உள்ளடக்கத்துக்குச் செல்

செகாட் தீவு

ஆள்கூறுகள்: 2°39′49″N 104°09′59″E / 2.66361°N 104.16639°E / 2.66361; 104.16639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செகாட் தீவு
உள்ளூர் பெயர்:
Jehat Island
செகாட் தீவு is located in மலேசியா
செகாட் தீவு
செகாட் தீவு
      செகாட் தீவு
      மலேசியா
புவியியல்
அமைவிடம்தென்சீனக் கடல்
ஆள்கூறுகள்2°39′49″N 104°09′59″E / 2.66361°N 104.16639°E / 2.66361; 104.16639
தீவுக்கூட்டம்ஜொகூர்; தீபகற்ப மலேசியா; மலேசியா
நிர்வாகம்

செகாட் தீவு (மலாய்: Pulau Jehat; ஆங்கிலம்: Pulo Jehat; ஜாவி: ڤولو جيهت) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், ரொம்பின் மாவட்டத்தில் ஜொகூர் நீரிணையில் அமைந்து உள்ள ஒரு தீவு.

செகாட் தீவு எனும் பெயருக்கு பொல்லாத தீவு (Wicked Island) என்று பொருள். தியோமான் தீவிற்கு தெற்கே அமைந்துள்ளது.[1]

சதுப்புநிலக் காட்டு கருங்காந்தள் (Heritiera littoralis) தாவரம் இந்தத் தீவில் காணப்படுகிறது.[2][3]

பொது[தொகு]

1938-ஆம் ஆண்டில், ஜொகூர் நீரிணையைப் பாதுகாப்பதற்காகப் பிரித்தானியர்கள் , செகாட் தீவில் மூன்று ஆயுதக் கிடங்குகளை உருவாக்கினார்கள். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய மிட்சுபிசி ரக விமானம் (Mitsubishi A6M Zero) அந்தக் கிடங்குகளை அழிக்க முயன்றதாகவும்; ஆனாலும் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும் கூறப்படுகிறது.

போரின் முடிவில் அந்தக் கிடங்குகள் கைவிடப்பட்டன. தற்போது தீவு காலியாக உள்ளது.

மலாய்ப் புராணக் கதைகளில், இந்தத் தீவு மேரா (Merah) என்ற மந்திரவாதியின் ஓய்வெடுக்கும் இடமாகச் சொல்லப் படுகிறது. இந்தத் தீவு பவளப் பாறைகளுக்குப் புகழ் பெற்றது. கடலுக்கடியில் சில குகைகளும் உள்ளன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Myers, Arthur (2001). "The Witch Doctor of Pulo Jehat". The little giant book of "true" ghost stories. New York: Scholastic Inc. pp. 243–247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0439339952.
  2. "Dungun (Heritiera littoralis) on the Shores of Singapore". WILD Fact Sheets. பார்க்கப்பட்ட நாள் 4 March 2012.
  3. Keng, Hsuan; Ro-Siu Ling Keng (1990). The concise flora of Singapore: gymnosperms and dicotyledons, Volume 2. Singapore: Singapore Univ. Press. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9971691353. பார்க்கப்பட்ட நாள் 4 March 2012.
  4. "Pulau Jahat". Tioman Now!. பார்க்கப்பட்ட நாள் 4 March 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Gibson, Bob (1950). The wide world. Calgary, Alta: W.R. Gibson. The curse of Pulo Jehat / Thomas Welborn, July 1957, vol. 119, no. 707
"https://ta.wikipedia.org/w/index.php?title=செகாட்_தீவு&oldid=3910624" இலிருந்து மீள்விக்கப்பட்டது