ஏப்ரல் 1
Jump to navigation
Jump to search
| << | ஏப்ரல் 2019 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||
| MMXIX | ||||||
ஏப்ரல் 1 (April 1) கிரிகோரியன் ஆண்டின் 91 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 92 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 274 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1826 - சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1867 - சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.
- 1873 - அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் மூழ்கியதில் 547 உயிரிழந்தனர்.
- 1924 - இட்லர் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்றார்.
- 1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
- 1937 – ஏடன் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.
- 1939 - எசுப்பானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக இராணுவத் தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோ அறிவித்தார். லடைசி குடியரசுப் படையினர் சரணடைந்தனர்.
- 1941 – ஈராக்கில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அப்தல்லாவின் அரசு கலைக்கப்பட்டது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் சப்பானின் ஒக்கினாவா தீவுகளில் இறங்கித் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1946 - அலூசியன் தீவுகளில் நிகழ்ந்த 8.6 அளவு நிலநடுக்கம் காரணமாக அவாய் தீவுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டு 157 பேர் உயிரிழந்தனர்.
- 1948 - பரோயே தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது.
- 1949 – சீன உள்நாட்டுப் போர்: மூன்றாண்டுகள் சண்டையின் பின்னர், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி தேசியவாதக் கட்சியுடன் நடத்திய பேச்சுகள் தோல்வியில் முடிந்தன.
- 1957 - இந்தியாவில் 1 நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1960 – டிரோசு-1 என்ற செயற்கைக்கோள் முதலாவது விண்வெளியில் இருந்து முதலாவது தொலைக்காட்சிப் படிமத்தை பூமிக்கு அனுப்பியது.
- 1971 – வங்காளதேச விடுதலைப் போர்: வங்காளதேசத்தில் பாக்கித்தான் இராணுவம் 1,000 பொதுமக்களைப் படுகொலை செய்தது.
- 1973 - புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
- 1976 - ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக், ரொனால்டு வைன் ஆகியோரால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
- 1979 - ஈரான் 99% மக்களின் ஆதரவான வாக்களிப்பின் மூலம் ஓர் இசுலாமியக் குடியரசாகியது. ஷாவில் அரசு முடிவுக்கு வந்தது.
- 1981 - சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1997 - ஏல்-பாப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.
- 1999 – நூனவுட் கனடாவின் பிராந்தியமானது.
- 2001 - போர்க்குற்றங்களுக்காகத் தேடப்பட்டுவந்த யூகொசுலாவியாவின் முன்னாள் தலைவர் சுலோபதான் மிலோசெவிச் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
- 2001 - நெதர்லாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.
- 2004 - கூகிள் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது.
- 2006 - ஈரான் மேற்கில் லோரிஸ் டான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 66 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்[தொகு]
- 1578 – வில்லியம் ஆர்வி, ஆங்கிலேய மருத்துவர் (இ. 1657)
- 1621 – குரு தேக் பகதூர், சீக்கிய குரு (இ. 1675)
- 1815 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், செருமானியப் பேரரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 1898)
- 1861 – டி. என். சிவஞானம், தமிழக அரசியல்வாதி (இ. 1936)
- 1878 – சி. கணேசையர், இலங்கைத் தமிழறிஞர் (இ. 1958)
- 1889 – கேசவ பலிராம் ஹெட்கேவர், இந்திய மருத்துவர், செயற்பாட்டாளர் (இ. 1940)
- 1912 – ஜோசப் பாறேக்காட்டில், இந்திய கத்தோலிக்க கர்தினால் (இ. 1987)
- 1917 – திருலோக சீதாராம், தமிழகக் கவிஞர், பத்திரிகையாளர், கட்டுரையாளர் (இ. 1973)
- 1920 – டோஷிரோ மிபூன், சப்பானிய இயக்குநர், நடிகர் (இ. 1997)
- 1929 – டி. கே. கோவிந்த ராவ், கருநாடக இசைக் கலைஞர் (இ. 2011)
- 1936 – தருண் குமார் கோகய், அசாமின் 14வது முதலமைச்சர்
- 1936 – பொன். பூலோகசிங்கம், இலங்கை-ஆத்திரேலியத் தமிழறிஞர், கல்வியாளர்
- 1940 – வாங்கரி மாத்தாய், நோபல் பரிசு பெற்ற கென்னிய அரசியல்வாதி (இ. 2011)
- 1941 – அஜித் வாடேகர், இந்தியத் துடுப்பாளர் (இ. 2018)
- 1997 – ஆசா பட்டர்பீல்ட், ஆங்கிலேய நடிகர்
இறப்புகள்[தொகு]
- 1611 – அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, போர்த்துக்கேய இந்தியாவின் படைத்தளபதி, ஆளுநர் (பி. 1558)
- 1976 – மக்ஸ் ஏர்ண்ஸ்ட், செருமானிய ஓவியர், சிற்பி (பி. 1891)
- 2002 – கே. வீ. நாராயணசுவாமி, தென்னிந்திய கருநாடக வாய்ப்பாட்டு கலைஞர் (பி. 1923)
- 2007 – தி. வே. கோபாலையர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1926)
- 2007 – லாரி பேக்கர், பிரித்தானிய-இந்தியக் கட்டடக் கலைஞர் (பி. 1917)
- 2018 – சி. வி. ராஜேந்திரன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
சிறப்பு நாள்[தொகு]
- ஏப்ரல் முட்டாள்கள் நாள்
- மர நாள் (தன்சானியா)
- தேசிய நாள் (சைப்பிரசு)
- ஒடிசா நாள் (ஒடிசா)