புங்குடுதீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புங்குடுதீவு
Gislanka locator.svg
Red pog.svg
புங்குடுதீவு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°34′52″N 79°49′48″E / 9.581165°N 79.829877°E / 9.581165; 79.829877
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


புங்குடுதீவு (Pungudutivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் ஒரு தீவாகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது.

இத்தீவானது வேலணை வாணர் பாலத்தினால் இணைக்கப்பட்டதன் மூலம் இங்குவாழும் மக்கள் பெரும் பயனைப் பெற்றுள்ளார்கள். குறிகட்டுவான், கழுதைப்பிட்டி போன்ற துறைகள் மூலம் மற்றய தீவுகளுடனான தொடர்புகளைக் கொண்டுள்ளது. இங்கு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கடல் வளத்தின் மூலம் மீன்பிடிப்பும் சிறப்பாக நடைபெறுகின்றன.

பெயர்க்காரணம்[தொகு]

புங்குடுதீவு என்ற பெயர் தோன்றியமைக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.

அக்காலத்தில் புங்கை மரம் நிறைந்த காடாக இவ்விடம் இருந்தமையால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாக கதைகள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்புபடுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவதுமுண்டு. மேலும் இசுலாமியரின் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் படையெடுப்பாளர்களது கொடுமையில் இருந்து தமது கன்னிப் பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று. இந்த வகையில் பூங்கொடித் தீவு என வழங்கி அது காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று என்பர்[1]. இத்தீவானது ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாகக் காணப்பட்டமையால் ஒல்லாந்தர் இதற்கு ‘மிடில்பேர்க்’ எனப் பெயரிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் ஒல்லாந்தரால் கடலில் குளித்தெடுத்த சங்குகளைக் கொண்டுவந்து பதம்பிரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் இது அமைவு பெற்று விளங்குகின்றது. இதனால் இதற்கு சங்குமாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்[1].

துறைமுகங்கள்[தொகு]

இங்கு புளியடித்துறை, கழுதைப்பிட்டித்துறை, குறிகட்டுவான் துறை, மடத்துவெளித் துறை எனும் நான்கு துறைகள் காணப்படுகின்றன. ‘கோரியா’ என்ற இடத்தில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட வெளிச்சவீடு ஒன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பெருங் கப்பல்களும், செழித்த வாணிபமும் அக்காலத்தில் இருந்தமையால் நடுக்கடலில் கப்பல்கள் சென்று திரியும் இராக் காலத்திலே கப்பல்கள் திசை மாறாது கரையை சேர்வதற்கு துணையாக கடற்கரைப் பட்டினத்தில் 35 அடி உயரமுடையதாக இவ்வெளிச்ச வீட்டை அமைத்துள்ளனர். இவ்வெளிச்ச வீடு 5 செக்கனுக்கு ஒருமுறை விட்டு விட்டு ஒளிரும் வெள்ளை ஒளியை வீசும் வண்ணம் அமைந்து காணப்படுகின்றது[1].

மக்கள் பரம்பல்[தொகு]

இலங்கையின் 1981ம் ஆண்டின் குடிசனமதிப்பீட்டின் படி 14622 பேர் அன்று வாழ்ந்துள்ளார்கள். இன்றைய நாட்டின் இனப்பிரச்சனை காரணமாக அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள்.

விளையாட்டு[தொகு]

இங்கு விளையாட்டுத் துறையினை எடுத்துக்கொண்டால் உதைபந்தாட்டம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கின்றது 1960 தொட்டு இன்றுவரை பெயர் சொல்லும் அளவுக்கு நசரேத் வி.க, சென்ட் சேவியர், சன்ஸ்டார், அம்பாள் போன்றவை மாவட்ட ரீதியாக சென்று பல வெற்றியீட்டி இந்த ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளது. இங்கு மொத்தத்தில் 16க்கு மேற்பட்ட உதைபந்தாட்டக் கழகங்களும் மைதானங்கள் உள்ளன. தீவகத்தில் அதிக கழகங்களைக் கொண்ட தீவாக புங்குடுதீவு விளங்குகின்றது அதே எண்ணிக்கையில் முன்பள்ளிகள், சனசமூக நிலையங்கள் என்பனவும் உள்ளன.

புங்குடுதீவு கோவில்கள்[தொகு]

  • ஊரதீவு பாணாவிடைச் சிவன் கோவில் (ஈழத்து இராமேஸ்வரம்)[2]
  • மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் (வயலூர் முருகன்)
  • மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம்
  • வல்லன் திருபெருந்துறை நாகதம்பிரான் ஆலயம்
  • வல்லன் இலுப்பண்ணை நாச்சிமார் கோவில்
  • வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில்
  • கோரியாவடி நாயம்மா கோவில்
  • கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்
  • தல்லையபற்று முருகமூர்த்தி கோவில்
  • சந்தையடி வீரகத்தி விநாயகர் கோவில்
  • பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில்
  • குறிகட்டுவான் மனோன்மணி அம்பாள் கோவில் (பேச்சியம்மன்)
  • பெருங்காடு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
  • பெருங்காடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்)
  • இறுப்பிட்டி பிட்டியம்பதி ஸ்ரீ காளிகாபரமேஸ்வரி அம்பாள் ஆலயம்
  • இறுப்பிட்டி அரியநாயகன்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம்
  • இறுப்பிட்டி பெரியபுலம் வீரகத்தி விநாயகர் ஆலயம்
  • இறுப்பிட்டி கொம்மாப்பிட்டி வீரகத்தி விநாயகர் கோவில்
  • தெங்கந்திடல் வீரகத்தி விநாயகர் ஆலயம் (11ஆம் வட்டாரம்)
  • மாவுதிடல் நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரர் ஆலயம்
  • மாவுதிடல் பெரிய காத்தவராயன் ஆலயம்
  • பெருங்காடு புனித புரட்டஸ்தாந்து தேவஸ்தானம்
  • பெருங்காடு புனித சவேரியார் கோவில்
  • பெருங்காடு புனித அந்தோனியார் ஆலயம்
  • ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் (புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில்)

