நெதர்லாந்தின் முதலாம் வில்லியம்
Appearance
முதலாம் வில்லியம் | |
---|---|
1818–19 ல் வில்லியம் | |
நெதர்லாந்து அரசர் லக்ஸம்பர்க் பெருங்கோமான் | |
ஆட்சிக்காலம் | 16 மார்ச் 1815 – 7 அக்டோபர் 1840 |
பதவியேற்பு | 30 மார்ச் 1814 |
பின்னையவர் | வில்லியம் II |
ஆரஞ்சு நஸ்ஸாவ் புல்டா இளவரசர் | |
ஆட்சிக்காலம் | 25 பிப்ரவரி 1803 – 27 அக்டோபர் 1806 |
ஆரஞ்சு நஸ்ஸாவ் இளவரசர் | |
முதல் ஆட்சி | 9 ஏப்ரல் 1806 – 27 அக்டோபர் 1806 |
முன்னையவர் | வில்லியம் V |
2வது ஆட்சி | 20 நவம்பர் 1813 – 16 மார்ச் 1815 |
லிம்பர்க் கோமான் | |
ஆட்சிக்காலம் | 5 செப்டம்பர் 1839 – 7 அக்டோபர் 1840 |
முன்னையவர் | பிரானிக்ஸ் I |
பின்னையவர் | வில்லியம் II |
பிறப்பு | டென் ஹாக், இடச்சுக் குடியரசு | 24 ஆகத்து 1772
இறப்பு | 12 திசம்பர் 1843 பெர்லின், புருசிய இராச்சியம் | (அகவை 71)
புதைத்த இடம் | |
துணைவர் | வில்ஹெல்மின் ஹென்றிட்டா டி'ஒல்டிரிமொன்ட் |
குழந்தைகளின் பெயர்கள் | வில்லியம் II இளவரசர் பிரடரிக் இளவரசி பவுலின் இளவரசி மரியானி |
மரபு | ஆரஞ்சு நஸ்ஸாவ் |
தந்தை | ஆரஞ்சு இளவரசர் வில்லியம் V |
தாய் | பிரஸ்யா இளவரசி வில்ஹெமின் |
மதம் | இடச்சு சீர்திருத்தத் திருச்சபை |
முதலாம் வில்லியம் (William I, இடச்சு: Willem Frederik; 24 ஆகஸ்ட் 1772 – 12 டிசம்பர் 1843) நெதர்லாந்து நாட்டின் முதல் அரசர் ஆவார். இவரே முதல் லக்ஸம்பர்க் பெருங்கோமகனும் ஆவார்.[1][2]
நெதர்லாந்து நாட்டின் முதலாம் வில்லியம் 1813 ஆம் ஆண்டு ஐக்கிய நெதர்லாந்து நாட்டை ஏற்படுத்தினார். இவரே நெதர்லாந்து நாட்டை தன் முடியாட்சியின் கீழ் கொண்டுவந்தார். மேலும் மார்ச்சு 16, 1815 ஆம் ஆண்டு லக்ஸம்பர்கின் கோமகன் ஆனார். அதே ஆண்டு ஜூன் 9 ஆம் நாள் முதலாம் வில்லியம் லக்ஸம்பர்க்கின் முதல் பெருங்கோமகன் ஆனார். மேலும் 1839 ஆம் ஆண்டில் லிம்பர்க்கின் கோமகனானார். 1840 ஆம் ஆண்டில் தன்னை அரசர் வில்லியம் பிரடெரிக் என அழைத்துக்கொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bas, François de. Prins Frederik Der Nederlanden en Zijn Tijd, vol. 1. H. A. M. Roelants, 1887. பார்க்கப்பட்ட நாள் 31 March 2013.
- ↑ Schama, Simon (1992). Patriots and Liberators. Revolution in the Netherlands 1780-1813. NewYork: Vintage Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-72949-6.