உள்ளடக்கத்துக்குச் செல்

இரானிய நாட்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரானிய நாட்காட்டி பெர்சியா என வழங்கப்பட்ட ஈரானின் நாட்காட்டிகளைக் குறிக்கும். இவை ஈரான் தவிர ஆப்கானிஸ்தான் மற்றும் பிற இரானிய சமூகங்களிலும் பாவிக்கப்படுகிறது.

தற்போதைய இரானிய நாட்காட்டி புவி நெடுங்கோடு 52.5°கி (அல்லது GMT+3.5h)உள்ள இரானிய நேர வலயத்தில் அறிவியல்படி தீர்மானிக்கப்பட்ட வேனிற்கால சம இரவு நாள் அன்று துவங்குகிறது. இது கிரெகொரியின் நாட்காட்டியை விட துல்லியமாக ஆண்டுத் துவக்கத்தை தீர்மானிக்கிறது.[1] மனித வரலாற்றின் பல நிகழ்வுகளை பதிந்திருக்கும் இரானிய நாட்காட்டி நிர்வாக,காலநிலை மற்றும் சமய காரணங்களுக்காக பலமுறை மாற்றம் கண்டுள்ளது.

ஆங்கிலத்தில் இந்நாட்காட்டி சிலசமயங்களில் சூரிய ஹிஜ்ரி என அழைக்கப்படுகிறது. ஆண்டுகளை குறிப்பிடும்போது AP(Anno Persico என்பதன் சுருக்கம்) என்று பின்னொட்டு தரப்படுகிறது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியின்படி மார்ச் 21க்கு ஒருநாள் அண்மையில் துவங்குகிறது. கிரெகொரியின் ஆண்டைக் காண இரானிய நாட்காட்டி நாளுடன் 621 அல்லது 622 (ஆண்டின் எப்பகுதியில் கணக்கிடப்படுகிறது என்பதைப் பொறுத்து) கூட்டவேண்டும்.

இரானிய மாதங்கள்

[தொகு]
  வரிசை எண் இரானிய பெயர் ஆங்கில நாள் நாட்கள்
1 ஃபர்வர்தின் فروردین 21 மார்ச் 31
2 ஓர்டிபெஹெஸ்ட் اردیبهشت 21 ஏப்ரல் 31
3 க்ஸோர்டாட் خرداد 22 மே 31
4 தீர் تیر 22 சூன் 31
5 மோர்டாட் مرداد 23 சூலை 31
6 க்சாஹ்ரிவார் شهریور 23 ஆகத்து 31
7 மேஹ்ரி مهر 23 செப்டம்பர் 30
8 அபான் آبان 23 அக்டோபர் 30
9 அசார் آذر 22 நவம்பர் 30
10 தேஜ் دی 22 திசம்பர் 30
11 பஹ்மான் بهمن 21 சனவரி 30
12 எஸ்ஃபாந்த் اسفند 20 பிப்ரவரி 29/30

மேற்கோள்கள்

[தொகு]
  1. M. Heydari-Malayeri, A concise review of the Iranian calendar, Paris Observatory.

மேலும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரானிய_நாட்காட்டி&oldid=3270744" இலிருந்து மீள்விக்கப்பட்டது