சு. சபாரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப்பிரமணியம் சபாரத்தினம் (26 சூன் 1930 — 11 மார்ச் 2013) ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர். சசிபாரதி என்ற பெயரில் சிறுகதைகள் எழுதியவர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இறுதிக் காலத்தில் புலம் பெயர்ந்து தமிழ்நாட்டில் திருச்சியில் வாழ்ந்து வந்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

சுப்பிரமணியம்-செல்லம்மா ஆகியோருக்கு புங்குடுதீவு 6ம் வட்டாரத்தில் பிறந்தவர் சபாரத்தினம். 1951 ஆம் ஆண்டில் கொழும்பில் இருந்து வெளியான வீரகேசரி பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்த இவர் 1961 இல் ஈழநாடு பத்திரிகை யாழ்ப்பாணத்தில் தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இணைந்துகொண்டார். முதலில் செய்தி ஆசிரியராகவும் பின்னர் வாரமலர் ஆசிரியராகவும் 25 ஆண்டுகளாகப் பணியாற்றினார். ஈழநாடு பத்திரிகை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சிறிது காலம் முரசொலி பத்திரிகையிலும் பணிபுரிந்தார். யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

சிறுகதைகள், குட்டிக்கதைகள் பல எழுதியவர். நூல்களாகவும் இவற்றை வெளியிட்டார். இவரது குட்டிக் கதைகள் நூல் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. ஈழநாடு பத்திரிகையில் இவர் எழுதி வெளிவந்த ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து 'ஊரடங்கு வாழ்வு' என்னும் நூல் 1985 ஆம் ஆண்டில் தமிழியல் வெளியீடாக வெளிவந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._சபாரத்தினம்&oldid=3245099" இலிருந்து மீள்விக்கப்பட்டது