மங்களூர் உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்களூர் உடன்படிக்கை என்பது 1784-ஆம் ஆண்டு மார்ச்சு 11-ஆம் தேதி திப்பு சுல்த்தானுக்கும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் ஆகும். மங்களூரில் கையெழுத்திடப்பட்ட இந்த உடன்படிக்கையின் மூலம் இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது.

பின்னணி[தொகு]

இரண்டாம் ஆங்கில மைசூர்ப் போர் தொடங்கப் பல காரணங்கள் இருப்பினும் அவற்றுள் முதன்மையானது மதராசு உடன்படிக்கையை ஆங்கிலேயர்கள் மீறிவிட்டதாக ஐதர் அலி கருதியதே. (மராத்தியர்கள் மைசூரின் மீது போர் தொடுத்த போது ஆங்கிலேயர்கள் உதவிக்கு வரவில்லை) 1780-ஆம் ஆண்டு ஐதர் அலி 80000 முதல் 90000 பேர்கள் கொண்ட படையினைக் கொண்டு ஆங்கிலேயர்களைத் தாக்கினார்.