வில்லை (ஒளியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உருப்பெருக்கிக் கண்ணாடியில் உள்ள வில்லை. இது இருகுவி வில்லை ஆகும். இவ்வகை வில்லைகள் கதிரொளியை குவியச்செய்து வெப்பச் செறிவால் (அடர்த்தியால்) காய்ந்த இலை, பஞ்சு, காகிதம் போன்றவற்றைத் தீப்பற்றச் செய்யவல்லது.
ஒளியைக் குவியப்படுத்த வில்லைகள் பயன்படுகின்றன.

வில்லை (lens) என்பது ஒளிக் கதிர்களைக் குறிப்பிட்டவாறு குவியவோ விரியவோ செய்யவல்ல ஓர் எளிய கருவி. இது ஒரு பொருளை பெரிதாகவோ சிறிதாகவோ காட்ட வல்ல, கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் ஒரு பொருளால் செய்யப்பட்டது. வில்லையின் அடிப்படைப் பண்பானது ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து வேறு ஓர் ஊடகத்தின் வழியே செல்லும் பொழுது ஏற்படும் ஒளிவிலகல் பண்பைப் பொருத்து அமைகின்றது. இதன் அடிப்படையிலேயே வெவ்வேறு வளைவுள்ள வில்லையின் பரப்புகள் அமைக்கப்படுகின்றன[1][2]. ஒரு வில்லையின் புறப் பரப்புகள் சீரான குழியாகவோ, குவிந்தோ அல்லது சமதளமாகவோ இருக்கும். உப்பிப் புடைத்து இருந்தால் குவிப் பரப்பு என்றும், உள்நோக்கி வளைந்து குழிந்து இருந்தால் குழிப் பரப்பு என்றும், நேரான சமதளமாக இருந்தால் சமதளப் பரப்பு என்றும் குறிக்கப்படும். ஒருபுறம் ஒளி நுழைந்து மறுபுறம் ஒளி வெளி வருமாகையால் வில்லைக்கு இரு பரப்புகளும் முக்கியமானவை.


வில்லை என்பது பெரும்பாலும் திண்மப் பொருட்களால் ஆனது என்றாலும், தாமரை இலையின் மீது உள்ள நீரும், பனித்துளியும் திரண்டு புறப் பரப்பு குவிந்து இருப்பதால் அவைகளும் வில்லையின் பணியையே செய்கின்றது. மெல்லிய அட்டை போன்ற ஒரு தட்டையான ஒளியூடுருவு பொருளும் குறிப்பிட்ட சில வழிகளில் கீறப்பட்டோ வடிவமைக்கப்பட்டோ இருந்தால் அவைகளும் வில்லை போல இயங்க வல்லன (பார்க்க ஃவிரெனெல் வில்லை). ஒளிப்படக்கருவி, நுண்நோக்கி போன்ற பல அன்றாடக் கருவிகளிலும் அறிவியல் ஆய்வுக் கருவிகளிலும் வில்லை பரவலாக பயன்படுகின்றது[1][3].

வில்லைகளின் வகைகள்[தொகு]

பொதுவாக வில்லையின் (லென்ஸ்) புறப்பரப்பின் வளைவானது குவிந்து இருந்தாலும் குழிந்து இருந்தாலும் உருண்டை உருவின் புறப் பரப்பை ஒத்து இருக்கும். வில்லையின் இரு பரப்புகளும் எவ்வகையானது என்பதைப் பொருத்து, ஒளிக்கதிர்களை அது திசைதிருப்பும் பண்பு அமையும். இருகுவி வில்லை என்பது இருபரப்பும் புடைத்திருக்கும் (குவிந்திருக்கும்) வில்லை ஆகும். அதே போல இரு பரப்பும் குழிந்து இருந்தால் இருகுழி வில்லை எனப்படும். ஒரு பரப்பு, குவிந்தும் ஒரு பரப்பு சமதளமாகவும் இருந்தால் குவிசமதள வில்லை எனப்படும். ஒரு பரப்பு குழிந்தும் மறு பரப்பு சமதளமாகவும் இருந்தால் குழிசமதள வில்லை எனப்படும். ஒருபரப்பு குவிந்தும், மறுபரப்பு குழிந்தும் இருந்தால் குவிகுழி வில்லை எனப்படும். ஒரு குவிகுழி வில்லையின் வளைவுகள் ஒரே அளவான உருண்டைப் பரப்பாக இருக்குமானால் அதனை இணை குவிகுழி வில்லை என்பர். இவ்வகைகளைக் கீழ்க்கண்ட படத்தில் காணலாம்[4].

வில்லைகள் செயல்படும் முறை[தொகு]

குவி மற்றும் குழி வில்லைகள் செயல்முறை விளக்கப்படங்கள்.

