எஸ். அகஸ்தியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். அகஸ்தியர்
Akasthiyar.jpg
பிறப்புஆகத்து 24, 1926(1926-08-24)
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
இறப்புதிசம்பர் 8, 1995(1995-12-08) (அகவை 69)
பிரான்சு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
பெற்றோர்அன்னம்மாள்
சவரிமுத்து
பிள்ளைகள்நவஜோதி
நவஜெனனி
நவஜீவா

எஸ். அகஸ்தியர் (ஆகத்து 24, 1926 - டிசம்பர் 8, 1995) ஓர் ஈழத்து எழுத்தாளர். சிறுகதைகள், குறும் புதினங்கள், புதினங்கள், மேடை நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் எனப் பல கோணங்களிலும் எழுதியவர். 1986 ஆம் ஆண்டில் புலம் பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

அகஸ்தியர் யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை என்ற கிராமத்தில் சவரிமுத்து, அன்னம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். தனது 20வது அகவையில் கவிதை மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமானார். சுதந்திரனில் எழுதத் தொடங்கியவ்ர் தினகரன், வீரகேசரி, தினபதி, ஈழநாடு, மல்லிகை, சுடர் ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். எழுத்து, தீபம், கண்ணதாசன், கலைமகள், தாமரை போன்ற தமிழக இதழ்களும் இவரது சிறுகதைகளைப் பிரசுரித்தன. தாமரை இதழ் 1970 ஆம் ஆண்டில் இவருடைய படத்தை அட்டையில் பிரசுரித்தது.

வெளியிட்ட நூல்கள்[தொகு]

 • இருளினுள்ளே (குறும் புதினத் தொகுதி, 1968)
 • திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் (புதினம், 1976)
 • மண்ணில் தெரியுதொரு தோற்றம் (புதினம், 1978)
 • கோபுரங்கள் சரிகின்றன (குறும் புதினம், 1984)
 • எரி நெருப்பில் இடை பாதை இல்லை (புதினம், 1992)
 • நரகத்திலிருந்து (குறும் புதினத்தொகுதி, 1994)
 • பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு
 • மகாகனம் பொருந்திய
 • எவளுக்கும் தாயாக
 • அகஸ்தியர் பதிவுகள்
 • கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்
 • அகஸ்தியர் கதைகள்

உசாத்துணை[தொகு]

 • துயர் பகிர்தல், எஸ். அகஸ்தியர், வீரகேசரி, பெப்ரவரி 16, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._அகஸ்தியர்&oldid=3117700" இருந்து மீள்விக்கப்பட்டது