1608
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1608 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1608 MDCVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1639 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2361 |
அர்மீனிய நாட்காட்டி | 1057 ԹՎ ՌԾԷ |
சீன நாட்காட்டி | 4304-4305 |
எபிரேய நாட்காட்டி | 5367-5368 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1663-1664 1530-1531 4709-4710 |
இரானிய நாட்காட்டி | 986-987 |
இசுலாமிய நாட்காட்டி | 1016 – 1017 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 13 (慶長13年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1858 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3941 |
1608 (MDCVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி - வட அமெரிக்காவில் ஆங்கிலேயர்களின் முதலாவது குடியேற்றப் பகுதியான ஜேம்சுடவுனுக்கு கிறித்தோபர் நியூபோர்ட் மேலும் 100 புதிய கப்பலில் வந்திறங்கினார். அங்கு முதலில் வந்த 38 பேர் மட்டுமே உயிருடனிருப்பதைக் கண்டார்.
- சனவரி 7 - ஜேம்சுடவுனில் இடம்பெற்ற தீயினால் கோட்டையில் இருந்த அனைத்து வீடுகளும் எரிந்து சேதமடைந்தன. கோட்டை மார்ச் மாதத்தில் புதுப்பிக்கப்பட்டது.
- சனவரி 17 - எதியோப்பியப் பேரரசர் சுசேனியோசு ஒரோமோ இராணுவத்தினரைத் தோற்கடித்தார். 12,000 ஒரோமோக்கள் கொல்லப்பட்டனர்.
- சூலை 3 - கியூபெக் நகரம் நிறுவப்பட்டது.
- சூலை - ஆங்கிலேயக் கப்பல் மேரி அண்ட் மார்கரெட், கிறித்தோபர் நியூபோர்ட்டின் தலைமையில் இங்கிலாந்தில் இருந்து ஜேம்சுடவுன் நோக்கிப் புறப்படது.[1]
- ஆகத்து 24 - இந்தியாவுக்கான முதலாவது ஆங்கிலேயப் பிரதிநிதி, காப்டன் வில்லியம் ஆக்கின்சு, சூரத்துவை அடைந்தார்.
- செப்டம்பர் 10 - ஜான் சிமித் ஜேம்சுடவுனின் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- அக்டோபர் 2 - டச்சு வில்லைத் தயாரிப்பாளர் ஆன்சு லிப்பர்சி முதலாவது தொலைநோக்கியை டச்சு நாடாளுமன்றத்தில் காட்சிப் படுத்தினார்.
- முதலாவது காசோலைகள் நெதர்லாந்தில் பயன்பாட்டுக்கு வந்தன.
- முதல் அஞ்சல் எழுதுபொருளான ஏகியூ கடிதத்தாள் வெனிசின் அடையாளச் சின்னம் வெளியிடப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- டிசம்பர் 9 - ஜான் மில்டன், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1674)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "First Germans at Jamestown 1" (history), Davitt Publications, 2000, webpage: GHfirst பரணிடப்பட்டது 2017-01-25 at the வந்தவழி இயந்திரம்.