வில்லை இருகுவி வில்லையாகவோ அல்லது சமதள குவி வில்லையாகவோ இருந்தால்,இணையாக வரும் ஒளிக்கற்றை வில்லைகளுக்கு அப்பால் ஒரு இடத்தினில் குவிக்கப்படும். அப்படி குவிக்கப்பட்டால் அவை நேர்மறை குவிவில்லை எனப்படும்.வில்லைக்கும் குவிப் புள்ளிக்கும் இடையில் உள்ள தூரம் குவியத்தொலைவு( focal length) எனப்படும்.


இருகுவிவு வில்லை
Large convex lens.jpg


வில்லை இருகுழி வில்லையாகவோ அல்லது சமதள குழி வில்லையாகவோ இருந்தால்,இணையாக வரும் ஒளிக்கற்றை வில்லைகளை கடந்த பின் பிரிந்து செல்லும்.பாதி ஒளிக்கற்றைகள் வில்லைகளுக்கு முன்னரே ஒரு இடத்தினில் குவிக்கப்படும். அப்படி குவிக்கப்பட்டால் அவை எதிர்மறை குழிவில்லை எனப்படும்.வில்லைக்கும் குவிப் புள்ளிக்கும் இடையில் உள்ள தூரம் குவியத்தொலைவு(focal length) எனப்படும்.

இருகுழிவு வில்லை
Concave lens.jpg


குவிவு வில்லை[தொகு]

வில்லைகளின் வகைகள்

பொதுவாக 'இருபுற குவிவுவில்லை' என்பதனை குவிவுவில்லை என்றே குறிப்பிடலாம். குவிவுவில்லை மையங்களில் தடித்தும், ஓரங்களில் மெலிந்தும் காணப்படும்.

பயன்பாடுகள்[தொகு]

குவி வில்லைகள் பொருள்களை பெரிதுபடுத்தி பார்க்க உதவுகிறது.கண் கண்ணாடிகள் செய்ய வில்லைகள் பயன்படுகின்றன.தொலைநோக்கி , நுண்ணோக்கி , புகைப்படக்கருவி,பைனாக்குலர்கள் ஆகியவற்றில் வில்லைகள் பிரதானமாக பயன்படுகின்றன.

பிறழ்ச்சிகள்[தொகு]

வில்லைகள் சரியான படங்களை உருவாக்குவதில்லை. அவற்றில் சில இடங்களில் விலகல் மற்றும் பிறழ்ச்சிகள் ஏற்படுகின்றன.வில்லைகளை சரியாக தயாரிப்பதன் மூலமே இதனை ஒரளவிற்கு சரி செய்ய இயலும். பிறழ்ச்சியில் பல வகைகள் உள்ளன.

கோள பிறழ்ச்சி[தொகு]

Lens5.svg

வில்லைகளில் கோள அளவு மாறுபடுவதால் இவ்வகை பிறழ்ச்சி ஏற்படுகிறது.இது பெரும்பாலும் குவி வில்லையில் ஏற்படக்கூடிய பிறழ்ச்சி ஆகும்.

வால் பிறழ்ச்சி(Coma aberration)[தொகு]

Lens-coma.svg

இதுவும் குவி வில்லையில் ஏற்படுகின்ற ஒரு பிறழ்ச்சியே ஆகும்.இப்பிறழ்ச்சியினால் ஏற்படும் பிம்பம் வால் நட்சத்திரத்தின் வடிவத்தில் இருப்பதனால் இதற்கு கோமா பிறழ்ச்சி என்று பொயர் ஏற்பட்டது.

நிற பிறழ்ச்சி (chromatic aberration)[தொகு]

Chromatic aberration lens diagram.svg

இப்பிறழ்ச்சியினால் வெவ்வேறு நிறங்களின் குவி புள்ளி வெவ்வேறு இடங்களின் இருக்கும். இதனால் நிறங்கள் பிரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Whitehouse, David (1 July 1999). "World's oldest telescope?". BBC News. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/380186.stm. பார்த்த நாள்: 10 May 2008. 
  2. "The Nimrud lens/The Layard lens". Collection database. The British Museum. பார்த்த நாள் 11/25/2012.
  3. D. Brewster (1852). "On an account of a rock-crystal lens and decomposed glass found in Niniveh" (in German). Die Fortschritte der Physik (Deutsche Physikalische Gesellschaft). http://books.google.com/?id=bHwEAAAAYAAJ&pg=RA1-PA355. 
  4. Kriss, Timothy C.; Kriss, Vesna Martich (April 1998). "History of the Operating Microscope: From Magnifying Glass to Microneurosurgery". Neurosurgery 42 (4): 899–907. doi:10.1097/00006123-199804000-00116. பப்மெட் 9574655. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லை_(ஒளியியல்)&oldid=2010549" இருந்து மீள்விக்கப்பட்டது