ரவுப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரவுப்
Raub
மாவட்டம்
மாவட்டத் தலைநகரம்
அலுவல் சின்னம் ரவுப் Raub
சின்னம்
நாடு மலேசியா
மலேசியா
மாவட்டம்ஜெராண்டுட்
உருவாக்கம்18-ஆம் நூற்றாண்டு
அரசு
 • வகைநகராண்மைக் கழ்கம்
 • மாவட்ட அதிகாரிடத்தோ ஹாஜி இஸ்மாயில் பின் ஹாஜி முகமட் அலி
 • நாடாளுமன்ற உறுப்பினர்அரிப் சாப்ரி அஜீஸ்
பரப்பளவு
 • மொத்தம்2,269 km2 (876 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்88,600
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை 3° 47′ 35″ North, 101° 51′ 25″ East (ஒசநே)
அஞ்சல் குறியீடு27600
தொலைபேசி குறியீடு06
இணையதளம்http://www.mdraub.gov.my/

ரவுப் (ஆங்கிலம்: Raub); சீனம்: 劳勿) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் ஒரு மாவட்டம் ஆகும். இந்த நகரம் அமைந்து இருக்கும் மாவட்டத்திற்கு ரவுப் என்று பெயர். ரவுப் நகரம் கோலாலம்பூரில் இருந்து 110 கி.மீ., குவாந்தான் நகரில் இருந்து 265 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. ரவுப் மாவட்டத்தின் தலைப்பட்டணமாகவும் விளங்குகிறது. பகாங் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் ரவுப் நகரமும் ஒன்றாகும்.[1]

19-ஆம் நூற்றாண்டில், இங்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1889-இல் ரவுப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்கம் (Raub Australian Gold Mine) தோற்றுவிக்கப் பட்டது. சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த மக்கள் பலர், ரவுப் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்வதற்கு படையெடுத்தனர்.[2]

ரவுப்பில் பிரித்தானியர்கள் கட்டிய பழைய கட்டடங்கள் இன்னும் இருக்கின்றன. ரவுப் மேசன் சாலையில் அந்தக் கட்டடங்களைக் காண முடியும். இந்த நகரில் இருக்கும் ஒரு போலீஸ் நிலையம்தான் மலேசியாவிலேயே மிகவும் பழமையான போலீஸ் நிலையம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப் போலீஸ் நிலையம் 1906-இல் கட்டப்பட்டது.[3]

வரலாறு[தொகு]

ரவுப் நகரம் 18-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டது. இது மலேசிய வரலாற்றில் சிறப்புமிக்க ஒரு தங்கச் சுரங்கக் குடியேற்றப் பகுதியாகும். 1961-ஆம் ஆண்டில் தங்கம் தோண்டுவது நிறுத்தப் பட்டது. இருப்பினும், அண்மைய காலங்களில் உலகளாவிய நிலையில் தங்கத்தின் விலையேற்றத்தால், அந்தச் சுரங்கத்தை மீண்டும் மீட்டெழுச்சி செய்வதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

முன்பு காலத்தில், ஒவ்வொரு தாம்பாளத் தட்டு மணலைத் தோண்டி எடுக்கும் போது, ஒரு பிடி தங்கம் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.[4] இதனை ஜே.ஏ.ரிச்சர்ட்சன் என்பவர் The Geology and Mineral Resources of the Neighbourhood of Raub Pahang எனும் நூலில் (பக்:36) எழுதி இருக்கிறார். ஒரு முதியவரும் அவருடைய இரு மகன்களும் ஒவ்வொரு முறையும் மணலைத் தோண்டும் போது ஒரு கைப்பிடி தங்கம் கிடைத்ததாகக் கிராமத்துக் கதைகளிலும் சொல்லப் படுகின்றன.[5] Meraup எனும் மலாய்ச் சொல்லில் இருந்து Raub எனும் சொல் உருவானது. மெரவுப் என்றால் தோண்டுதல் என்று பொருள்.[6]

ரவுப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனம்[தொகு]

20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், தங்கம் தோண்டுவதில் ரவுப் பிரசித்தி பெற்று விளங்கியது. 1889-இல் பதிவு செய்யப்பட்ட ரவுப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனம் இங்கே செயல்பட்டு வந்தது. தொடக்கத்தில் அந்த நிறுவனத்தின் பெயர் ஆஸ்திரேலியன் சிண்டிகேட் லிமிடெட். பின்னர், ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனம் என பெயர் மாற்றம் கண்டது.1961 ஆம் ஆண்டு வரை தங்கச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டது.

ரவுப் தங்கச் சுரங்கத்தில் தங்கத்தைத் தோண்டி எடுப்பதற்கு, சுழல் தண்டு முறையைப் பயன்படுத்தினார்கள். அம்பைப் போன்ற சுழல் தண்டைப் பூமிக்குள் செலுத்தி மண்ணைத் தோண்டி எடுத்து, அதில் இருந்து தங்கத்தைப் பிரித்து எடுத்தார்கள். அந்தக் காலகட்டத்தில், தங்கச் சுரங்கத் தொழில் துறையினால் ரவுப் மாவட்டம் பெயர் பெற்று விளங்கியது.

