பெந்தோங்

ஆள்கூறுகள்: 3°31′N 101°55′E / 3.517°N 101.917°E / 3.517; 101.917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெந்தோங்
Bentong
2008-ஆம் ஆண்டில் பெந்தோங் நகரம்.
2008-ஆம் ஆண்டில் பெந்தோங் நகரம்.
பெந்தோங் Bentong is located in மலேசியா மேற்கு
பெந்தோங் Bentong
பெந்தோங்
Bentong
ஆள்கூறுகள்: 3°31′N 101°55′E / 3.517°N 101.917°E / 3.517; 101.917
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
நகரத் தோற்றம்16 ஜுலை 2005[1]
மாநகர்த் தகுதி1 அக்டோபர் 2021
அரசு
 • யாங் டி பெர்துவா
Yang Dipertua
துவான் டத்தோ ஹாஜா அயிடா முனிரா
Dato' Hajah Aida Munira Binti Abdul Rafar
பரப்பளவு
 • மொத்தம்867.69 km2 (335.02 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்114,397
நேர வலயம்மலேசிய நேரம் (MST) (ஒசநே+8)
 • கோடை (பசேநே)கண்காணிப்பு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு28xxx
வாகனப் பதிவுC
அனைத்துலக முன்னொட்டுக் குறி+6-09 (தரைவழித் தொடர்பு)
இணையதளம்www.mpbentong.gov.my/en/

பெந்தோங் என்பது (மலாய்: Bentong; ஆங்கிலம்: Bentong; சீனம்: 文冬) மலேசியா, பகாங் மாநிலத்தில், பெந்தோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பகாங் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம். கோலாலம்பூர் மாநகருக்கு வடகிழக்கில் 80 கி.மீ தொலைவில், தித்திவாங்சா மலைத்தொடருக்கு எதிரே அமைந்து உள்ளது.

இந்த நகரத்தின் மேற்கில் சிலாங்கூர் மாநிலம்; தெற்கில் நெகிரி செம்பிலான் மாநிலம்; எல்லைகளாக அமைந்து உள்ளன. கிழக்கு கடற்கரை கிளாந்தான்; திரங்கானு மாநிலங்களுக்குச் சாலை வழியாகச் செல்வதற்கு இந்த நகரம் நுழைவாயிலாக அமைகின்றது.

உள்ளூர் ரப்பர் தோட்டங்கள் மற்றும் ஈயச் சுரங்கங்களுக்கான வணிக மையமாகவும் கெந்திங் மலைக்குச் செல்லும் அடிவாசல் நகரமாகவும் விளங்குகிறது.[2]

பெந்தோங் நகரத்திற்குச் செல்லும் அசல் பிரதான சாலை, இப்போது இரட்டை வழிச் சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. நாட்டின் முதல் "புதுக் காற்று வழி நுரையீரல் தூய்மை செய்" இடமாக (Fresh Air Lung Washing Eco Tourism Destination) அறிவிக்கப்பட்டு உள்ளது.[3]

வரலாறு[தொகு]

ஒரு பழைய புராணக் கதையின்படி, முன்னர் காலத்தில் கார்லோ சாஸ் (Carlo Sas) என்று அழைக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்கு முன்னர் பெந்தோங் எனும் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

முந்தைய காலங்களில், பெந்தோங் நகரம் இப்போதைய சந்தைப் பகுதிக்கு அருகில் இருந்தது. அந்தப் பகுதி ரெபாஸ் நதியும் பெர்த்திங் நதியும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் சோங்கி எனும் கிராமப் பகுதி என்றும் சொல்லப் படுகிறது.

1995-ஆம் ஆண்டில், அரசாங்கத்தின் அரசாணை 47/ 5/5/1995 மூலமாகப் பெந்தோங் நகரம ஒரு நகராட்சி மன்றமாக மாற்றம் செய்யப்பட்டது.

பெந்தோங் தமிழ்ப்பள்ளி[தொகு]

பெந்தோங் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் பெந்தோங் தமிழ்ப்பள்ளி (SJKT Bentong). 145 மாணவர்கள் பயில்கிறார்கள். 15 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.mpbentong.gov.my/en/mpb/profile/background/page/0/1 Majlis Perbandaran Bentong
  2. "It is a commercial centre for local rubber estates and alluvial tin mines. Genting Highlands is a nearby hill resort". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 June 2021.
  3. "Bentong Declared As Fresh Air Lung Washing Eco Tourism Destination". BERNAMA (in ஆங்கிலம்). 27 August 2017. பார்க்கப்பட்ட நாள் 7 June 2021.
  4. "பெந்தோங் தமிழ்ப்பள்ளி, பெந்தோங், பகாங்". sjktbentong.blogspot.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெந்தோங்&oldid=3165396" இலிருந்து மீள்விக்கப்பட்டது