நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்
நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் Nagalingam Ethirveerasingam | |
---|---|
பிறப்பு | பெரியவிளான், யாழ்ப்பாணம் மாவட்டம், இலங்கை | 24 ஆகத்து 1934
இறப்பு | ஏப்ரல் 18, 2024 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 89)
பணி | விரிவுரையாளர், விளையாட்டு வீரர், சமூகச் செயற்பாட்டாளர் |
நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Nagalingam Ethirveerasingam, 24 ஆகத்து 1934 – 18 ஏப்ரல் 2024) இலங்கைத் தமிழ்க் கல்வியாளரும், விளையாட்டு வீரரும், சமூக செயற்பாட்டாளரும் ஆவார். 1952, 1956[1] ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும்[2] மூன்று ஆசியப் போட்டிகளிலும்[2] இலங்கைக்காக விளையாடியவர்.
இலங்கையின் முன்னணி உயரப்பாய்தல் வீரராகவும், சாதனையாளராகவும் திகழ்ந்தவர். அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் இலங்கைக்கு முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தவர். 1958-இல் சப்பானில் தோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், உயரப்பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்றவர்.[2][3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாண மாவட்டம், பெரியவிளான் என்ற ஊரில் பிறந்தவர். முதலில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும், பின்னர் கொழும்பு சாந்த ஜோசப் கல்லூரியிலும் பயின்ற இவர் கல்லூரி மாணவனாக இருந்தபோதே அகில இலங்கை சாதனையை முறியடித்தார். இவரது உடன்பிறந்தவர்களான என். ராஜசிங்கம், என். பரராஜசிங்கம், என். செகராஜசிங்கம் ஆகியோரும் கல்லூரிக்காலத்தில் பரவலாக அறிந்த விளையாட்டு வீரர்களாக இருந்தவர்கள்.
இலங்கை, சியேரா லியோனி, பப்புவா நியூ கினி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யுனெஸ்கோவிலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு, அமெரிக்காவில் வசித்து வந்தார்.
தன்னார்வப் பணிகள்
[தொகு]எதிர்வீரசிங்கம் 1994 முதல் இலங்கையின் வடக்கு கிழக்கில் பல தன்னார்வப் பணிகளை மேற்கொண்டு வந்தார். 1998-99 காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண சபையிலும், பின்னர் 2010 இல் வட மாகாணசபையிலும் ஆலோசகராகப் பணியாற்றி, பல விளையாட்டுப் பயிற்சி வகுப்புக்களை நடத்தினார். 2012 இல் SERVE eLearning Institute ஐ யாழப்பாணத்தில் தொடங்கி 2017 வரை நடத்தி வந்தார்.[4]
இறப்பு
[தொகு]நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 2024 ஏப்பிரல் 18 அன்று இரவு லாஸ் ஏஞ்சலசில் தனது 89-ஆவது அகவையில் காலமானார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [https://olympics.com/en/olympic-games/melbourne-1956/results/athletics/high-jump-men MELBOURNE 1956 ATHLETICS HIGH JUMP MEN RESULTS], olympics.com
- ↑ 2.0 2.1 2.2 "Ethir: Olympian and Bridge-Builder". SangamOrg. 2008-07-23. http://www.sangam.org/2008/07/Ethir.php?uid=3028. பார்த்த நாள்: 2009-01-07.
- ↑ Asian Games, gbrathletics.com
- ↑ 3 Weeks In Sri Lanka - Part 2 : To Jaffna And The Northern Province
- ↑ இலங்கைக்காக முதல் தங்கப்பதக்கம் வென்ற நாகலிங்கம் காலமானார், Ceylon Paper, 20 ஏப்பிரல் 2024
வெளி இணைப்புகள்
[தொகு]- Selected Writings
- Ethirveerasingam recalls his Olympics days Inspired by Olympics colour film in 1940s பரணிடப்பட்டது 2016-01-26 at the வந்தவழி இயந்திரம், தி ஐலண்ட், சூலை 9, 2012 - (ஆங்கில மொழியில்)
- The 25 - day voyage to Helsinki was a huge experience for Ethir பரணிடப்பட்டது 2016-01-26 at the வந்தவழி இயந்திரம், தி ஐலண்டு, சூலை 11, 2012 - (ஆங்கில மொழியில்)
- Missed opportunity in 1960 and his moments in cricket, Ethirveerasingam recalls his Olympics days பரணிடப்பட்டது 2016-01-26 at the வந்தவழி இயந்திரம், தி ஐலண்ட், சூலை 12, 2012 - (ஆங்கில மொழியில்)
- Sri Lankan Olympian Nagalingam Ethirveerasingam on his hopes for reconciliation – video, த கார்டியன், செப்டம்பர் 20, 2013