ஷான் மைக்கேல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்கேல் ஷான் இக்கன்பாட்டம் (Michael Shawn Hickenbottom (பிறப்பு: சூலை  22, 1965) ஷான் மைக்கேல்சு எனும் தனது மேடைப் பெயரால் அறியப்படும் இவர் ஓர் அமெரிக்கத் தொழில்முறை மற்போர் வீரர், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனர் மற்றும் நடிகர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மற்போர் வீரர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.[1][2] ஹார்ட் பிரேக் கிட் மற்றும் மிஸ்டர் ரெசில்மேனியா  போன்ற புனைப் பெயர்களாலும் அறியப்படுகிறார்.[3][4]

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு முன்பாக இவர் உலக மற்போர் கூட்டமைப்பில் 1988 முதல் போட்டியிட்டு வந்தார். அப்போது காயம் ஏற்பட்டதனால் 1998 ஆம் ஆண்டில் தனது ஓய்வினை அறிவித்தார். பின் இரண்டு ஆண்டுகள் மற்போர் விளையாடமல் இருந்தார். 2000 ஆம் ஆண்டில் டெக்சாஸ் மற்போர் அகாதமியினைத் துவங்கினார். 2002 ஆம் ஆண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து 2010 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 2016 ஆம் ஆண்டில் பயிற்சியாளராக ஒப்பந்தம் ஆனார். மீண்டும் 2018 ஆம் ஆண்டில் போட்டியிட்டார்.

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் 1989 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில்  பல முக்கிய நிகழ்வுகளில் இவர் தலையங்கச் செய்தியாக இடம்பெற்றுள்ளார். மேலும் இவர் டி-ஜெனரேசன் எக்ஸ் எனும் குழுவின் துணை நிறுவனரும் முதன்மை தலைவரும் ஆவார். அமெரிக்க மற்போர் சங்கத்திலும் இவர் போட்டியிட்டுள்ளார். அங்கு 1985 ஆம் ஆண்டில் மார்ட்டி ஜன்னட்டியுடன் இணைந்து த மிட்நைட் ராக்கர்ஸ்  எனும் குழுவினைத் தோற்றுவித்தார். இவருடன் இணைந்து இருமுறை அமெரிக்க மற்போர் கூட்டு வாகையாளர் பட்டத்தினை இருமுறை வென்றுள்ளார். இந்த இணை உலக மற்போர் நிறுவனத்திலும் இணைந்தே த ராக்கர்ஸ் எனும் பெயரில் விளையாடினர்.[5] இருந்தபோதிலும் சனவரி, 1992 இல் இந்த இணை பிரிந்தது. அதன்பின் ஒரு முறை கண்டங்களுக்கிடையேயான வாகையாளர் பட்டத்தினைப் பெற்றார்.

நான்கு முறை உலக வாகையாளர் பட்டத்தினையும், மூன்று முறை டபிள்யூ டபிள்யூ எஃப் வாகையாளர் பட்டத்தினையும் பெற்றுள்ளார். ஒரு முறை உலக மிகு கன வாகையாளர் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இரு முறை ராயல் ரம்பிள் போட்டிகளில் வாகையாளர் ஆனார். அதில் ஒரு போட்டியில் முதல் நபராக வந்து இறுதி வரை களத்தில் இருந்து வெற்றி பெற்றார். முதலாக வந்து இந்தவகையான போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே வீரர் இவர் ஆவார்.

கிராண்ட் சிலாம் வாகையாளர் போட்டிக்கான முதல் போட்டியில் வெற்றி பெற்று அதன் முதல் வாகையாளர் ஆனார். இரண்டு முறை ஹால் ஆஃப் ஃபேமாகத்  தேர்வானார். அதில் 2011 ஆம் ஆண்டில் தனி நபர் விளையாட்டிற்காகவும் 2019 ஆம் ஆண்டில் டி-எனரேசன் எக்ஸ்  எனும் அங்கத்தினராகவும் பெற்றார். ஏப்ரல் 23, 2007 இல் ரா நிகழ்ச்சியில் ஜான் சீனாவுடனான போட்டியானது அந்த ஆண்டின் சிறந்த போட்டியாக பார்வையாளர்களால் தேர்வு செய்யப்பட்டது.[6]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சான் மைக்கேல்ஸ் சூலை 22, 1965 இல் அரிசோனாவில் உள்ள சந்த்லரில் பிறந்தார்[7][8] இவர் இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நான்கு குழந்தைகளில் ரேண்டி, இசுக்காட், ஷரி ஆகியோருக்கு இளையோர் ஆவார்.[7] ஹார்ட் பிரேக் கிட் மற்றும் மிஸ்டர் ரெசில்மேனியா.

திரைப்படம்[தொகு]

2017 ஆம் ஆண்டில் த ரிசரக்சன் ஆஃப் கெவின் ஸ்டோன் எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் டக் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டில் பியூர் கண்ட்ரி :பியூர் ஹார்ட் எனும் திரைப்படத்தில் நடித்தார்.

சான்றுகள்[தொகு]

  1. "Baltimore Sun - We are currently unavailable in your region". www.tribpub.com.
  2. "WWE news, rumors: Shawn Michaels open to one more match, U.K. Tournament details". CBSSports.com.
  3. "Is Shawn Michaels WWE's real 'Mr. WrestleMania?' Ranking the 15 best". CBSSports.com.
  4. "Kevin Owens: Shawn Michaels inspired me to become a wrestler". Sky Sports.
  5. (Michaels & Feigenbaum 2005, p. 133)
  6. "The 50 greatest matches in Raw history re-ranked".
  7. 7.0 7.1 (Michaels & Feigenbaum 2005, pp. 12–13)
  8. Milner, John; Jason Clevett (March 12, 2005). "Slam! Sports biography". Slam! Sports. Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் July 10, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷான்_மைக்கேல்ஸ்&oldid=2904666" இலிருந்து மீள்விக்கப்பட்டது