எரி கற்குழம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
10 மீட்டர் உயரம் வரை பீய்ச்சி அடிக்கும் லாவா

லாவா என்பது எரிமலை குமுறும் போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பைக் குறிக்கும். இது எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700 °C முதல் 1200 °C வரை இருக்கும். லாவாவின் பாகுநிலை நீரினை விட சுமார் 100,000 மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறை குழம்பு வெகுதூரம் உறையாமல் ஒடக்கூடியது.[1][2]

சில இடங்களில் எரிமலை வெடித்து சிதறாமலேயே லாவா குழம்பு எரிமலை முகத்துவாரத்தில் இருந்து வெளிவருவதும் உண்டு. பூவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளில், 95 விழுக்காடு காணப்படும் தீப்பாறைகள், எரிமலை குழம்பு உறைந்து பாறையாவதினால் உருவானவையாகும். எரிமலைகளில் இருந் து வெளிவரும் லாவா குழம்பு குளிர்ந்து இறுகி தீப்பாறைகளாக உருவெடுக்கிறது. லாவா என்ற பதம் இத்தாலிய மொழியில் இருந்து வந்ததாக அறியப்படுகிறது.[3][4][5]

லாவா குழம்பின் உட்கூறுகள்[தொகு]

2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹவாய் தீவுகளில் எரிமலை வெடித்தபோது ஓடிய லாவா குழம்பு

லாவா குழம்பின் உட்கூறுகள் எரிமலைகளுக்கிடையே வேறுபடுகிறது. லாவா குழம்பின் பண்புகள், அதன் உட்கூறுகளை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகின்றன. லாவா குழம்பின் வேதியியல் பண்புகளின்படி, மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவையாவன:

  1. மிகுந்த பாகுத்தன்மை கொண்ட பெல்சீக் வகை (felsic)
  2. இடைப்பட்ட பாகுத்தன்மை கொண்ட வகை
  3. குறைந்த பாகுத்தன்மை கொண்ட மாபிக் வகை (mafic)

பெல்சீக் வகை லாவாவில், சிலிக்கா, அலுமினியம் பொட்டாசியம், சோடியம், கால்சியம், குவார்ட்சு ஆகிய வேதியல் பொருள்கள் பெருமளவில் காணப்படுகின்றன. மிகுந்த பாகுத்தன்மை கொண்டமையால், இவ்வகை லாவா மிகக்குறைவான வேகத்தில் பாயும் தன்மையை பெற்றுள்ளது. மேலும், பெல்சீக் வகை லாவா, மற்ற லாவா வகைகளை விட குறைந்த வெப்ப நிலையான 650 முதல் 750 °C வரையிலான வெப்ப நிலையிலே அளவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வகை லாவா பல கிலோமீட்டர் பாயும் ஆற்றல் கொண்டவை.

இடைப்பட்ட பாகுத்தன்மை கொண்ட லாவாவின் வெப்பநிலை பெல்சீக் வகை லாவாவை விடக் கூடுதலாகவும்(சுமார் 750 முதல் 950 செல்சியஸ் வரை) , பாயும் வேகம் அதிகமாகவும் காணப்படுகிறது. இவ்வகை லாவாவில், அலுமினியம் மற்றும் சிலிக்கா ஆகியவற்றின் அளவு குறைவாகவும், இரும்பு மற்றும் மாங்கனிசு ஆகியவற்றின் அளவு அதிகமாகவும் காணப்படுகிறது. இரும்பு மற்றும் மாங்கனிசு ஆகியவற்றினால், இக்குழம்பு கரும்சிவப்பு நிறத்தினை கொண்டுள்ளது.

மூன்றாவது வகையான மாபிக் லாவாவின் வெப்பநிலை மிக உயர்ந்ததாகவும்( > 950 செல்சியஸ்), விரைவாக ஒடக்கூடியதாகவும் காணப்படுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. H. Pinkerton, N. Bagdassarov. "ScienceDirect - Journal of Volcanology and Geothermal Research : Transient phenomena in vesicular lava flows based on laboratory experiments with analogue materials". www.sciencedirect.com. 2009-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-06-19 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Rheological properties of basaltic lavas at sub-liquidus temperatures: laboratory and field measurements on lavas from Mount Etna". cat.inist.fr. 2015-11-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-06-19 அன்று பார்க்கப்பட்டது.
  3. Merriam-Webster OnLine dictionary
  4. Dictionary.com
  5. "Vesuvius Erupts, 1738". 2006-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-09-29 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரி_கற்குழம்பு&oldid=3545974" இருந்து மீள்விக்கப்பட்டது