[தொகு]

வேத கால இந்தோ ஆரிய மக்கள் மிதிலை பிரதேசத்தில் விதேக நாட்டை நிறுவினர். [7] பிந்தைய வேத காலத்தில் (கிமு 1100-500 ), பரத கண்டத்தின் குரு, பாஞ்சாலம், மகதம், அங்கம், வங்கம் போன்று இராமாயணம் குறிப்பிடும்,மிதிலையை தலைநகராகக் கொண்ட ஜனகர் ஆண்ட விதேகமும் புகழுடன் விளங்கியது.[8]

விதேக நாடு பின்னர் மகாஜனபதங்களில் ஒன்றான வஜ்ஜியுடன் இணைந்தது. வஜ்ஜியின் தலைநகராக வைசாலி நகரம் விளங்கியது. [9]

மத்திய காலம்[தொகு]

கி பி 11-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு முடிய பல்வேறு உள்ளூர் வம்ச மன்னர்களால் மிதிலை பிரதேசம் ஆளப்பட்டது. அவர்களில் முதலானவர்கள் பார்மர் இராசபுத்திர கர்நாட சத்தியர்களும், மைதிலி பிராமணர்களான ஆயின்வார் வம்ச மைதிலி பிராமணர்களும் மற்றும் தர்பங்கா மைதிலி பிராமணர்கள் ஆவார்.[10] தர்பங்கா மைதிலி பிராமணர்களின் ஆட்சிக்காலத்தில், மிதிலை பிரதேசத்தின் தலைநகரம் மிதிலையிலிருந்து தர்பங்காவிற்கு மாற்றப்பட்டது.[11][12]

புவியியல்[தொகு]

சிவாலிக் மலை அடிவாரத்தில், கிழக்குத் தராய் சமவெளியில் அமைந்த மிதிலை பிரதேசம், கண்டகி ஆறு, கங்கை ஆறு மற்றும் கோசி ஆறுகளால் சூழப்பெற்றது.

முக்கிய நகரங்கள்[தொகு]

மிதிலைப் பிரதேசத்தின் முக்கிய நகரங்கள், ஜனக்பூர், பகல்பூர், முசாபர்பூர், தர்பங்கா, பூர்ணியா மற்றும் மதுபனி ஆகும்.

மக்கள்[தொகு]

மிதிலை பிரதேச மக்களில் இந்தோ ஆரிய மொழியான மைதிலி மொழி பேசும் 35 இலட்சம் இந்து மைதிலி மக்கள் உள்ளனர். [13]

மிதிலைப் பிரதேசத்தில் இந்து சமய அந்தணர்கள், இராசபுத்திரர்கள், ஜாட், காயஸ்தர்கள், பூமிகார், அஹீர், குர்மி, கோய்ரி, பனியா என பல சமூகங்களாக பிரிந்துள்ளனர்.[14]

சைனம்[தொகு]

சமண சாத்திரங்கள் கூறும் 21-வது தீர்த்தங்கரான நமிநாதர், மிதிலை பிரதேசத்தின் இச்வாகு குல மன்னர் விஜயன் – இராணி விபாராவிற்கும் மிதிலையில் பிறந்தவர் ஆவார்.[15]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective". p. 27. 11 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
 2. Radhakrishna Choudhary. "A Survey of Maithili Literature". 22 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Cultural Heritage of Mithila". p. 13. 28 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Wetlands management in North Bihar". 14 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective". 14 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
 6. Robert Needham Cust. "Linguistic and oriental essays: Written from the year 1840 to 1903 ..." p. 148. 12 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
 7. Michael Witzel (1989), Tracing the Vedic dialects in Dialectes dans les litteratures Indo-Aryennes ed. Caillat, Paris, pages 13, 17 116-124, 141-143
 8. Michael Witzel (1989), Tracing the Vedic dialects in Dialectes dans les litteratures Indo-Aryennes ed. Caillat, Paris, pages 13, 141-143
 9. Raychaudhuri Hemchandra (1972), Political History of Ancient India, Calcutta: University of Calcutta, pp.85-6
 10. "Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective". 11 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Wetlands management in North Bihar". 14 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective". 14 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
 13. James B. Minahan. "Ethnic Groups of South Asia and the Pacific: An Encyclopedia: An Encyclopedia". 21 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
 14. Makhan Jha. "Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective". pp. 33–40. 21 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
 15. Jain 2009, பக். 87-88.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

 • Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதிலை_பிரதேசம்&oldid=3224744" இருந்து மீள்விக்கப்பட்டது