அப்துல் ரசாக் உசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துன்
அப்துல் ரசாக் உசேன்
Tun Abdul Razak 1968.jpg
இரண்டாவது
மலேசியப் பிரதமர்
பதவியில்
1970 செப்டம்பர் 22 – 1976 ஜனவரி 14
அரசர் யாஹ்யா பெத்ரா கிளாந்தான்
அகமட் ஷா பகாங்
துணை துன் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான்
உசேன் ஓன்
முன்னவர் துங்கு அப்துல் ரகுமான்
பின்வந்தவர் உசேன் ஓன்
மலேசியத் துணைப் பிரதமர்
பதவியில்
1957 ஆகஸ்ட் 31 – 1970 செப்டம்பர் 22
பிரதமர் துங்கு அப்துல் ரகுமான்
பின்வந்தவர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 11, 1922(1922-03-11)
பெக்கான், பகாங், மலாயா (இப்போது மலேசியா)
இறப்பு 14 சனவரி 1976(1976-01-14) (அகவை 53)
லண்டன், இங்கிலாந்து
அரசியல் கட்சி தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு
(1953–1976)
தொழிலாளர் கட்சி (ஐக்கிய இராச்சியம்)
வாழ்க்கை துணைவர்(கள்) ரஹா நோ (Rahah Noah)
பிள்ளைகள் 5
படித்த கல்வி நிறுவனங்கள் மலாயா பல்கலைக்கழகம்
லிங்கன்ஸ் இன் (சட்டத் துறை)
தொழில் வழக்குரைஞர்
சமயம் இஸ்லாம்

துன் அப்துல் ரசாக் உசேன்; (மார்ச் 12, 1922 — ஜனவரி 14, 1976), (மலாய்: Tun Haji Abdul Razak bin Dato' Hussein; ஆங்கிலம்: Tun Abdul Razak Hussein; சீனம்: 阿卜杜勒·拉扎克); என்பவர் மலேசியாவின் இரண்டாவது பிரதமர்.

1970-ஆம் ஆண்டில் இருந்து 1976-ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவியை வகித்தவர். மலேசியாவின் மேம்பாட்டுத் தந்தை (Father of Development), (மலாய்: Bapa Pembangunan) என்று போற்றப் படுகிறவர்.

இவர் ஆட்சியில் இருந்த போது, மலேசியாவில் இருந்த பல அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, பாரிசான் நேசனல் எனும் ஆளும் கூட்டணியை அமைத்தவர். மலேசியப் புதிய பொருளாதாரக் கொள்கையை (Malaysian New Economic Policy) அறிமுகப் படுத்தியவர்.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

இவர் பகாங் மாநில அரச நகரமான பெக்கான் நகரில், புலாவ் கெலாடி எனும் கிராமத்தில் 1922 பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தவர்.

அப்துல் ரசாக், கோலாகங்சார் மலாய்க் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பின்னர் 1939-ஆம் ஆண்டில் மலாயா நிர்வாகப் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு, 1940-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள ராபிள்ஸ் கல்லூரியில் படிக்க அவருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்துடன் அவரின் கல்லூரிப் படிப்பு நிறுத்தப் பட்டது. போர்க் காலத்தில் அவர் பகாங் மாநிலத்தில் வத்தானியா (Wataniah) எதிர்ப்பு இயக்கத்தை அமைக்க உதவினார்.

மலேசியப் புதிய பொருளாதாரக் கொள்கை[தொகு]

மலேசியாவில் வாழும் பல இன மக்களின் பொருளாதார, சமூகவியலைச் சமப்படுத்தும் வகையில் 1971-ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கியவர்.[2]

புறநகர் வாழ்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், வறுமை நிலையை அகற்றுவதற்கும், 1974-ஆம் ஆண்டு மலேசிய பச்சைப் புத்தகத் திட்டத்தைத் தொடங்கியவர்.

மலேசியாவில் பெல்டா, பெல்க்ரா திட்டங்களை அறிமுகப் படுத்தியவர். கிராமப் புறங்களிலும், உட்புறப் பகுதிகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நல்சேவைகளை வழங்கியவர் என்று புகழப் படுகின்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tun Abdul Razak was the one who introduced the New Economic Policy, which charted the country's economic direction and had a profound impact on the people, even until today". NST Online (ஆங்கிலம்). 13 January 2016. 2 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Abdul Razak bin Hussein, Tun Haji". Encyclopædia Britannica (15th) I: A-ak Bayes. (2010). Chicago, Illinois: Encyclopædia Britannica Inc.. 21. ISBN 978-1-59339-837-8. 
  3. "40th year of the demise of Tun Abdul Razak, the Father of Development | New Straits Times". NST Online (ஆங்கிலம்). 13 January 2016. 2 February 2022 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_ரசாக்_உசேன்&oldid=3685091" இருந்து மீள்விக்கப்பட்டது