மார்ச்சு 11
Appearance
(மார்ச் 11 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 11 (March 11) கிரிகோரியன் ஆண்டின் 70 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 295 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன.
- 1649 – புரோந்து உள்நாட்டுப் போரில் பிரான்சுடன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- 1702 – முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது.
- 1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது.
- 1812 – சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் 3-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
- 1864 – இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் 238 பேர் உயிரிழந்தனர்.
- 1888 – ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையில் பெரும் பனிப்புயல் தாக்கியதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1897 – மேற்கு வேர்ஜீனியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
- 1902 – இலங்கையில் காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது.[2]
- 1905 – இலங்கையில் காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.[2]
- 1917 – முதலாம் உலகப் போர்: பக்தாத் நகரம் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான ஆங்கிலோ-இந்தியப் படைகளிடம் வீழ்ந்தது.
- 1918 – உருசியாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.
- 1931 – சோவியத் ஒன்றியத்தில் "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் கடன்-குத்தகை ஒப்பந்தம் சட்டத்தை அமுல்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்கத் தயாரிப்பு போர்த் தளவாடங்கள் நேச நாடுகளுக்கு கடனாக அனுப்பப்பட்டன.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளங்கள் மீது மிகப்பெரிதான கமிக்காஸ் தாக்குதலை ஆரம்பித்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானின் பொம்மை அரசு வியட்நாம் இராச்சியம் பாவோ தாய் தலைமையில் அமைக்கப்பட்டது.
- 1946 – நாட்சிகளின் அவுசுவிட்சு வதமிகாமின் முதலாம் கட்டலை அதிகாரி ருடோல்ஃப் ஒசு பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டார்.
- 1958 – ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்கு கரோலைனாவில் பலர் காயமடைந்தனர்.
- 1977 – வாசிங்டனில் அனாஃபி முசுலிம்களால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த 130 பேரும் மூன்று இசுலாமிய நாடுகளின் கூட்டு முயற்சியை அடுத்து விடுவிக்கப்பட்டனர்.
- 1978 – ஒன்பது பாலத்தீனத் தீவிரவாதிகள் இசுரேலில் பேருந்து ஒன்றைக் கடத்தி 37 பொதுமக்களைக் கொன்றனர்.
- 1983 – பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.
- 1990 – லித்துவேனியா சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.
- 1998 – திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலிகள் இலங்கையின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
- 1999 – இன்ஃபோசிஸ், இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படட்து.
- 2004 – எசுப்பானியா தலைநகர் மாத்ரிதில் இடம்பெற்ற தொடர் தொடருந்துக் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
- 2007 – தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஆரியான்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4பி என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5ஏ என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
- 2009 – செருமனியில் வின்னென்டென் பாடசாலையில் மேற்கொள்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.
- 2010 – செபஸ்டியான் பினேரா சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார். இந்நாளில், சிலியின் பிச்சிலெமு பகுதியில் 6.9 அளவு ஏற்பட்ட நிலநடுக்கம் பதவியேற்பு நிகழ்வைப் பாதித்தது.
- 1983 – பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.
- 2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு இடம்பெற்றது.
- 2012 – ஆப்கானித்தான், காந்தாரம் அருகே அமெரிக்க இராணுவ வீரன் 16 பொதுமக்களைப் படுகொலை செய்தான்.
பிறப்புகள்
- 378 – முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை) (இ. 417)
- 1811 – உர்பைன் லெவெரியே, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1877)
- 1898 – சித்பவானந்தர், இராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவி (இ. 1985)
- 1912 – என். ஜி. ராமசாமி, இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1943)
- 1913 – சக்தி கிருஷ்ணசாமி, தமிழக எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் (இ. 1987)
- 1922 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் 2வது பிரதமர் (இ. 1976)
- 1927 – வி. சாந்தா, இந்திய புற்றுநோய் மருத்துவ நிபுணர் (இ. 2021)
- 1931 – ரூப்பர்ட் மர்டாக், ஆத்திரேலிய-அமெரிக்கத் தொழிலதிபர்
- 1936 – ஹெரால்டு சூர் ஹாசென், நோபல் பரிசு பெற்ற செருமானிய நச்சுயிரியலாளர்
- 1952 – டக்ளஸ் ஆடம்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 2001)
- 1985 – அஜந்த மென்டிஸ், இலங்கைத் துடுப்பாளர்
இறப்புகள்
- 1863 – ஜேம்சு ஓற்றம், ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. 1803)
- 1955 – அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய உயிரியலாளர் (பி. 1881)
- 1967 – வெ. அ. சுந்தரம், இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (பி. 1896)
- 1971 – பைலோ பார்ன்சுவர்த், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (பி. 1906)
- 1979 – ஆர். அனந்த கிருஷ்ணர், ஆந்திர கருநாடக இசைக் கலைஞர் (பி. 1893)
- 1997 – திக்குறிசி சுகுமாரன், மலையாள இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் (பி. 1916)
- 2002 – ருடால்ப் ஹெல், செருமானியக் கண்டுபிடிப்பாளர் (பி. 1901)
- 2012 – த. ஆனந்தமயில், ஈழத்து எழுத்தாளர் (பி. 1947)
- 2013 – சு. சபாரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1930)
- 2013 – ஸ்ரீபாத பினாகபாணி, இந்திய கருநாடக இசைப் பாடகர், மருத்துவர் (பி. 1913)
- 2013 – வே. தில்லைநாயகம், நூலகவியலாளர், தமிழறிஞர். (பி. 1925)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (லித்துவேனியா, சோவியத் ஒன்றியத்தில் இருந்து, 1990)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ 2.0 2.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5