ஆக்சுபோர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராட்கிளிஃப் கேமரா ஆக்சுபோர்டிலுள்ள புகழ்பெற்ற கட்டிடமாகும்.

ஆக்சுபோர்டு (Oxford) இங்கிலாந்தில் தேம்சு ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓர் மாநகரம் ஆகும். மிகவும் தொன்மையான இந்நகரத்தில் உள்ள சில கட்டிடங்கள் 12ஆம் நூற்றாண்டிற்கும் முந்தியவையாம். இங்கு அமைந்துள்ள ஆங்கிலம் பேசும் உலகத்திலேயே மிகவும் பழமையான ஆக்சுபோர்டு பல்கலைகழகத்தினால் ஆக்சுபோர்டு அறியப்படுகிறது.

இங்குள்ள மக்கள்தொகை 165,000 ஆகும். தேம்சு ஆறும் செர்வால் ஆறும் இந்நகரத்தினூடே செல்கின்றன. நகர் மையத்திற்கு தெற்கில் இவ்விரு ஆறுகளும் இணைகின்றன. பல்கலைக்கழகத்தை தவிர இங்குள்ள பல கட்டிடங்கள் அவற்றின் கட்டிட வடிவமைப்பிற்காக புகழ் பெற்றவை. இராட்கிளிஃப் கேமரா கட்டிடம் அத்தைகைய ஒன்றாகும். இங்குள்ள பல அருங்காட்சியகங்களும் மற்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சுபோர்டு&oldid=3232636" இருந்து மீள்விக்கப்பட்டது