அரையாப்பு பிளேக்கு
அரையாப்பு பிளேக் | |
---|---|
![]() | |
அரையாப்பு பிளேக்கினால் பாதிக்கப்பட்ட நபரின் மேல்தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள அரையாப்பு. பிளேக் நோயாளிகளுக்கு வீங்கிய நிணநீர்க்கணு (கட்டிகள்) பெரும்பாலும் கழுத்து, கையக்குள் மற்றும் கவட்டை (இடுக்கு) பகுதிகளில் ஏற்படுகின்றன. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | infectiology |
ஐ.சி.டி.-10 | A20.0 |
ஐ.சி.டி.-9 | 020.0 |
நோய்களின் தரவுத்தளம் | 14226 |
MedlinePlus | 000596 |
அரையாப்பு பிளேக் (Bubonic plague) விலங்குவழி தொற்று நோயாகும். சிறிய கொறிணிகளில் வாழும் தெள்ளு (பூச்சி)கள் மூலமாக இது பரவுகிறது. எர்சினியா பெசுட்டிசு என்ற கோலுயிரி ஏற்படுத்தும் மூன்று வகை பிளேக் நோய்களில் இதுவும் ஒன்றாகும். சிகிட்சை மேற்கொள்ளப்படாவிட்டால் அரையாப்பு பிளேக் பாதிக்கப்பட்ட மனிதர்களில் மூன்றில் இருவரை நான்கு நாட்களுக்குள் கொல்கிறது.
ஆங்கில கலைச்சொல்லான புபோனிக் பிளேக் என்பது "கவட்டை" என்று பொருள்படும் கிரேக்க மொழி சொல்லான βουβών இலிருந்து உருவாகியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் நிணநீர்க்கணுகள் வீங்குகின்றன. இந்த கட்டிகள் குறிப்பாக கையக்குள், கவட்டை போன்ற இடுக்குகளில் தோன்றுகின்றன. அரையாப்பு பிளேக் முன்பு பிளேக் நோயுடன் ஒன்றாக கருதப்பட்டது; மற்ற பிளேக் வகைகள் குறித்து அறிந்த பிறகு இது குறிப்பாக தோல் வழியே உட்பகும் தொற்றைக் குறிக்கிறது; உடலினுள் நிணநீர் பிணையம் வழியாக பரவுகின்ற இந்நோய் தெள்ளுப்பூச்சிகள் மூலமாக ஏற்படுகின்றன.
ஐரோப்பாவின் நடுக் காலத்தில் பல்லாயிரக் கணக்கான மனிதர்களைக் கொன்ற கறுப்புச் சாவுக்கு அரையாப்பு பிளேக் தான் காரணம் என நம்பப்படுகின்றது.[1]
இருமல், காய்ச்சல், மற்றும் தோலில் கருப்பு புள்ளிகள் இந்த நோயின் உணர்குறிகள் ஆகும்.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Walker, Cameron (10 March, 2004). "Bubonic Plague Traced to Ancient Egypt". National Geographic News. பார்த்த நாள் 2 April, 2009.