ரவுப் நகரின் பிரதான சாலையின் பெயர் பிப்பி சாலை. ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனத்தின் முதல் நிர்வாகியாகச் சேவை செய்த வில்லியம் பிப்பியின் பெயர் அந்தச் சாலைக்கு சூட்டப்பட்டது. ரவுப் நகரில் மேலும் ஒரு முக்கியமான சாலை மேசன் சாலை. ரவுப் மாவட்ட அதிகாரியாக இருந்த ஜே.எஸ்.மேசன் என்பவரின் பெயர் அந்தச் சாலைக்குச் சூட்டப்பட்டது.[7]

உள்ளூர் மக்கள் எதிர்ப்பு[தொகு]

2011-ஆம் ஆண்டில் இருந்து, பெனின்சுலர் கோல்ட் எனும் ஒரு புதிய நிறுவனம், ரவுப் தங்கச் சுரங்கத்தை மீட்டெழுச்சி செய்து வருகிறது.[8] அதே பழைய இடத்திலேயே தோண்டுதல் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், உள்ளூர் மக்கள் அந்த மீட்டெழுச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுரங்கத்தில் இருந்து வெளியாகும் சையனைட் தூசுகளால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக பொது மக்கள் குறை கூறுகின்றனர்.[9]

அவர்கள் நாள் ஒன்றுக்கு 0.5 லிருந்து 0.8 வரையிலான பி.பி.எம். அளவு ஹைட்ரஜன் சையனைட் (hydrogen cyanide) விஷ தூசுகளைக் கிரகிப்பதாகப் புகார் செய்துள்ளனர்.[10] பி.பி.எம். அளவு என்றால் ஒரு மில்லியனில் ஒரு பகுதியாகும். (Part Per Million).

மலாயா கம்யூனிஸ்டுகளின் அச்சுறுத்தல்[தொகு]

1940களில் மலாயா நாட்டு மக்களுக்கு பயங்கரமான அச்சுறுத்தல்களைக் கொடுத்து வந்தது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக சின் பெங் என்பவர் இருந்தார். மலாயா கம்யூனிஸ்டு கட்சி, பிரித்தானிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதும், அக்கட்சியின் உறுப்பினர்கள் கிராமப்புறப் பகுதிகளில் அடைக்கலம் அடைந்தனர். மலாயா கம்யூனிஸ்டுகளினால் கிராமப்புற மக்களின் வாழ்வில் சித்ரவதைகளும் தொல்லைகளும் தொடர்ந்தன.[11]

மலாயா கம்யூனிஸ்டுகளின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சில முக்கிய நடவடிக்கைகளை பிரித்தானியா அரசாங்கம் மேற்கொண்டது. ஈயச் சுரங்கங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈட்டுபட்டது. ’பிரிக்ஸ்’ திட்டத்தையும் (Briggs Plan)[12] அமல் படுத்தியது. மலாயா கம்யூனிஸ்டுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பொருளுதவிகளைத் துண்டிப்பதுதான் ’பிரிக்ஸ்’ திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

பிரிக்ஸ் திட்டம்[தொகு]

’பிரிக்ஸ்’ திட்டத்தை உருவாக்கியவர் ஹெரால்ட் பிரிக்ஸ் (General Sir Harold Briggs)[13] என்பவர். இவர் அப்போது மலாயாவின் பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கை இயக்குநராக இருந்தார்.

அந்த வகையில், ரவுப் சுற்றுவட்டாரத்தில் புதிய புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு, பொதுமக்கள் மறுக் குடியேற்றம் செய்யப்பட்டனர். 1948-இல் செரோ, சாங் லீ, சுங்கை ருவான், சுங்கை செத்தாங்; 1949-இல் செம்பாலிட், சுங்கை லூய், திராஸ்; 1960-இல் சுங்கை கிளாவ் போன்ற புதுக் குடியிருப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. பெரும்பாலான இந்தக் குடியிருப்புகளில் சீன வம்சாவளியினர்தான் மிகுதியாகக் குடி அமர்த்தப்பட்டனர்.

மலாய்க்காரர்கள் பெரும்பாலும் புறநகர்ப் பகுதிகளில் விவசாயம் செய்து வந்ததால், அவர்களுக்கு குறைவான அளவில்தான் புதுக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. இந்தியர்கள் பெரும்பாலும் தோட்டப்புறங்களில் வாழ்ந்ததால், அவர்கள் வாழ்ந்த ரப்பர் தோட்டக் குடியிருப்புகளில் முள்வேலிகள் அமைத்துத் தரப்பட்டன. தற்சமயம், ரவுப் மக்கள் பல்வகையாக இருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர் சீனர்கள் ஆகும். அவர்கள் தங்கச் சுரங்கங்களில் முன்பு வேலை செய்ய வந்தவர்களின் வழித்தோன்றல்கள் ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

