2020
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2020 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2020 MMXX |
திருவள்ளுவர் ஆண்டு | 2051 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2773 |
அர்மீனிய நாட்காட்டி | 1469 ԹՎ ՌՆԿԹ |
சீன நாட்காட்டி | 4716-4717 |
எபிரேய நாட்காட்டி | 5779-5780 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2075-2076 1942-1943 5121-5122 |
இரானிய நாட்காட்டி | 1398-1399 |
இசுலாமிய நாட்காட்டி | 1441 – 1442 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 32 (平成32年) |
வட கொரிய நாட்காட்டி | 109 |
ரூனிக் நாட்காட்டி | 2270 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4353 |
2020 ஆம் ஆண்டு (MMXX) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு நெட்டாண்டாகும். இது கி.பி. 2020ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 20ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 20ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் இது 2020களின் கடைசி ஆண்டாகவும் இருக்கும்.
நிகழ்வுகள்[தொகு]
- திசம்பர் 28 - குரோவாசியாவின் பெத்திரீனியா நகரை நிலநடுக்கம் தாக்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்[தொகு]
நாள் தெரியாதவை[தொகு]
- சப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்சா) ஆனது மனிதர்களைத் தொடர்ந்து எந்திர மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
- 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் – நடத்தும் நகரமானது 2013இன் இடையில் அறிவிக்கப்படும்.
- ஜெர்மனியின் கடைசி அணுக்கரு உலை தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும்.
- பல வளர்ந்து வரும் நாடுகள் தங்களை 2020க்குள் வளரும் நாடுகளாக நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளன,
- முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் உறுதிமொழியின்படி இந்தியா வளர்ந்த நாடாகும்.
- முன்னாள் பிரதமர் பாட்ரிக் மேனிங்கின் உறுதிமொழியின் படி டிரினிடாட் & டொபாகோ வளர்ந்த நாடாகும்.
- முன்னாள் பிரதமர் மகாத்திர் முகமது முன்மொழிந்தத் திட்டமான வாவசன் 2020இன் படி மலேசியா வளர்ந்த நாடாகும்.
- முன்னாள் குடியரசுத் தலைவர் குளோரியா மக்கபகல் அர்ரோயோவின் உறுதிமொழியின்படி பிலிப்பைன்ஸ் வளர்ந்த நாடாகும்.
- நீண்ட காலத் திட்டங்களின் பலனாக பாகிஸ்தான் வளர்ந்த நாடாகும்.
- சிலி வளர்ந்த நாடாகும்.
- ஓமன் வளர்ந்த நாடாகும்.
- நெடுஞ்சாலைகளில் தானே ஓட்டிக் கொள்ளக் கூடிய மகிழுந்துகள், முப்பரிமாண காணொளிக் காட்சி, செயற்கை மூளை உயிரணுக்கள், செயற்கைச் சிறுநீகங்கள், நோய்கள் தொடர்புடைய மரபியல் தொடர்பு – இவையனைத்தும் 2020 ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.