பெக்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெக்கான்
மாவட்டம்
ஆள்கூறுகள்: 3°30′N 103°41′E / 3.500°N 103.683°E / 3.500; 103.683ஆள்கூற்று: 3°30′N 103°41′E / 3.500°N 103.683°E / 3.500; 103.683
நாடு  மலேசியா
பகாங் Flag of Pahang.svg பகாங் டாருல் மாக்மூர்
Seat பெக்கான்
அரசு
 • மாவட்ட ஆளுநர் டத்தோ முகமட் பாட்சிலி பின் முகமட் கெனாலி
பரப்பளவு
 • மொத்தம் 3
மக்கள்தொகை (2006)
 • மொத்தம் 120
 • அடர்த்தி 31.53
அஞ்சல் குறியீடு 26600
தொலைபேசிக் குறியீடு 0609
வாகனப் பதிவு C
மலாயா கூட்டரசு 1895
ஜப்பானியர் ஆட்சி 1942
மலாயா கூட்டமைப்பு 1948
இணையத்தளம் http://www.mdpekan.gov.my

பெக்கான் (Pekan) மலேசியா, பகாங் மாநிலத்தின் அரச நகரம். பகாங் மாநிலத்தின் தலைநகரமான குவாந்தானில் இருந்து தென்கிழக்காக 45 கி.மீ. தொலைவில் உள்ளது. பெக்கான் நகரத்தின் பெயர் Bunga Pekan எனும் மலரின் பெயரில் இருந்து வந்தது.[1] இங்கு பகாங் சுல்தானின் அரண்மனையும், அரச பள்ளிவாசலும் உள்ளன. இந்த நகரம் மலேசியாவின் இரு பிரதமர்களை உருவாக்கித் தந்த பெருமையைப் பெறுகிறது.

மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்களும்,[2] இப்போதைய பிரதமர் நஜீப் துன் ரசாக்[3] அவர்களும் இந்த நகரில் பிறந்தவர்கள். பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் தகப்பனார்தான் துன் அப்துல் ரசாக். பெக்கான் நகரின் பழைய பெயர் இந்திராபுரா.[4] இந்தியாவில் இருந்து வந்த இந்திய வணிகர்கள் இந்திராபுரா என்று அழைத்தனர்.[5]

வரலாறு[தொகு]

முன்பு காலத்தில் பகாங் ஆற்றின் இரு மருங்கிலும் பெக்கான் மலர்கள் நிறைய பூத்துக் குலுங்கின. அந்த மலர்களின் பெயர் பெக்கான் நகருக்குச் சூட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நகரம் 17ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இதுவரையில் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை.

ஆனால், 18ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் உள்ள சுலாவாசி தீவில் இருந்து மக்கள் பெக்கான் நகரில் குடியேறியதாக சான்றுகள் உள்ளன. அப்படி குடியேறிய குடும்பங்களில் ஒன்றுதான் முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் குடும்பம் ஆகும்.

பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி[தொகு]

பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக பிரதமர் நஜீப் துன் ரசாக் இருக்கிறார்.

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P85 பெக்கான் நஜீப் துன் ரசாக் தேசிய முன்னணி

பெக்கான் சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P85 N20 புலாவ் மானிஸ் கைருடின் முகமட் தேசிய முன்னணி
P85 N21 பெராமு ஜெயா இப்ராஹிம் அகமட் முகமட் தேசிய முன்னணி
P85 N22 பேபார் இஷாக் முகமட் தேசிய முன்னணி
P85 N23 சினி அபு பாக்கார் ஹருண் தேசிய முன்னணி

துணை மாவட்டங்கள்[தொகு]

பெக்கான் மாவட்டத்தில் 11 துணை மாவட்டங்கள் அல்லது முக்கிம்கள் உள்ளன.

 • பேபார் (176,400 ஹெக்டர்)
 • பென்யோர் (73,600 ஹெக்டர்)
 • லேபார் (47,100 ஹெக்டர்)
 • புலாவ் மானிஸ் (22,000 ஹெக்டர்)
 • பெக்கான் (17,300 ஹெக்டர்) (தலைநகர்)
 • தெமாய் (12,700 ஹெக்டர்)
 • காஞ்சோங் (11,4000 ஹெக்டர்)
 • லாங்கார் (9,600 ஹெக்டர்)
 • கோலா பகாங் (3,900 ஹெக்டர்)
 • பகாங் துவா (3,900 ஹெக்டர்)
 • புலாவ் ரூசா (2,600 ஹெக்டர்)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கான்&oldid=1929116" இருந்து மீள்விக்கப்பட்டது