கெந்திங் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெந்திங் மலை
Genting Highlands
Genting 01.jpg
கெந்திங் மலை உல்லாச மையம்
உயர்ந்த இடம்
உயரம்1,760 m (5,770 ft)
ஆள்கூறு3°25′25.00″N 101°47′36.00″E / 3.4236111°N 101.7933333°E / 3.4236111; 101.7933333ஆள்கூறுகள்: 3°25′25.00″N 101°47′36.00″E / 3.4236111°N 101.7933333°E / 3.4236111; 101.7933333
புவியியல்
அமைவிடம்தீபகற்ப மலேசியா
மலைத்தொடர்தித்திவாங்சா மலைத்தொடர்
Climbing
Easiest routeபத்தாங்காலியில் இருந்து காராக் நகருக்குச் செல்லும் வழி

கெந்திங் மலை (மலாய் மொழி: Tanah Tinggi Genting; ஆங்கிலம்: Genting Highlands) என்பது மலேசியாவில் ஒரு மலை வாழிடமாகும். பகாங் - சிலாங்கூர் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில், தித்திவாங்சா மலைத் தொடரில் இந்த மலை வாழிடம் அமைந்து உள்ளது.[1] இங்கு குளிர்மையான தட்ப வெட்ப நிலை நிலவுகிறது.

மலேசியாவில் மிக பிரசித்திப் பெற்ற ஒரு சுற்றுலாத் தளமும் இங்கு அமைந்து உள்ளது. ரிசோர்ட் வோல்ட் கெந்திங் (Resorts World Genting) என்று அழைக்கப் படுகிறது.[2] இந்தச் சுற்றுலாத் தளம், கெந்திங் குழுமத்திற்குச் சொந்தமானது.

கோலாலம்பூர் மாநகரில் இருந்து 54 கி.மீ. தொலைவில் இருக்கும் கெந்திங் மலையில், ஒரு தொங்கூர்திச் சேவையும் பயன்பாட்டில் உள்ளது. கெந்திங் மலையின் அடிவாரத்தில் இருந்து, இந்தச் சேவையைப் பயன்படுத்தி, மலை உச்சிக்குச் செல்லலாம். அதன் நீளம் 3.38 கி.மீ.

உலகிலேயே மிக வேகமாகச் செயல்படும் இந்தத் தொங்கூர்தியில், நவீனமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் தென் கிழக்கு ஆசியாவில் மிக நீளமான தொங்கூர்தியாகவும் விளங்குகிறது.[3]

வரலாறு[தொகு]

கோலாலம்பூர் மாநகருக்கு அருகாமையில், ஓர் உல்லாச மையத்தை அமைக்க வேண்டும் என்பது டான் ஸ்ரீ லிம் கோ தோங் (Tan Sri Lim Goh Tong) என்பவரின் பழைய கால கனவாக இருந்தது. 1964-ஆம் ஆண்டு, அவர் அங்கு சென்ற போது, ஓர் உல்லாச மையத்தை அமைக்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டது.[4]

அதன் விளைவாக, 1965 ஏப்ரல் 27-ஆம் தேதி, கெந்திங் ஹைலண்ட்ஸ் பெர்ஹாட் எனும் ஒரு நிறுவனம் உருவாக்கப் பட்டது. இவருக்கு உதவியாக டான் ஸ்ரீ ஹாஜி முகமட் நோவா பின் ஒமார் என்பவரும் துணையாக இருந்தார்.

பின்னர், 1965- 1970-ஆம் ஆண்டுகளில், பகாங் மாநில அரசாங்கத்திடம் இருந்து, 12,000 ஏக்கர் நிலமும், சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடம் இருந்து 2,800 ஏக்கர் நிலமும் கிடைக்கப் பெற்றன.[4]

துங்கு அப்துல் ரகுமான்[தொகு]

1965 ஆகஸ்டு 18-ஆம் தேதி, கெந்திங் செம்பா எனும் இடத்தில் இருந்து, உலு காலி மலையின் உச்சி வரையில் ஓர் அடைவழிச் சாலை அமைக்கப் பட்டது. அந்தச் சாலையை அமைப்பதற்கு நான்கு ஆண்டுகள் பிடித்தன. 1969 மார்ச் 31-ஆம் தேதி, கெந்திங் நிறுவனத்தின் முதல் விடுதிக்கான அடிக்கல் நாட்டுவிழா, மலேசியாவின் முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் அவர்களால் நடைபெற்றது.[5]

உல்லாசத்தின் சொர்க்கபுரி[தொகு]

மலேசியாவின் உல்லாசத்தின் சொர்க்கபுரி என்று கெந்திங் மலை அழைக்கப் படுகிறது.[6] கேளிக்கைகள் நிறைந்த இடம். சூதாட்டம் என்றால் அது கெந்திங் என்று அனைவரும் அறிந்த இடமாகத் திகழ்கிறது. இந்த மலைப் பாதையில் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். மேலே செல்வதற்கு கெந்திங் ஸ்கைவே (Genting Skyway) என்ற இடத்தில் இருந்து, திறந்த ரயில்பெட்டி வசதியும் உள்ளது. இந்தத் திறந்த ரயில்பெட்டி 3.38 கி.மீ. தூரம் வரை செல்கிறது.[6]

கெந்திங் மலைக்கு செல்லும் பாதை மிகவும் அழகாக, பாதுகாப்பாக அமைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சாலை விபத்துகள் நிகழ்வது உண்டு. மேலே செல்லச் செல்ல பனி மூட்டங்களால் சூழப்பட்ட அழகான காட்சிகள், கண்டு ரசிக்கக் கூடியதாக உள்ளன. வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளை இங்கு அதிகமாகக் காண முடியும்.[6]

கெந்திங் மலையில் First World Hotel எனும் மிகப் பெரிய தங்கும் விடுதி உள்ளது. இதில் 6,118 அறைகள் உள்ளன. 2008-ஆம் ஆண்டு வரை, உலகின் மிக அதிகமான அறைகளைக் கொண்ட மிகப் பெரிய தங்கும் விடுதி எனும் சிறப்பைப் பெற்றுத் திகழ்ந்தது. இப்பொழுது மூன்றாவது இடத்தில் உள்ளது.[7]

தங்கும் விடுதிகள்[தொகு]

கெந்திங் மலையில் ஆறு விடுதிகள் உள்ளன. இவற்றுள் பர்ஸ்ட் வோர்ல்ட் விடுதி கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும், ரிப்லிஸ் பிலீவ் இட் ஆர் நாட் எனும் புத்தகத்திலும், இடம் பெற்று இருந்தது. 2006-ஆம் ஆண்டில் இருந்து 2013 வரை உலகிலேயே மிகப்பெரிய தங்கும் விடுதியாகவும் புகழ் பெற்று இருந்தது.[8]

  • கிரேண்ட் கெந்திங்
  • மெக்சிம் கெந்திங்
  • ரிசோர்ட் கெந்திங்
  • தீம் பார்க் விடுதி
  • பர்ஸ்ட் வோர்ல்ட் விடுதி & பிளாசா
  • கோல்ப் & கண்ட்ரி விடுதி

பல்நோக்குப் பூங்காக்கள்[தொகு]

மிகப் பிரமாண்டமான மூன்று பல்நோக்குப் பூங்காக்கள் உள்ளன. அவை:

  • வெளிப்புற பல்நோக்குப் பூங்கா
  • பர்ஸ்ட் வோர்ல்ட் பல்நோக்குப் பூங்கா
  • பல்நோக்கு நீர்ப் பூங்கா

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெந்திங்_மலை&oldid=3366327" இருந்து மீள்விக்கப்பட்டது