உள்ளடக்கத்துக்குச் செல்

கேத்லின் கென்யான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேத்லின் கென்யான்
ஒரு அகழாய்வுப் பணியில் கென்யான், 1977
பிறப்புகேத்லின் மேரி கென்யான்
(1906-01-05)5 சனவரி 1906
ரீஜன்ஸ் பார்க், லண்டன், இங்கிலாந்து
இறப்பு24 ஆகத்து 1978(1978-08-24) (அகவை 72)
ரெக்ஸ்ஹாம், வேல்ஸ், பிரித்தானியா
தேசியம்பிரித்தானியர்
அறியப்படுவதுஜெரிக்கோ அகழாய்வு
ஜுவரி சுவர் அகழாய்வு
வீலர் கென்யான் முறை
கல்விப் பின்னணி
கல்விபுனித பால் மகளிர் பள்ளி
கல்வி நிலையம்சோமர்வில்லி கல்லூரி, ஆக்சுபோர்டு
கல்விப் பணி
துறைதொல்லியல் ஆய்வுத்துறை
Sub-disciplineபுதிய கற்காலம்
பண்டைய அண்மை கிழக்கு
தொல்லியல்
கல்வி நிலையங்கள்தொல்லியல் கல்விக்கழகம்
புனித இயூசு கல்லூரி, ஆக்சுபோர்டு

கேத்லின் கென்யான் (Kathleen Kenyon, 5 சனவரி 1906 - 24 ஆகத்து 1978), ஒரு முன்னணி பிரித்தானியக் கற்காலத்தைப் பற்றிய ஆராயும் தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1952 முதல் -1958 வரை ஜெரிக்கோ என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம் நன்கு அறியப்பட்டவர், மேலும் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக விளங்கினார்.[1] இவர் 1962 முதல் 1973 வரை இலண்டன், ஆக்சுபோர்டில் உள்ள அக்சு கல்லூரியின் முதல்வராகவும் இருந்துள்ளார்.

வரலாறு

[தொகு]

1906 ஆம் ஆண்டில் கேத்லீன் கென்யான் பிரடெரிக் கென்யான் என்பாருக்கு மூத்த மகளாக இங்கிலாந்தின் இலண்டனில் பிறந்தார். இவரது தந்தை விவிலிய விவிலியத்தில் சிறந்த அறிஞர் ஆவார். மேலும் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவரது தாத்தா ஜான் ராபர்ட் கென்யான் "ஆல் சோல்ஸ் கல்லூரி"யில் பாதுகாவலராகவும் சிறந்த வழக்கறிஞராகவும் விளங்கினார். இவரது கொள்ளுப் பாட்டனார் லாயிட் கென்யான் அரசியல்வாதியாகவும் வழக்கறிஞராகவும் இருந்துள்ளார்.[2] லண்டனின் ப்ளூம்ஸ்பரி என்ற இடத்தில் அமைந்துள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு வீட்டில், அவரது தாயார் அமி கென்யன் மற்றும் சகோதரி நோரா கென்யானுடன் வளர்ந்தார். முரட்டுத்தனமான மற்றும் பிடிவாதமான குணங்களை கொண்ட இவர் சிறுவயதில் மீன்பிடிப்பது, மரங்கள் ஏறுவது போன்ற பலவிதமான விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார்

இவரும் இவரது சகோதரியும் நன்கு படித்தவராக திகழ வேண்டுமென்பதற்காக பரந்தபட்ட வாசிப்பு மற்றும் சுதந்திரமாக படிப்பதற்கு இவரது தந்தை கேத்லீன் நன்கு ஊக்கப்படுத்தினார். பிரித்தானிய மியூசியத்தில் தனது தந்தையின் நிலைப்பாடு தனக்கு குறிப்பாக, கல்விக்கு உதவியாக இருந்தது என்று கென்யான் பின்னாட்களில் குறிப்பிடுகிறார். வரலாற்றில் சிறந்து விளங்கிய காத்லீன் பள்ளியில் பல விருதுகளை வென்றுள்ளார். செயிண்ட் பால் மகளிர் பள்ளியில் படிப்புதவி பெற்ற முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். ஆக்சுபோர்டில் படிக்கும்போது கென்யான் பல்கலைக் கழகங்களுக்கிடையே நடைபெற்ற வளைதடிப் பந்தாட்ட விளையாட்டில் வெற்றியினை ஈட்டு தந்துள்ளார். 1929 இல் பட்டம் பெற்ற இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக தொல்பொருள் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார். மேலும் தொல்லியல் துறையில் தனது பணியினைத் தொடங்கினார். ஐரோப்பா முழுவதும் பல முக்கிய தளங்களில் பணிபுரிந்திருந்தாலும் 1950 களில் எரிக்கோவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளே இவரை இவரது துறையில் முன்னணி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக பேசப்பட்டது.[3] கென்யான் 1962 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு, செயின்ட் ஊக்சு கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இவர் 1973 ல் ஓய்வு பெற்றார். மேலும் கென்யான் திருமணம் செய்து கொள்ளவில்லை.[4] 1974 ஆம் ஆண்டு முதல்,செஸ்டர் தொல்லியல் சங்கத்தின் கௌரவ துணைத் தலைவர் ஆக நியமனம் செய்யப்பட்டார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Davis, Miram. C. (2008), Digging Up the Holy Land, 11.
  2. "Person Page". thepeerage.com.
  3. https://www.britannica.com/biography/Kathleen-Kenyon
  4. name=DavisBroshi
  5. Chester Archaeological Society (1978), "Obituary: Dame Kathleen Kenyon", Journal of the Chester Archaeological Society, 61: 96
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்லின்_கென்யான்&oldid=3924891" இலிருந்து மீள்விக்கப்பட்டது