1857
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1857 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1857 MDCCCLVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1888 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2610 |
அர்மீனிய நாட்காட்டி | 1306 ԹՎ ՌՅԶ |
சீன நாட்காட்டி | 4553-4554 |
எபிரேய நாட்காட்டி | 5616-5617 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1912-1913 1779-1780 4958-4959 |
இரானிய நாட்காட்டி | 1235-1236 |
இசுலாமிய நாட்காட்டி | 1273 – 1274 |
சப்பானிய நாட்காட்டி | Ansei 4 (安政4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2107 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4190 |
1857 (MDCCCLVII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 7 - கடைசி முகலாய அரசர் பகதூர் ஷா மீது விசாரணை
- ஜனவரி 9 - கலிபோர்னியாவில் பார்க்ஃபீல்ட் என்ற இடத்தில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- மார்ச் 3 - ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் சீனா மீது போரை அறிவித்தன.
- மார்ச் 21 - ஜப்பான், டோக்கியோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 23 - எலிஷா ஓட்டிசின் முதலாவது உயர்த்தி (elevator) நியூயோர்க் நகரில் அமைக்கப்பட்டது.
- மார்ச் 25 - ஒலியை முதன் முதலில் பதிவு செய்யும் போனாட்டோகிராஃப் என்ற கருவியை பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டுபிடித்து காப்புரிமம் பெற்றார்.
- மே 1 - யாழ்ப்பாண நகரில் முதலியார் சந்தியாகுப்பிள்ளை என்பவரால் தனியார் தமிழ்ப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது.
- மே 10 - சிப்பாய்க்கலகம்: பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் தமது பிரித்தானிய அதிகாரிகளுக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தனர். மே 11 இல் டில்லியைக் கைப்பற்றினர்.
- ஜூன் 1 - ஆணல்ட் சதாசிவம்பிள்ளை உதயதாரகை இதழின் ஆசிரியராக கரோல் விஸ்வநாதபிள்ளையிடம் இருந்து பொறுப்பேற்றார்.
- ஜூலை 15 - சிப்பாய்க்கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
- ஆகஸ்ட் - கல்கத்தா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 11 - யூட்டாவில் மெடோஸ் மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஆர்கன்சஸ் குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 12 - வட கரோலினாவில் அமெரிக்கக் கப்பலொன்று மூழ்கியதில் 425 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 24 - உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணியான ஷெஃபீல்ட் காற்பந்தாட்ட அணி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- நவம்பர் - கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் அமைக்கப்பட்டது.
- டிசம்பர் 16 - இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கம் 11,000 பேரைக் கொன்றது.
- டிசம்பர் 31 - கனடாவின் தலைநகராக ஒட்டாவா நகரை எலிசபெத் மகாராணி தெரிவு செய்தார்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- பிரித்தானியாவில் நாடாளுமன்ற அனுமதி இன்றி மணமுறிவு செய்வது சட்டபூர்வமாக்கப்பட்டது.
- ஹாலிவூட் அமைக்கப்பட்டது.
- பம்பாய் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- முகலாயப் பேரரசு பிரித்தானியரால் அழிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 22 - பேடன் பவல், சாரணர் இயக்க நிறுவனர் (இ. 1941)
இறப்புகள்
[தொகு]- ஜூலை 26 - ஒராசியோ பெட்டாச்சினி, யாழ்ப்பாணம் ஆயர்