உள்ளடக்கத்துக்குச் செல்

மாண்புமிகு புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாண்புமிகு புரட்சி அல்லது 1688 ஆம் ஆண்டுப் புரட்சி என்பது 1688 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெற்ற புரட்சியாகும். இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு (இசுக்கொட்லாந்தின் ஏழாம் யேம்சு மற்றும் அயர்லாந்தின் இரண்டாம் ஜேம்சு) மன்னனுக்கு எதிராக ஒன்றுபட்ட பல நாடாளுமன்ற அங்கத்தவர்கள் அம்மன்னனை ஆட்சியில் இருந்து அகற்றி, டச்சுப் பிரதேச ஆட்சியாளரான (Stadtholder) மூன்றாம் வில்லியத்தையும் அவரது மனைவியும் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சின் மகளுமான இங்கிலாந்தின் இரண்டாம் மேரியையும் ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது.[1] இறுதியில் வெற்றிபெற்ற நாடாளுமன்றத்தினரால் உருவாக்கப்பட்ட உரிமைகள் மனு (Bill of Rights) எனும் ஒப்பந்தப் பத்திரத்தில் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் கையெழுத்திட்டதன் மூலம் புதிதாக இங்கிலாந்தில் அரசியலமைப்பு முடியாட்சி ஆரம்பமானது.

1685 ஆம் ஆண்டளவில் இங்கிலாந்துப் நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் புரட்டஸ்தாந்து மதத்தினைப் பின்பற்றினர். எனினும் இரண்டாம் ஜேம்சு மன்னன் கத்தொலிக்க மதத்தைச் சேர்ந்தவராவார். மன்னனின் மதச் செயற்பாடுகளிலும் பிரான்சு நாட்டுடனான உறவை மேற்கொள்ளலிலும் புரட்டஸ்தாந்து மதத்தைப் பின்பற்றும் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் இடையூறு விளைவித்தனர். இந்நிலை 1688 ஆம் ஆண்டு சூன் 10 ஆம் திகதியில் இரண்டாம் ஜேம்சுக்கு மகன் பிறந்த போது உச்சநிலையில் காணப்பட்டது.

இரண்டாம் ஜேம்சின் ஊகிக்கப்படும் வாரிசும் புரட்டஸ்தாந்து மதத்தைச் சார்ந்தவருமான இரண்டாம் மேரியையும் அவளது இளைய சகோதரனும் இரண்டாம் ஜேம்சின் வெளிப்படை வாரிசுமான ஜேம்சையும் நாடு கடத்தியமை போன்ற இரண்டாம் ஜேம்சு மன்னனின் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தினரை மேலும் வெறுப்புக்குள்ளாக்கின.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Coward 1980, ப. 298–302.

மேலும் வாசிக்க

[தொகு]
  • Ashley, Maurice (1966). The Glorious Revolution of 1688. Hodder & Stoughton. Also published by Panther History (1968).
  • Cruickshanks, Eveline (2000). The Glorious Revolution (British History in Perspective). Palgrave Macmillan. ISBN 0-312-23009-5.
  • DeKrey, Gary S. (2007). Restoration and Revolution in Britain: A Political History of the Era of Charles II and the Glorious Revolution. Palgrave Macmillan. ISBN 978-0-333-65103-2. A scholarly history of the era.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்புமிகு_புரட்சி&oldid=3480281" இலிருந்து மீள்விக்கப்பட்டது