மெய்சி மீள்விப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்பானின் வரலாறு

The Meiji Emperor,
moving from கியோத்தோ to Tokyo, end of 1868.

Glossary

மெய்சி மீள்விப்பு (明治維新 Meiji Ishin?) என்பது, 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில், சப்பானிய அரசியல், சமூக அமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை உருவாக்கிய தொடரான நிகழ்வுகளைக் குறிக்கின்றது. இந்நிகழ்வுகள் இடம்பெற்ற காலம், எடோ காலப்பகுதியின் பிற்பகுதியையும், மெய்சி காலப்பகுதியின் முற்பகுதியையும் உள்ளடக்கியது.

கூட்டணி[தொகு]

1866 ஆம் ஆண்டில், சட்சுமா பகுதியின் தலைவரான சாய்கோ தாக்காமோரியும், சோசூ பகுதியின் தலைவர் கிடோ தக்கயோசியும் இனைந்து உருவாக்கிய சட்சுமா-சோசூ கூட்டணியே மெய்சி மீள்விப்புக்கான அடிப்படையாக அமைந்தது எனலாம். இவ்விரு தலைவர்களும் பேரரசர் கோமேய்க்கு ஆதரவு வழங்கினர். சாக்கோமோட்டோ ரியோமா என்பவர் அப்போது ஆட்சியில் இருந்த தொக்குகாவா சொகுனாட்டே அரசை எதிர்ப்பதற்காகவும், பேரரசரின் ஆட்சியை மீள்விப்பதற்காகவும் இவர்களை ஒன்றிணைத்தார். 1867 ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேதி பேரரசர் கோமெய் காலமானதைத் தொடர்ந்து அதே ஆண்டு பெப்ரவரி மூன்றாம் தேதி அவரது மகன் பேரரசர் மெய்சி அரியணை ஏறினார். இக் காலப்பகுதியில் சப்பான் நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பிலிருந்து, முதலாளித்துவப் பொருளாதார அமைப்புக்கு மாற்றம் பெற்றதுடன் அதனை மேனாட்டுச் செல்வாக்குக்குள் கொண்டுவந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்சி_மீள்விப்பு&oldid=2915760" இலிருந்து மீள்விக்கப்பட்டது