யாங் டி பெர்துவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யாங் டி பெர்துவா (ஆங்கிலம், மலாய் மொழி: Yang di-Pertua) என்பவர், மலேசியாவில் மலாக்கா, பினாங்கு, சரவாக், சபா மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பை வகிப்பவர். இவரை மாநில ஆளுநர் (Yang di-Pertua Negeri) என்று அழைப்பார்கள். 1957-ஆம் ஆண்டு, மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, மலாக்கா, பினாங்கு, சரவாக், சபா மாநிலங்களின் ஆளுநரை கவர்னர் என்று அழைத்தார்கள்.[1]

சிலாங்கூர், திரங்கானு, கெடா, கிளாந்தான், பகாங், ஜொகூர், பேராக் மாநிலங்களின் அரசர்களைச் சுல்தான்கள் என்று அழைக்கிறார்கள். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசரை யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்றும், பெர்லிஸ் மாநிலத்தின் அரசரை ராஜா (Raja) என்றும் அழைப்பது வழக்கம்.

ஒரு மாநிலத்தின் யாங் டி பெர்துவாவை, மலேசியாவின் மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்கள் நியமனம் செய்வார். மலேசியப் பிரதமருடன் கலந்தாலோசித்த பிறகு, அந்த நியமனத்தைச் செய்வார். ஒரு மாநிலத்தின் யாங் டி பெர்துவா, நான்கு ஆண்டு காலம் பதவி வகிப்பார். இவரை மாண்புமிகு Tuan (Yang Terutama (T.Y.T.) என்று அழைக்க வேண்டும்.

நாடாளுமன்ற மக்களாட்சி முறைமையில், ஒரு மாநிலத்தின் தலைவராக யாங் டி பெர்துவா செயல்படுவார். மாநில முதலமைச்சரை நியமனம் செய்யும் அதிகாரம் இவரிடம் உண்டு. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் கலைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கும் இவருக்கு அதிகாரம் உண்டு.

தற்போதைய யாங் டி பெர்துவாக்கள்[தொகு]

ஒவ்வொரு மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்களின் பட்டியல்:

மாநிலம் யாங் டி பெர்துவா பதவி அமர்வு முன்னால்
மலாக்கா முகமட் காலில் யாக்கூப் 04.06.2004 பட்டியல்
Flag of Penang அப்துல் ரஹ்மான் அபாஸ் 01.05.2001 பட்டியல்
Flag of Sabah ஜுஹார் மகிருடின் 01.01.2011 பட்டியல்
Flag of Sarawak அப்துல் தாயிப் முகமட் 01.03.2014 பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Peranan Tuan Yang Terutama Yang di-Pertua Negeri Melaka" (Malay). பார்த்த நாள் 10 ஜனவரி 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாங்_டி_பெர்துவா&oldid=1784822" இருந்து மீள்விக்கப்பட்டது