மாக்னா கார்ட்டா
மாக்னா கார்ட்டா | |
மாக்னா கார்ட்டா
| |
உருவாக்கப்பட்டது | 1215 |
இடம் | பல்வேறு படிகள் |
வரைவாளர் | அரசரின் பிரபுக்கள் |
Part of a series of articles on |
முடியாட்சி |
---|
Politics portal |
மாக்னா கார்ட்டா (Magna Carta) அல்லது மேக்னா கார்ட்டா என்பது இங்கிலாந்து இராச்சியதின் அரசருக்கும் அந்நாட்டுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கையாகும். 1215 ஆம் ஆண்டு முதலில் அரசு முத்திரைத்தாளில் பதிப்பிக்கப்பட்ட இந்த மகாசாசனம் பதின்மூன்றாவது நூற்றாண்டில் சில தற்காலிக விதிகளை நீக்கி அரசரின் ஆட்சிக்கு நேரடியான எதிர்ப்புகளைத் தவிர்த்து மீளவும் பதிப்பிக்கப்பட்டது. இந்த சாசனம் 1225ஆம் ஆண்டு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. 1297 ஆம் ஆண்டு பதிப்பு இன்னமும் இங்கிலாந்து மற்றும் வேல்சு அரசமைப்புப் புத்தகங்களில் இங்கிலாந்தின் சுதந்திரங்களுக்கும் வனங்களின் சுதந்திரங்களுக்குமான பெரும் சாசனம் (The Great Charter of the Liberties of England, and of the Liberties of the Forest) என அறியப்படுகிறது.
1215 ஆம் ஆண்டு இங்கிலாந்தை ஆண்ட ஜான் எதிரி நாடான பிரான்சிடம் நார்மண்டிப் பகுதியை இழந்ததுடன் ஆட்சியும் சீராக இல்லாததினால் பிரபுக்கள், வியாபாரிகள், செல்வந்தர்கள், பொது மக்கள் என அனைவரும் அரசருக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தனர். ஜான் மீது மக்களுக்கு மிகுந்த அதிருப்தி, கடுமையான வரிவிதிப்பு, போப்புடன் தகராறு, போரிடவும் தெரியவில்லை, வருத்தம் ஆகியன கோபமாக மாறியன. பிரபுக்கள், வியாபாரிகள், செல்வந்தர்கள், பொது மக்கள் என்று ஒரு பெரும் கூட்டம் ஜானுக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தது. அரசருக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பிடித்து வரப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனால், ஜான் எதிர்பார்த்தது போல் கலகம் அடங்கவில்லை. முன்பைக்காட்டிலும் கூடுதல் பலம் பெற்றது. கலகக்காரர்கள் லண்டனைக் கைப்பற்றினர்.
பின்னர் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மகாசாசனம் என்று அழைக்கப்படும் மேக்னா கார்ட்டா உருவானது. சாசனம் உருவான பிறகும் ஜான் தொடர்ந்து அடக்குமுறையை ஏவிவிட்டுக்கொண்டுதான் இருந்தார். ஜான் மன்னருக்கு எதிராக பொது மக்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று பலரும் கலகம் செய்திருந்தாலும், சாசனம் மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில்தான் உருவாக்கப்பட்டது. ஜூன் 15, 1215 அன்று அரசு முத்திரை சாசனத்தில் பதிக்கப்பட்டது. இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படுகிறது. இதன்படி அரசரின் முடிவு தன்னிச்சையாக இராது; வெளிப்படையாக அரசரால் சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றாது "சுதந்திர" மனிதர்களை தண்டிக்க இயலாது. அவர் மகாசபையின் அனுமதியைப்பெற்றே செயற்படமுடிந்தது.
மாக்னா கார்ட்டா பொதுமக்கள் தமது அரசரின் ஆட்சி அதிகாரங்களை குறைத்து தங்களின் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரசரை வலியுறுத்தி ஏற்பட்ட முதல் சாசனமாகும். இதன் முன்னோடியாகவும் உந்துதலாகவும் 1100 ஆம் ஆண்டு ஹென்றி I தானாகவே வெளியிட்ட சுதந்திர சாசனம் அமைந்தது. மாக்னா கார்ட்டாவில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கான விதிகள் என்பது மிகவும் சொற்பமே.
