விசுவியசு மலை
விசுவியசு மலை Mount Vesuvius | |
---|---|
மொன்ட் வெசுவியோ (இத்தாலிய மொழி) | |
கி.பி 79இல் இந்த எரிமலை வெடிப்பால் முற்றிலும் அழிந்த கிரேக்க பொம்பெயி இடிபாடுகளிலிருந்து விசுவியசு மலையின் காட்சி. இடதுபுறமுள்ள உயர்ந்த சிகரமே செயற்பாட்டிலுள்ள கூம்பாகும்; வலதுபுறமுள்ள சிறிய முகடு சோம்மா எரிமலை வாய்ச்சுவரின் அங்கம். | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,281 m (4,203 அடி) |
புடைப்பு | 1,232 m (4,042 அடி) |
ஆள்கூறு | 40°49′N 14°26′E / 40.817°N 14.433°E |
புவியியல் | |
நாபொலி பெருநகராட்சி, கேம்பானியா, இத்தாலி | |
நிலவியல் | |
பாறையின் வயது | 1944க்கு 25,000 ஆண்டுகள் முன்பு எரிமலையின் வயது = அண். 17,000 ஆண்டுகள் |
மலையின் வகை | சோம்மா-சுழல்வடிவ எரிமலை |
Volcanic arc/belt | கேம்பானிய எரிமலை வட்டவரை |
கடைசி வெடிப்பு | மார்ச் 17–23, 1944 |
ஏறுதல் | |
எளிய வழி | நடை |
விசுவியசு மலை (Mount Vesuvius, /vɪˈsuːviəs/; இத்தாலியம்: Monte Vesuvio [ˈmonte veˈzuːvjo])[1] இத்தாலியின் தென்பகுதியில் கேம்ப்பானியா வட்டாரத்தில் நாபொலி வளைகுடாவில் அமைந்துள்ள சோம்மா-சுழல்வடிவ எரிமலை ஆகும்; இது கிட்டத்தட்ட 9 km (5.6 mi) தொலைவில் நாபொலிக்கு கிழக்கே கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இது கேம்பானிய எரிமலை வட்டவரையிலுள்ள பல எரிமலைகளில் ஒன்றாகும். விசுவியசில் பெரிய எரிமலைக் கூம்பும் அதைச் சுற்றி கடுஞ்சரிவான எரிமலைவாய் விளிம்பும் காணப்படுகின்றது; இதன் உயரம் எரிமலை வெடிப்பிற்கு முன்னதாக மிகக் கூடுதலாக இருந்திருக்க வேண்டும்.
கி.பி.79 எரிமலை வெடிப்பு
[தொகு]கி.பி 79இல் விசுவியசின் எரிமலை வெடிப்பால் உரோம நகரங்களான பொம்பெயியும் எர்குலியமும் மற்றும் பல குடியேற்றங்களும் முற்றிலும் புதையுண்டு அழிபட்டதற்காக இம்மலை அறியப்படுகின்றது. இந்த எரிமலை வெடிப்பின்போது கற்களும் சாம்பலும் எரிமலை வாயுக்களும் பெரும் புகைமண்டலமாக 33 கிமீ (21 மை) உயரத்திற்கு கற்குழம்பை கக்கி விநாடிக்கு 6×105 கன மீட்டர் (7.8×105 கன கஜங்கள்) வீதத்தில் நுரைக்கற்களை பொடியாக்கியது.[2] இது இரோசிமா-நாகசாக்கி குண்டுவீச்சின்போது வெளியிடப்பட்ட வெப்ப ஆற்றலை விட நூறாயிரம் மடங்கு கூடியது[3] More than 1,000க்கும் மேற்பட்டோர் இந்த வெடிப்பில் இறந்துபட்டனர்; சரியான எண்ணிக்கை மதிப்பிடப்படவில்லை. இதிலிருந்து தப்பியவரின் ஒரே நேரடி சாட்சியாக இளைய பிளினி வரலாறாளர் டாசிட்டசிற்கு எழுதிய இரு கடிதங்களே உள்ளன.[4]
தற்காலம்
[தொகு]விசுவியசு இதற்குப் பின்னர் பலமுறை வெடித்துள்ளது; கடந்த நூறாண்டுகளுக்குள்ளாக ஐரோப்பிய தீவல்லாத நிலப்பகுதியில் வெடித்துள்ள ஒரே எரிமலை இதுவாகும். இதன் அருகில் 3,000,000 மக்கள் வாழும் நகர்ப்பகுதி உள்ளதால் இதுவே உலகின் மக்களடர்ந்த பகுதியிலுள்ள மிகவும் அபாயகரமான எரிமலையாக கருதப்படுகின்றது. பிளினி காலத்திய வெடிப்பைப் போன்று மிகவும் கடுமையான கக்கலை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://latinlexicon.org/definition.php?p1=2062800
- ↑ Woods, Andrew W. (2013). "Sustained explosive activity: volcanic eruption columns and hawaiian fountains". In Fagents, Sarah A.; Gregg, Tracy K. P.; Lopes, Rosaly M. C.(editors) (eds.). Modeling Volcanic Processes: The Physics and Mathematics of Volcanism. Cambridge: Cambridge University Press. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521895439.
{{cite book}}
:|editor3-first=
has generic name (help) - ↑ "Science: Man of Pompeii". Time. October 15, 1956 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 29, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AHFhUEen?url=http://www.time.com/time/magazine/article/0,9171,865531,00.html. பார்த்த நாள்: February 4, 2011.
- ↑ C. Plinii Caecilii Secundi. "Liber Sextus; 16 & 20". Epistularum. The Latin Library.
- ↑ McGuire, Bill (October 16, 2003). "In the shadow of the volcano". தி கார்டியன். https://www.theguardian.com/education/2003/oct/16/research.highereducation2. பார்த்த நாள்: May 8, 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]- Purcell, N., R. Talbert, T. Elliott, S. Gillies. "Places: 433189 (Vesuvius M.)". Pleiades. பார்க்கப்பட்ட நாள் March 8, 2012.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - Fraser, Christian (January 10, 2007). "Vesuvius escape plan 'insufficient'". BBC News (Naples: BBC). http://news.bbc.co.uk/2/hi/europe/6247573.stm. பார்த்த நாள்: May 11, 2010.
- Garrett, Roger A.; Klenk, Hans-Peter (April 2005). "Vesuvius' next eruption". Geotimes இம் மூலத்தில் இருந்து May 12, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070512192957/http://www.geotimes.org/apr05/NN_Vesuvius.html. பார்த்த நாள்: December 8, 2006.
- "Vesuvius: The making of a catastrophe: Il problema ignorato". Global Volcanic and Environmental Systems Simulation (GVES). 1996–2003.