உள்ளடக்கத்துக்குச் செல்

ரூப்பர்ட் மர்டாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Keith Rupert Murdoch
கீத் ரூப்பர்ட் மர்டாக்
ரூப்பர்ட் மர்டாக், ஆகஸ்ட் 2006
பிறப்பு11 மார்ச்சு 1931 (1931-03-11) (அகவை 93)
மெல்பர்ன், ஆஸ்திரேலியா
பணிஅதிபர், நியூஸ் கார்ப்பரேஷன்
சொத்து மதிப்பு$8.3 பில்லியன்[1]
பெற்றோர்கீத் மர்டாக் (1885-1952)
எலிசபத் மர்டாக் (பி. 1909)
வாழ்க்கைத்
துணை
பட்ரிசியா புக்கர் (1956-1967)
ஆனா டோர்வ் (1967-1999)
வென்டி டெங் (1999-)
பிள்ளைகள்புரூடென்ஸ் மர்டாக் (பி. 1958)
எலிசபத் மர்டாக் (பி. 1968)
லாக்லன் மர்டாக் (பி. 1971)
ஜேம்ஸ் மர்டாக் (பி. 1972)
கிரேஸ் மர்டாக் (பி. 2001)
குலோயி மர்டாக் (பி. 2003)

கீத் ரூப்பர்ட் மர்டாக் (Keith Rupert Murdoch, பி. மார்ச் 11, 1931) ஓர் ஆஸ்திரேலியத் தொழிலதிபர். இவரின் வணிக நிறுவனம் நியூஸ் கார்ப்பரேஷன் உலகில் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும். ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 2008இல் இவர் 109ஆம் நிலையில் உள்ளார். இவரது நியூசு கார்ப்பரேசன் எனும் நிறுவனம், ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்பட நிறுவனம்… இத்தனைக்கும் உரிமையாளரான உலக ஊடகத்துறை சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

ரூப்பர்ட் மர்டாக்கின் கீத் முர்டோச் (1885–1952) மற்றும் எலிசபெத் ஜாய் ஆகியோர்க்கு ஒரே மகனாக 11 மார்ச் 1931அன்று பிறந்தார். ரூப்பர்ட் மர்டாக்கின் பூர்வீகம் இங்கிலாந்து ஆகும். எனினும் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் தனது 21ம் வயதில் அவர் ஆஸ்திரேலியா சென்று அங்கு அவரது தந்தை நடத்தி வந்த செய்தித்தாள் நிறுவனங்களுக்குப் பொறுப்பேற்றார்.

கீத் ரூப்பர்ட் மர்டாக் ஊடகத்துறையில் முன்னேறுதல்

[தொகு]

1953ல் ஆஸ்திரேலியாவில் அவரது தந்தையான கெயித் முர்டோச்சின் ஊடக நிறுவனத்தின் பொறுப்பிற்கு வரும் கீத் ரூப்பர்ட் மர்டாக், அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அசைக்கமுடியாத ஊடகத்துறையில் மன்னனாகிறார்.

பின்னர் மார்கரெட் தாட்சரின் முழுமையான ஆதரவோடு இங்கிலாந்தைச் சேர்ந்த நியூஸ் ஆப் த வோர்ல்ட் எனும் வாராந்திரச் செய்தி இதழின் பங்குகளை வாங்குவதன் மூலம் 1969-ல் அந்நாளிதழைக் கைப்பற்றுகிறார். எண்பதுகளின் துவக்கத்தில், ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ வாராந்திர இதழின் வழமையான வடிவத்தை உதறி விட்டு அதனை ஒரு டேப்லாய்ட் வகைப்பட்ட நாளிதழாக மாற்றுகிறார்.

ஈராக் மீதான போரினால் நாகரீக உலகத்து மக்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் அம்மக்கள் நம்பும் அளவுக்கு உளவியல் ரீதியில் இவரது செய்தித்தாள் பிரச்சாரம் செய்த்து. இதன் மூலம் போருக்கு ஆதரவாக உலகெங்கிலும் ஒரு பொதுக்கருத்தை உண்டாக்குவதில் முர்டோச் வெற்றியடைந்தார்.ஆனால் போரின் முடிவில் இரசாயன ஆயுதங்கள் ஏதும் ஈராக்கில் கண்டிபிடிக்கப் படவில்லை. ஈராக் போரில் கொல்லப்பட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம்.

கீத் ரூப்பர்ட் மர்டாக்கின் பத்திரிகை நிறுவனத்தில் இரண்டாம் பெரிய பங்குதாரர் சவூதி அரேபியா இளவரசர் அல்லாவி-பின்-தலால் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளில் செயல்பாடுகள்

[தொகு]

ஆப்பிரிக்கா, மற்றும் அன்டார்டிகா போன்ற இரு கண்டங்களைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் அவர் தனது ஊடகங்களை நிறுவி செயல்படுத்தினார். இவருக்கு 146 செய்தித்தாள் நிறுவனங்களும், 28 வார, மாத இதழ்களும், பாக்ஸ் டிவி, ஸ்டார் குழும சேனல்கள் போன்ற பல சேனல்களும் உள்ளன.

கீத் ரூப்பர்ட் மர்டாக்கின் ஊடகங்களில் சில

[தொகு]

கீத் ரூப்பர்ட் மர்டாக் மீதான குற்றச்சாட்டுகள்

[தொகு]

கீத் ரூப்பர்ட் மர்டாக்கின் ஊடக சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ எனும் பத்திரிகை காவல்துறைக்கு கையூட்டு கொடுத்து, லண்டன் குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய நியுசு இண்டர்நேசனல் நிறுவனம் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது. அது மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் தொலைபேசிகளையும் கூட முர்டோச்சின் பத்திரிகை கள்ளத்தனமாக ஒட்டுக் கேட்டிருக்கிறது. அரச குடும்பத்தின் அந்தரங்கத்திலேயே மூக்கை நுழைத்து விட்டார் ருபர்ட் முர்டோச் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு நவம்பர் வாக்கில் இளவரசர் வில்லியம்ஸின் மூட்டு வலி பற்றிய ஒரு செய்தியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையில் வெளியாகிறது. மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த மூட்டு வலி விசயம் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து போலீசார், இது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறார்கள்.

முர்டாக்கின் செய்தித்தாள்கள் பல்வேறு காலகட்டங்களில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தும், சட்டவிரோதமான வகையிலும் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டும், செய்திகளைத் திரட்டியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்ந்து நடந்த விசாரணைகளில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை லண்டன் போலீசின் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மொத்தத்தையும் கையூட்டு கொடுத்து கள்ளத்தனமாக கைப்பற்றியிருக்கிறது என்ற உண்மையும் வெளியாகியுள்ளது.

மர்டாக் மீதான குற்றச்சாட்டுகளின் பின்விளைவுகள்

[தொகு]

மர்டாக் மீதான குற்றச்சாட்டுகளால் 168 ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ என்ற வாராந்திர இதழை 10-07-2011 முதல் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. இங்கிலாந்து காவல்துறை கீத் ரூப்பர்ட் மர்டாக் மீது பல குற்றவழக்குகள் பதிவுசெய்துள்ளது. வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூப்பர்ட்_மர்டாக்&oldid=3477586" இலிருந்து மீள்விக்கப்பட்டது