சீன நாட்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தப் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

சீன நாட்காட்டி ஓர் சூரியசந்திர நாட்காட்டியாகும்.இது சீனா தவிர பல கிழக்கு ஆசிய பண்பாடுகளில் பின்பற்றப்படுகிறது. இது சீனர்களால் கி.மு 500 ஆண்டில் சீரமைக்கப்பட்டது.[1]. கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும், கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக முறையில் பயன்படுத்தப்பட்டாலும் சீன நாட்காட்டி பரம்பரை விடுமுறை தினங்கள் சீன புத்தாண்டு (அல்லது வசந்த திருவிழா (春節), டுயான் வு பண்டிகை, மற்றும் நடு மழைக்கால பண்டிகை போன்றவற்றை குறிக்கவும், திருமண நாள்,புதுமனை புகுவிழா போன்றவற்றிற்கு சோதிடப்படி நல்லநாள் தெரிந்தெடுக்கவும் பயனாகிறது.


சீன நாட்காட்டியில் பரம்பரை நாட்காட்டி வழமையாக க்சியா(Xia)நாட்காட்டி(எளிய சீனம்: 夏历மரபுவழிச் சீனம்: 夏曆பின்யின்: xiàlì) எனக் குறிப்பிடப்படுகிறது.ஆண்டின் துவக்கம் ஆளும் மன்னரால் தீர்மானிக்கப்பட்டு வந்த நிலையில் க்சியா மன்னராட்சி காலத்தில் கூதிர்கால கதிர்த்திருப்பத்தின் பின்னர் ஏற்படும் இரண்டாவது அமாவாசை யன்று ஆண்டு துவங்கும். இவராட்சிக்குப் பின்னர் கடந்த 2000 ஆண்டுகளாக அதே துவக்கம் பின்பற்றப்படுவதால் க்சியா நாட்காட்டி என இப்பெயரே நிலைத்தது.


சீன நாட்காட்டியை "விவசாய நாட்காட்டி" (எளிய சீனம்: 农历மரபுவழிச் சீனம்: 農曆பின்யின்: nónglì) கிரெகொரியின் நாட்காட்டியை "பொது நாட்காட்டி" (எளிய சீனம்: 公历மரபுவழிச் சீனம்: 公曆பின்யின்: gōnglì) என குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் சீன நாட்காட்டியை,சந்திரனை பின்பற்றுவதால், "யின் நாட்காட்டி" (எளிய சீனம்: 阴历மரபுவழிச் சீனம்: 陰曆பின்யின்: yīnlì) எனவும் கிரெகொரியின் நாட்காட்டியை,சூரியனை "யாங்க் நாட்காட்டி" (எளிய சீனம்: 阳历மரபுவழிச் சீனம்: 陽曆பின்யின்: yánglì)எனவும் குறிப்பிடப்படுவதும் உண்டு. கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக நாட்காட்டியாக அளிவித்தப் பிறகு, அதனை புதிய நாட்காட்டி (எளிய சீனம்: 新历மரபுவழிச் சீனம்: 新曆பின்யின்: xīnlì) எனவும் சீன நாட்காட்டியை பழைய நாட்காட்டி(எளிய சீனம்: 旧历மரபுவழிச் சீனம்: 舊曆பின்யின்: jiùlì) எனவும் கூறுவதும் உண்டு.

2009ஆம் ஆண்டு சீன நாட்காட்டியில் எருதின் ஆண்டாகும் (Year of the Ox).சனவரி 26,2009 முதல் பிப்ரவரி 14,2010 வரை இவ்வாண்டு உள்ளது.

ஆண்டுகள் பன்னிரு விலங்குகள் (十二生肖 shí'èr shēngxiào, "பன்னிரு பிறப்பு சின்னங்கள்" அல்லது 十二屬相 shí'èr shǔxiàng, "பன்னிரு உடமை சின்னங்கள்") மூலம் குறிக்கப்படுகின்றன.அவை:எலி(rat), எருது(ox), புலி(tiger),முயல்(rabbit), டிராகான்(dragon), பாம்பு(snake), குதிரை(horse), ஆடு(sheep), குரங்கு(monkey),சேவல்(rooster), நாய்(dog), மற்றும் பன்றி(pig).

மேற்கோள்கள்[தொகு]

  1. Calendars, Time, & Numerology - Egyptian Roots & Mathematical Precision of Our Modern Calendar

கூடுதலாகக் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீன_நாட்காட்டி&oldid=1353994" இருந்து மீள்விக்கப்பட்டது