ஆகத்து 24
(ஆகஸ்ட் 24 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஆகத்து 2018 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXVIII |
ஆகத்து 24 (August 24) கிரிகோரியன் ஆண்டின் 236 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 237 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 129 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1349 - ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- 1511 - மலாக்காவை போர்த்துக்கல் மன்னன் அல்பொன்சோ டி அல்புகேர்க் கைப்பற்றினான்.
- 1572 - புனித பார்த்தெலோமேயு தினப் படுகொலை: பிரான்சின் 9ம் சார்ல்சின் கட்டளைக்கேற்ப பிரெஞ்சுப் புரொட்டெஸ்தாந்தர்கள் படுகொலைப் படலம் ஆரம்பமாயிற்று.
- 1690 - கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.
- 1814 - பிரித்தானியப் படையினர் வாஷிங்டன், டி.சி.யை முற்றுகையிட்டு வெள்ளை மாளிகை உட்படப் பல கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர்.
- 1821 - மெக்சிகோவின் ஸ்பெயினுடனான விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
- 1875 - கப்டன் மத்தியூ வெப் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதலாவது மனிதர் ஆனார்.
- 1912 - அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
- 1929 - பாலஸ்தீனத்தில் நிகழ்ந்த கலவரங்களில் நூறுக்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- 1931 - பிரான்சும் சோவியத் ஒன்றியமும் தமக்கிடையே போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
- 1936 - ஆஸ்திரேலிய அண்டார்க்ட்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது.
- 1939 - நாசி-சோவியத் உடன்பாடு ஹிட்லருக்கும் ஜோசப் ஸ்டாலினுக்கும் இடையில் எட்டப்பட்டது.
- 1949 - நேட்டோ ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
- 1954 - அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
- 1954 - பிரேசில் அதிபர் கெட்டூலியோ வார்காஸ் தற்கொலை செய்து கொண்டார்.
- 1968 - பிரான்ஸ் தனது முதலாவது ஐதரசன் குண்டை வெடிக்க வைத்தது.
- 1989 - வொயேஜர் 2 நெப்டியூனைத் தாண்டியது.
- 1991 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பசோவ் விலகினார்.
- 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரேன் பிரிந்தது.
- 1992 - மக்கள் சீனக் குடியரசுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
- 1995 - விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது.
- 2004 - மாஸ்கோவில் இரண்டு விமானங்கள் தற்கொலைக் குண்டுதாரியினால் தகர்க்கப்பட்டதில் 89 பயணிகள் கொல்லப்பட்டனர்.
- 2006 - புளூட்டோ ஒரு கிரகம் அல்லவென அறிவிக்கப்பட்டது.
- 2006 - ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பான UNOPS அலுவலர் ஒருவர் அம்பாறை திருக்கோவில் பகுதியில் அலுவலகத்திற்கு அருகில் வைத்துச் சுட்டுக்கொல்லப் பட்டார். சங்கதி
- 2008 - சீனாவில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தன.
பிறப்புகள்[தொகு]
- 1759 – வில்லியம் வில்பர்ஃபோர்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி, கொடையாளி (இ. 1883]])
- 1863 – தி. த. கனகசுந்தரம்பிள்ளை, ஈழத்து தமிழ் இலக்கிய, பதிப்பாளர், தமிழறிஞர் (இ. 1922)
- 1888 – பி. ஜி. கெர், பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (இ. 1957)
- 1899 – ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ், அர்செந்தீன-சுவிசு எழுத்தாளர் (இ. 1986)
- 1906 – நாரண துரைக்கண்ணன், எழுத்தாளர், பத்திரிகையாளர்
- 1908 – சிவராம் ராஜகுரு, இந்திய செயற்பாட்டாளர் (இ. 1931)
- 1920 – ரிச்சர்ட் கியூ. ட்விஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 2005)
- 1926 – எஸ். அகஸ்தியர், ஈழத்து எழுத்தாளர் (இ. 1995)
- 1927 – அஞ்சலிதேவி, தென்னிந்திய நடிகை, தயாரிப்பாளர் (இ. 2014)
- 1929 – யாசிர் அரஃபாத், பாலத்தீனத் தலைவர் (இ. 2004)
- 1934 – பி. எஸ். வெங்கடேசன், மலேசிய எழுத்தாளர்
- 1941 – இ. பத்மநாப ஐயர், ஈழத்து இலக்கிய ஆர்வலர்
- 1945 – வின்சு மெக்மான், அமெரிக்க மற்போர் கலைஞர்
- 1947 – பவுலோ கோய்லோ, பிரேசில் எழுத்தாளர்
- 1963 – தா. பாலகணேசன், ஈழத்து எழுத்தாளர்
- 1981 – சாத் மைக்கேல் முர்ரே, அமெரிக்க நடிகர்
- 1986 – சாந்தனு பாக்யராஜ், தமிழகத் திரைப்பட நடிகர்
- 1988 – ரூபர்ட் கிரின்ட், ஆங்கிலேய நடிகர்
இறப்புகள்[தொகு]
- 1617 – லீமா நகர ரோஸ், அமெரிக்காக்களின் முதல் புனிதர் (பி. 1586)
- 1832 – சாடி கார்னோ, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1796)
- 1861 – பியெரி பெர்தியர், பிரான்சியப் புவியியலாளர் (பி. 1782]])
- 1961 – வேதரத்தினம் பிள்ளை, இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1897]])
- 1972 – வே. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (பி. 1888)
- 1982 – ஜியார்ஜியோ அபெட்டி, இத்தாலிய சூரிய வானியலாளர் (பி. 1882)
- 1990 – அரோல்டு மாசுர்சுகி, அமெரிக்கப் புவியியலாளர், வானியலாளர் (பி. 1922)
- 1995 – சுந்தரம் கரிவரதன், இந்தியாவின் தானுந்து விளையாட்டு வீரர் (பி. 1954)
- 2003 – வில்பிரட் தீசிசர், எத்தியோப்பிய-ஆங்கிலேய எழுத்தாளர், நாடுகாண் பயணி (பி. 1910)
- 2014 – ரிச்சர்ட் ஆட்டன்பரோ, ஆங்கிலேய நடிகர், இயக்குநர் (பி. 1923)
சிறப்பு நாள்[தொகு]
- விடுதலை நாள் (உக்ரைன், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)