கொல்கத்தா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொல்கத்தா பல்கலைக்கழகம்
কলিকাতা বিশ্ববিদ্যালয়
Logo of University of Calcutta.jpg
கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இலச்சினை
குறிக்கோளுரைகற்றலில் மேம்பாடு
வகைபொது
உருவாக்கம்24 சனவரி 1857
வேந்தர்மாயன்கோட் கேலத் நாராயணன்
மேற்கு வங்காள ஆளுநர்
துணை வேந்தர்பேரா. சுரஞ்சன் தாசு
பட்ட மாணவர்கள்100,000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்5,500
அமைவிடம்கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
வளாகம்ஊரகப் பகுதி, 153 கல்லூரிகள் இணையப்பெற்றன[1]
சேர்ப்புயுஜிசி, என்.ஏ.ஏ.சி, ஏ.ஐ.யு
இணையதளம்caluniv.ac.in

கொல்கத்தா பல்கலைக்கழகம் (University of Calcutta, அல்லது Calcutta University) (வங்காள: কলিকাতা বিশ্ববিদ্যালয়) இந்திய மாநகரம் கொல்கத்தாவில் (அப்போதைய கல்கத்தா) சனவரி 24,1857ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் தொன்மையான பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும்.தெற்கு ஆசியாவிலேயே பல்வேறு துறைகளைக் கொண்ட முதல் பல்கலைக்கழகமாக இது விளங்கியது. இதற்கு முன்னதாக பல்கலைக்கழக தரச்சான்று வழங்கப்பட்ட செராம்பூர் கல்லூரி இறையியல்|இறையியலில் மட்டுமே பட்டம் வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.[2]

பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)|பல்கலைக்கழக மானியக் குழு இந்தப் பல்கலைக்கழகத்தை "ஐந்து நட்சத்திர பல்கலைக்கழகங்களில்" ஒன்றாகவும் சீர்மைபெற வாய்ப்புள்ள மையங்களில் ஒன்றாகவும் அடையாளப்படுத்தி உள்ளது.[1][3] மாநில அரசால் நிர்வகிக்கப்படும் இந்த ஊரக பல்கலைக்கழகம் தனது ஆட்சிப்பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கி கட்டுபடுத்துகிறது. சிறந்த ஆய்வு மையமாகவும் செயல்படுகிறது. இதன் மைய வளாகம் (அசுதோஷ் சிக்சா பிராங்கன் என அழைக்கப்படுகிறது) கொல்கத்தாவின் காலேஜ் சாலையில் அமைந்துள்ளது.பிற வளாகங்கள் ராசா பசார் (ராஷ்பிகாரி சிக்சா பிராங்கன்),பாலிகஞ்ச் (தாரக்நாத் பாலித் சிக்சா பிராங்கன்), அலிப்பூர் (சகீத் குதீராம் சிக்சா பிராங்கன்)ஆகிய இடங்களிலும் அசுரா, சிந்தி என்ற புறநகர் பகுதிகளிலும் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Hubs of excellence
  2. Government of India, Ministry of Human Resource Development, Department of Higher Education [1]
  3. CU makes the highest grade

வெளியிணைப்புகள்[தொகு]