பாடசாலைகள்[தொகு]

  • புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்
  • புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு பெருங்காடு அ.மி.பாடசாலை
  • யா/புங்குடுதீவு குறிகட்டுவான் அ.மி.த.க.பாடசாலை
  • யா/புங்குடுதீவு இறுப்பிட்டி அ.மி.த.க.பாடசாலை
  • யா/புங்குடுதீவு இறுப்பிட்டி அரியநாயகன்புலம் அ த க வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சந்தையடி ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு ராஜேஸ்வரி வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு பராசக்தி வித்தியாலயம்

ஊர்கள்[தொகு]

  • மடத்துவெளி
  • ஊரதீவு
  • வல்லன்
  • மாவுதிடல்
  • வீராமலை
  • கிழக்கூர்
  • முருக்கடி
  • கண்ணகிபுரம்
  • பெருங்காடு
  • சங்கத்தாகேணி
  • குறிகட்டுவான்
  • இறுப்பிட்டி[3]
  • கேரதீவு
  • வரதீவு
  • சிவலைப்பிட்டி
  • ஈசா முனை
  • பல்லதீவு
  • நுணுக்கல்

குளங்கள்[தொகு]

  • வெள்ளைக்குளம்
  • தில்லங்குளம்,
  • அரியரிகுளம்
  • முருகன்கோவில்குளம்
  • நாகதம்பிரான்குளம்
  • ஆமைக்குளம்
  • திகழிக்குளம்,
  • பெரியகிராய்
  • மக்கிகுண்டு
  • நக்கந்தைகுளம்
  • தர்மக்குண்டு
  • புட்டுனிகுளம்
  • வெட்டுகுளம்
  • கண்ணகிஅம்மன்தெப்பகுளம்
  • கண்ணகி அம்மன் குளம்
  • சந்தையடிகுளம்
  • கந்தசாமிகோவில்குளம்
  • விசுவாமிதிரன்குளம்
  • மாரியம்மன்கோவில்குளம்

வட்டாரங்கள்-கிராமங்கள்[தொகு]

  • முதலாம் வட்டாரம்:- சந்தையடி, பெருங்காடு வடக்கு, கரந்தலி
  • இரண்டாம் வட்டாரம்:- முருக்கடி, சந்தையடி, பெருங்காடு கிழக்கு
  • மூன்றாம் வட்டாரம்:- பெருங்காடு,நடுவுத்துருத்தி,குறிகட்டுவான்,நுணுக்கல்
  • நான்காம் வட்டாரம்:- சின்னஇறுப்பிட்டி, சிவலைப்பிட்டி புளியடி, மானாவெள்ளை
  • ஐந்தாம் வட்டாரம்:- இறுப்பிட்டி கிழக்கு, தனிப்பனை,கேரதீவு
  • ஆறாம் வட்டாரம் :- இறுப்பிட்டி வடக்கு, இறுப்பிட்டி மேற்கு, கழுதைப்பிட்டி, புளியடி
  • ஏழாம் வட்டாரம்:- ஊரதீவு, வரதீவு, மடத்துவெளி (பிரதான வீதிக்கு மேற்கே), பள்ளகாடு
  • எட்டாம் வட்டாரம்:- மடத்துவெளி, வல்லன் நாகதம்பிரான் கோவிலடி
  • ஒன்பதாம் வட்டாரம்:- வல்லன், மாவுதிடல்
  • பத்தாம் வட்டாரம்:- வீராமலை, தட்டையன்புலம், கோட்டைக்காடு, பொன்னாந்தோட்டம்
  • பதினொன்றாம் வட்டாரம்:- ஆலடி போக்கத்தை, முற்றவெளி, தல்லமி
  • பன்னிரண்டாம் வட்டாரம்:- கிழக்கூர், குறிச்சிக்காடு, தல்லையபற்று, உயரப்புலம்.

மேற்கோள்களும் உசாத்துணைகளும்[தொகு]

  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவுகள். சென்னை: ஏசியன் அச்சகம்.
  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை
  • புங்குடுதீவு மான்மியம் கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் -2012
  • பூவரசம்பொழுது விழா மலர்கள் .கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்


வெளி இணைப்புகள்[தொகு]

https://www.pungudutivuswiss.com/ http://www.madathuveli.com/

நூலகத் திட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புங்குடுதீவு&oldid=3683422" இருந்து மீள்விக்கப்பட்டது