Map of Raub

ரவுப்பில் இருந்த தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்ட பின்னர், அதன் முக்கியப் பொருளாதாரச் செயல்பாடாக விவசாயம் அமைந்தது. பிரதான உற்பத்திப் பொருளாக ரப்பர், கொக்கோ போன்றவை இருந்தன. உள்நாட்டுப் பழங்களான டுரியான், பலாப்பழங்கள் பயிர் செய்யப்படுகின்றன. ரவுப்பில் உற்பத்தி செய்யப்படும் டுரியான்கள் மலேசியாவிலேயே மிகச் சிறந்தவை என புகழாரம் செய்யப் படுகின்றது.[14]

போக்குவரத்து[தொகு]

பேருந்துச் சேவையே முக்கியமான பொது போக்குவரத்துச் சேவையாக விளங்குகிறது. ரவுப் நகரில் இருந்து மற்ற சிறு சிறு நகரங்களுக்கு பேருந்துகள் செல்கின்றன. பெந்தோங், குவாந்தான், கோலாலம்பூர், சிங்கப்பூர் போன்ற சிறு பெரு நகரங்களுக்கும் பேருந்துச் சேவைகள் உள்ளன. பேருந்துச் சேவைகளை, பகாங் லின் சியோங், யூனியன், செண்ட்ரல் பேருந்து நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. கிழக்குக் கரை நகரங்களான குவா மூசாங், கோத்தா பாரு போன்ற நகரங்களுக்குச் செல்லும் மையத் தளமாக ரவுப் நகரம் விளங்குகிறது.

அரசியல்[தொகு]

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி[தொகு]


நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P80 ரவுப் அரிப் சாப்ரி அப்துல் அஜீஸ் ஜனநாயக செயல் கட்சி

மாநிலச் சட்டமன்றம்[தொகு]


நாடாளுமன்றம் சட்டமன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P80 N6 பத்து தாலாம் அப்துல் அஜீஸ் மாட் கிராம் பாரிசான் நேசனல்
P80 N7 திராஸ் சூங் சியூ ஓன் ஜனநாயக செயல் கட்சி
P80 N8 டோங் ஷாருடின் மோயின் பாரிசான் நேசனல்

துணை மாவட்டங்கள்[தொகு]

ரவுப் மாவட்டத்தில் ஏழு துணை மாவட்டங்கள் உள்ளன.

 • காலி - Gali (65,300 ஹெக்டர்)
 • பத்து தாலாம் - Batu Talam (57,000 ஹெக்டர்)
 • செமாந்தான் உலு - Semantan Ulu (33,400 ஹெக்டர்)
 • திராஸ் - Tras (29,000 ஹெக்டர்)
 • உலு டோங் - Ulu Dong (19,200 ஹெக்டர்)
 • செகா - Sega (15,500 ஹெக்டர்)
 • டோங் - Dong (7,500 ஹெக்டர்)

மேற்கோள்[தொகு]

 1. One of the oldest towns in the State of Pahang, Raub began in the early 1800 as a gold mining settlement.
 2. Raub is a historic gold mining centre, and mines in the vicinity are known to have produced over 1 million oz.
 3. The former Police Station is dated 1906, making it one of the oldest in the country.
 4. Every time they meraup, they got gold. Because there was a lot of gold and it was easily gotten, just by meraup with their hands, it was believed that they named the area “RAUB”.
 5. The old folk’s tale recounts that in the early 19th century, an old man and his two sons discovered gold every time they scooped up the earth in Raub.
 6. The town and the district derived their name from the Malay word raub which means "scoop".
 7. Some of the streets in Raub such as Bibby Road (now renamed Jalan Tun Razak) and Mason Road (now Jalan Tengku Abdulla) were named after RAGM managers.
 8. Peninsular is a producing gold mining Company with projects located in the vicinity of Raub, State of Pahang, Malaysia.
 9. Bukit Koman residents have insisted that they are exposed to unacceptable levels of cyanide exposure from the Raub Australian Gold Mine plant daily despite denials.
 10. According to the Ban Cyanide Action Committee (BCAC), about 3,000 Bukit Koman residents are exposed to hydrogen cyanide concentrations of 0.5 to 0.8ppm daily.
 11. The communists started to realise that their policy of terrorizing supplies from the local population was just breeding hostility, facing renewed military opposition they pulled back into the deep jungles and stopped the random attacks.
 12. Today we remember it as the Briggs Plan after its founder, Sir Harold Briggs, a General with the British armed forces. It set out to win the "the hearts and minds" of the rural Chinese and the sprawling pockets of squatters just outside the main urban centres throughout the country.
 13. During the Emergency, Lieutenant-General Sir Harold Briggs, as the Director of Operations, conceived an ambitious resettlement programme, known as 'The Briggs Plan'.
 14. Best durians comes from Raub due to its terrain and soil.

வெளித் தொடர்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவுப்&oldid=2765027" இருந்து மீள்விக்கப்பட்டது