நடு இலையுதிர் கால திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நடு இலையுதிர் கால திருவிழா
Mid-Autumn Festival-beijing.jpg
பெய்ஜிங்கில் நடு இலையுதிர் கால திருவிழா
பிற பெயர்(கள்) நிலவுத் திருவிழா (Moon Festival (八月節))
கடைபிடிப்போர் சீனர்கள் மற்றும் வியட்நாமியர்கள்
வகை கலாச்சாரம் , மதம்
முக்கியத்துவம் அறுவடை முடிந்ததும் கொண்டாடப்படும்
நாள் சீன நாட்காட்டியின் 8 வது மாதத்தின் 15 வது நாள்
2014 இல் நாள் செப்டம்பர் 8
2015 இல் நாள் செப்டம்பர் 27


நடு இலையுதிர் கால திருவிழா (Mid-Autumn Festival, சீனம் :中秋節) சீன நாட்டின் அறுவடைத் திருவிழா ஆகும். இது சீன நாட்காட்டியின் 8 - வது மாதத்தில் 15-ஆம் நாள் முழு நிலவன்று கொண்டாடப்படுகிறது. கிரெகொரியின் நாட்காட்டியில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வரும் திருவிழா இது. சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருவிழாவின் நோக்கம்[தொகு]

  • ஒன்று கூடுதல்
  • நன்றி செலுத்துதல்
  • பிரார்த்தனை செய்தல்

தோற்றம்[தொகு]

சீனர்கள் ஷாங் வம்சம் முதலே இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். டாங் வம்சத்தின்போது இத்திருவிழா மேலும் புகழ் பெறத் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் பேரரசி டோவாகர் சிக்சி காலத்தில் சீன நாட்காட்டியின் 8 -வது மாதத்தில் 13 ஆம் நாள் முதல் 17 ஆம் நாள்வரை இவ்விழா கொண்டாடப்பட்டது.[1]

விளக்கு[தொகு]

ஹாங்காங்கில் நடு இலையுதிர் கால திருவிழா
கனடாவில் நடு இலையுதிர் கால திருவிழா

இப்பண்டிகையின் போது உயரமான கோபுரங்களில் வண்ண விளக்குகளை ஏற்றுவர். சீனர்களின் பாரம்பரியப்படி விளக்கானது கருவுறுதலின் சின்னமாகும். மேலும் விளக்கு அலங்காரத்திற்காகவும் ஏற்றப்படுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருவிழாவுக்காகவே விளக்கு ஏற்றப்படுகிறது. பண்டைய காலத்தில் விளக்கானது இயற்கைப் பொருட்களால் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டன.

கொண்டாட்டம்[தொகு]

சிறப்பு உணவு[தொகு]

நிலவு ரொட்டி (Mooncake)

நிலவு ரொட்டி (Moon cake) பிரசித்தி பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Roy, Christian (2005). Traditional festivals: a multicultural encyclopedia. Santa Barbara, Calif.: ABC-CLIO. பக். 282–286. ISBN 1576070891. 

வெளி இணைப்புகள்[தொகு]