வின்சு மெக்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வின்செண்ட் கென்னடி மெக்மான் (Vincent Kennedy McMahon) (பிறப்பு; 24, ஆகத்து 1945)[1], என்பவர் ஓர் அமெரிக்க வல்லுனர் மல்லாடல் நிருவன விளம்பரதாரர், முன்னாள் வர்ணனையாளர், அறிவிப்பாளர், படத் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் மல்யுத்த வீரர் ஆவார். இவர் தந்தையிடமிருந்து 1980 இல்  நிருவனத்தின் பொறுப்பை ஏற்றதிலிருந்து, மெக்மான் எப்பொழுதும் டபிள்யு டபிள்யு ஈ-க்கு வர்த்தக ரீதியாகவும், அதற்கு பின்னால் இருந்தும் செயல்பட்டார். தற்பொழுது இவர் டபிள்யு டபிள்யு ஈ-க்கு முதன்மை உரிமையாளர், தலைவர், மற்றும் விளம்பரதார சி இ ஒ வாக உள்ளார்.

மக்மஹோன் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் ஒரு அறிவிப்பாளராகவும் தொழில்முறை மல்யுத்த வீரராகவும் பணியாற்றியுள்ளார் Mr. திரு. மக்மஹோன் என்ற மேடைப் பெயரால் பங்கேற்றதன் மூலம் இவர் பரவலாக அரியப்படுகிறார். இரண்டு முறை உலக சாம்பியனான இவர், 1999 ஆம் ஆண்டில் டபிள்யூ டபிள்யூ எஃப் வாகையாளர் பட்டத்தினையும், 2007 இல் ஈ சி டபிள்யூ உலக வாகையாளர் பட்டத்தினையும் வென்றார் . இவர் 1999 ராயல் ரம்பிள் வெற்றியாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். இவர் 1999 முதல் 2000 வரை பல டபிள்யுடபிள்யுஎஃப் / டபிள்யுடபிள்யு கட்டண நிகழ்வுகள் மற்றும் ரெஸ்டில்மேனியா 2000 இன் பலமுக்கிய நிகழ்வில் டுவைன் ஜான்சனுக்கு எதிராக பங்கேற்றார். ஒற்றையர் போட்டியில், முன்னாள் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் வாகையாளர் பட்டங்களை பெற்ற ரிக் பிளேயர், தி அண்டர்டேக்கர், ஷான் மைக்கேல்ஸ் மற்றும் டிரிபிள் எச் ஆகியோருக்கு எதிராக இவர் வெற்றிகளைப் பெற்றார்.

இதற்கு முன்னர், அவர் 1997 வரை ஒளிபரப்பு வர்ணனையாளராகவும் பின்னர் நிறுவனத்தின் தலைமை ஒளிபரப்பாளராகவும் இருந்தார்.

மூன்றாம் தலைமுறை மல்யுத்த ஊக்குவிப்பாளராக இவர் உள்ளார். அவரது தாத்தா ஜெஸ் மற்றும் தந்தை வின்சென்ட்டைத் தொடர்ந்து இவர் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மக்மஹோன் முன்னாள் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் முன்னாள் அமெரிக்க SBA நிர்வாகியுமான லிண்டா மக்மஹோனை மணந்தார், இவர்களுக்கு மகன் ஷேன் மற்றும் மகள் ஸ்டீபனி ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர் . இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் நிர்வாகியும் , மல்யுத்த வீரர் பால் "டிரிபிள் எச்" லெவ்ஸ்குவின் மாமனார் ஆவார். இவருக்கு ஆறு பேரக் குழந்தைகளைக் உள்ளனர்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

வின்சென்ட் கென்னடி மக்மஹோன் ஆகஸ்ட் 24, 1945 அன்று வட கரோலினாவின் பைன்ஹர்ஸ்டில் பிறந்தார்,[2] விக்டோரியா (நீ அஸ்கெவ்) மற்றும் வின்சென்ட் ஜேம்ஸ் மக்மஹோன் ஆகியோரின் இளைய மகன் ஆவார். மக்மஹோன் ஒரு குழந்தையாக இருந்தபோது அவரது தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறி, தனது மூத்த மகன் ரோட்டை தன்னுடன் அழைத்துச் சென்றார், எனவே பன்னிரண்டு வயது வரை மக்மஹோன் அவரைச் சந்திக்கவில்லை.[3] மக்மஹோனின் தந்தைவழி தாத்தா ரோட்ரிக் ஜேம்ஸ் "ஜெஸ்" மக்மஹோன் என்பவர் விளம்பரதாரராக இருந்தார். [4] அவரது பெற்றோர் கவுண்டி கால்வேயில் இருந்து ஐரிஷ் குடியேறியவர்கள்.[5][6] அவரது தந்தைவழி பாட்டி ரோஸ் டேவிஸும் ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர்.[6] மேலும் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை தனது தாயுடனும், மாற்றாந் தந்தைகளிடம் இவர் இருந்தார். தனது மாற்றாந் தந்தை தனது தாயை அடிக்கமுயன்ற போது தன்னை தாக்கினார் என்று அவர் நேர்காணலில் கூறினார். மேலும் அவர், "நான் அவரைக் கொல்வதற்கு முன்பு அவர் இறந்தது துரதிர்ஷ்டவசமானது. எனக் கூறினார் " [7] அவர் வர்ஜீனியாவின் வெய்னெஸ்போரோவில் உள்ள ஃபிஷ்பர்ன் ராணுவ பள்ளியில் 1964 இல் பட்டம் பெற்றார்.[8] அவரது ஆரம்ப வாழ்க்கையில், அவர் டிஸ்லெக்ஸியாவையும் நோயில் இருந்து மீண்டு வந்துள்ளார்.[9][10]

சான்றுகள்[தொகு]

  1. "IGN: Vince McMahon Biography". IGN.com. நவம்பர் 16, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 14, 2007 அன்று பார்க்கப்பட்டது.
  2. "IGN: Vince McMahon Biography". IGN.com. November 16, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 14, 2007 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Vince McMahon Biography". SLAM! Sports.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Solomon 2006.
  5. "The fighting Irish and the WWE". http://www.irishexaminer.com/lifestyle/features/the-fighting-irish-and-the-wwe-243608.html. 
  6. 6.0 6.1 National Wrestling Alliance: The Untold Story of the Monopoly That Strangled Professional Wrestling. https://www.amazon.com/National-Wrestling-Alliance-Monopoly-Strangled/dp/1550227416. 
  7. "Playboy Interview: Vince McMahon". Playboy. February 2001. p. 60.
  8. "Playboy Interview: Vince McMahon". Playboy. February 2001. p. 61.
  9. "Dyslexia TV Alumni". Dyslexia. செப்டம்பர் 24, 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 15, 2008 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Famous Dyslexics". Dyslexia Mentor. September 21, 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 15, 2008 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்சு_மெக்மான்&oldid=3571924" இருந்து மீள்விக்கப்பட்டது