இது உலக வரலாற்றிற்கு இங்கிலாந்தின் முக்கிய கொடையாக இருந்தபோதும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பெரும்பாலான விதிகள் அவற்றின் மூலத்தை விட முற்றிலும் மாற்றப்பட்டன. மூன்று கொள்கைகள் இன்னமும் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன. டென்னிங் பிரபு இந்த சாசனத்தை "எல்லாக் காலங்களுக்குமான மிகசிறந்த அரசமைப்பு ஆவணம்; தன்னிச்சையான சர்வாதிகார ஆட்சிக்கெதிர் தனிநபரின் சுதந்திரத்திற்கான அடிக்கல்" எனக் கூறுகிறார்.[1] உல்ஃப் பிரபு தனது 2005 பேச்சில் "தற்போது சிறப்பு அரசமைப்பு நிலையுள்ளதாக அங்கீகரிக்கப்படும் ஆவணங்களில் முதலாவதாக" இதனைக் குறிப்பிடுகிறார்.[2]
இது உள்ளடக்கம் அல்லது வடிவம் என எதிலும் தனித்துவமானதாக இல்லாதிருப்பினும், இந்தச் சாசனத்தின் மூலம் ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடத்த வழி வகுத்தது.[3] நடைமுறையில் மாகனா கார்ட்டா அரசரின் அதிகாரங்களை மட்டுப்படுத்தாதிருந்தபோதும் அரசரும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர் எனக் காட்ட ஓர் குறியீடாக இருந்தது. மாக்னா கார்ட்டா அரசனின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் முதலாவது வரலாற்று ஆவணமாகவும், பாராளமன்ற அதிகாரம் வளர்ச்சி பெறுவது சம்பந்தமான முக்கிய நிகழ்வாகவும் அமையப்பெற்றது. அரசனால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் சட்டமாகக் கருதப்படும் காலத்தில், இவ்வொப்பந்தத்தில் கையப்பமிட்டதன் மூலம் அவனும் சட்டத்திற்கு கட்டுப்படும் நிலை ஏற்பட்டது. புதிய நாடுகளில் குடியேறியவர்களுக்கு ஓர் வழிகாட்டுதலாக[4] அவர்தம் அரசமைப்பு ஆவணங்களை, அமெரிக்க அரசியலைப்பு உட்பட, உருவாக்கிட உதவியது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Danny Danziger & John Gillingham, "1215: The Year of Magna Carta"(2004 paperback edition) p278
- ↑ "Magna Carta: a precedent for recent constitutional change". Judiciary of England and Wales Speeches. 15 June 2005. Archived from the original on 15 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 07 September 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help) - ↑ Holt, J.C. Magna Carta (1965) p20
- ↑ Clanchy, M.T. Early Medieval England Folio Society(1997)p139
- ↑ "United States Constitution Q + A". The Charters of Freedom. பார்க்கப்பட்ட நாள் 16 February 2009.
- Magna Carta in பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் Online.
- Article from Australia's Parliament House about the relevance of Magna Carta பரணிடப்பட்டது 2012-02-17 at the வந்தவழி இயந்திரம்
- J. C. Holt (1992). Magna Carta. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-27778-7.
- I. Jennings: Magna Carta and its influence in the world today
- H. Butterfield; Magna Carta in the Historiography of the 16th and 17th Centuries
- G.R.C. Davis; Magna Carta
- J. C. Dickinson; The Great Charter
- G. B. Adams; Constitutional History of England
- W. S. McKechnie; Magna Carta: A Commentary (2d ed. 1914, repr. 1960)
- A. Pallister; Magna Carta the Legacy of Liberty
- A. Lyon; Constitutional History of the United Kingdom
- G. Williams and J. Ramsden; Ruling Britannia, A Political History of Britain 1688–1988
- Royal letter promulgating the text of Magna Carta (1215), treasure 3 பரணிடப்பட்டது 2007-07-15 at the வந்தவழி இயந்திரம் of the British Library displayed via The European Library
வெளியிணைப்புகள்
[தொகு]கட்டுரைகள்
அரசாங்கத்தின் மாக்னா கார்ட்டா இணையங்கள்
- British Library
- National Archives United Kingdom
- British Parliament
- Library of Congress USA
- National Archives USA
நூல்கள்
- Magna Carta Libertatum Latin and English text of the 1215 charter
- Text of Magna Carta பரணிடப்பட்டது 2016-07-18 at the வந்தவழி இயந்திரம் English translation, with introductory historical note. From the Internet Medieval Sourcebook.
- Glossary of terms in Magna Carta
- Interactive, high-resolution view of a copy from 1297, owned by David Rubenstein and on permanent loan to the US National Archives
- Timeline of 13th Century Magna Carta Events National Archives-UK
கானொளி
- Magna Carta at BBC Radio 4, 2015
- BBC Anniversary Lecture Professor Linda Colley 25 Nov 2014 Guildhall London, England
- Magna Carta's Legal Legacy USA Chief Justice John Roberts & Lord Igor Judge Former Lord Chief Justice of England and Wales 14 Nov 2014
- The Relevance of the Magna Carta to the 21st Century" Sir Robert Worcester 29 Nov 2012