பியெரி பெர்தியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியெரி பெர்தியர்
பியெரி பெர்தியர்
பிறப்புஜூலை 3, 1782
இறப்புஆகஸ்ட் 24, 1861
தேசியம்பிரான்சு
துறைபுவியியல்
பணியிடங்கள்École des Mines
கல்வி கற்ற இடங்கள்École Polytechnique
அறியப்படுவதுபாக்சைட்

பியெரி பெர்தியர் ( Pierre Berthier: ஜூலை 3, 1782- ஆகஸ்ட் 24, 1861) பிரான்சு நாட்டுப் புவியியலாளர் மற்றும் சுரங்கப்பொறியாளர். பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள லெஸ்-பாக்ஸ்-டி-புரொவென்சி எனும் கிராமத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது அங்கு கிடைக்கப்பெற்ற ஒரு கனிமத்தைக் கண்டறிந்து, அதற்கு அவ்வூரின் பெயரான பாக்சைட் (Bauxite) பெயரிட்டார். இதிலுள்ள உலோகம் அலுமினியம் எனக் கண்டறிந்து அதனைப் பிரித்தெடுத்தார்.[1] மேலும் இவர் பெர்தியரைட் என இவர் பெயரால் அழைக்கப்படும் கனிமத்தையும் கண்டறிந்தார். பெர்தியர் பிரான்சு அறிவியல் கழகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்சு நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெர்தியருக்கு வழங்கப்பட்டது

மேற்கோள்[தொகு]

  1. ஆர். வேங்கடராமன்,முழுமை அறிவியல் உலகம்', பக். 3607
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியெரி_பெர்தியர்&oldid=2795553" இலிருந்து மீள்விக்கப்பட்டது