ரவுப் மாவட்டம்

ஆள்கூறுகள்: 3°50′N 101°50′E / 3.833°N 101.833°E / 3.833; 101.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவுப் மாவட்டம்
Raub District
Daerah Raub
ரவுப் மாவட்டம்
ரவுப் மாவட்டம்
ரவுப் மாவட்டம் is located in மலேசியா
ரவுப் மாவட்டம்
ரவுப் மாவட்டம்
      ரவுப் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°50′N 101°50′E / 3.833°N 101.833°E / 3.833; 101.833
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம்ரவுப்
தொகுதிரவுப்
உள்ளூராட்சிரவுப் நகராண்மைக் கழகம்
அரசு
 • மாவட்ட அதிகாரிஅண்டான் உசேன்[1]
பரப்பளவு[2]
 • மொத்தம்2,268.33 km2 (875.81 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்92,162
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு27xxx, 49xxx (பிரேசர் மலை)
மலேசியத் தொலைபேசி+6-09
மலேசியப் போக்குவரத்து எண்C

ரவுப் மாவட்டம் (ஆங்கிலம்: Raub District; மலாய்: Daerah Raub; சீனம்: 劳勿县; ஜாவி: ﺭءﺍﻭﺏ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் ரவுப். பகாங் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

ரவுப் நகரம் கோலாலம்பூரில் இருந்து 110 கி.மீ., குவாந்தான் நகரில் இருந்து 265 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

இந்த ரவுப் மாவட்டத்தின் கிழக்கில் சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர் மாவட்டம் உள்ளது. தவிர இந்த மாவட்டத்தைச் சுற்றிலும், இதர பகாங் மாநிலங்களான லிப்பிஸ் மாவட்டம், ஜெராண்டுட் மாவட்டம், தெமர்லோ மாவட்டம், பெந்தோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.

இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள் பிரேசர் மலை மற்றும் பத்து தாலாம் (Batu Talam). தித்திவாங்சா மலைத்தொடர், மற்றும் பெனோம் மலைத்தொடர் ஆகியவற்றுக்கு இடையே இந்த மாவட்டம் அமைந்துள்ளது.

துணை மாவட்டங்கள்[தொகு]

ரவுப் மாவட்டம்

ரவுப் மாவட்டத்தில் ஏழு துணை மாவட்டங்கள் உள்ளன.

 • காலி - Gali
 • பத்து தாலாம் - Batu Talam
 • செமாந்தான் உலு - Semantan Ulu
 • திராஸ் - Tras
 • உலு டோங் - Ulu Dong
 • செகா - Sega
 • டோங் - Dong

மக்கள்தொகையியல்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1991 73,085—    
2000 79,488+8.8%
2010 91,731+15.4%
2020 96,139+4.8%

பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.

பெக்கான் இனக்குழுக்கள் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு
இனம் மக்கள்
தொகை
விழுக்காடு
பூமிபுத்ரா 58,325 63.3%
சீனர் 27,684 30.0%
இந்தியர் 5,871 6.4%
மற்றவர் 282 0.3%
மொத்தம் 92,162 100%

வரலாறு[தொகு]

ரவுப் மாவட்டத்தில், 19-ஆம் நூற்றாண்டில், தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தைத் தோண்டி எடுப்பதற்கு 1889-ஆம் ஆண்டில் ’ரவுப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்கம்’ (Raub Australian Gold Mine) தோற்றுவிக்கப் பட்டது. பேராக், சிலாங்கூர், பகாங் மாநிலங்களில் வாழ்ந்த மக்கள் பலர், ரவுப் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்வதற்குச் சென்றனர்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில், தங்கம் தோண்டுவதில் ரவுப் மாவட்டம் பிரசித்தி பெற்று விளங்கியது. ரவுப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனம் (Raub Australian Gold Mine) எனும் நிறுவனம் 1889-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது.

தொடக்கத்தில் அந்த நிறுவனத்தின் பெயர் ஆஸ்திரேலியன் சிண்டிகேட் லிமிடெட் (Australian Syndicate Ltd). பின்னர், ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனம் (Australian Gold Mining Co. Ltd) என பெயர் மாற்றம் கண்டது. 1961-ஆம் ஆண்டு வரை தங்கச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டது.

மலேசியாவில் பழமையான போலீஸ் நிலையம்[தொகு]

அந்தக் காலக்கட்டத்தில், தங்கச் சுரங்கத் தொழில் துறையினால் ரவுப் மாவட்டம் பெயர் பெற்று விளங்கியது. ரவுப்பில் பிரித்தானியர்கள் கட்டிய பழைய கட்டடங்கள் இன்னும் இருக்கின்றன. ரவுப் மேசன் சாலையில் அந்தக் கட்டடங்களைக் காண முடியும்.

இந்த நகரில் இருக்கும் ஒரு போலீஸ் நிலையம்தான் மலேசியாவிலேயே மிகவும் பழமையான போலீஸ் நிலையம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப் போலீஸ் நிலையம் 1906-இல் கட்டப்பட்டது.[3]

மேசன் சாலை[தொகு]

இப்போதும்கூட ரவுப் நகரின் பிரதான சாலையாக பிப்பி சாலை (Bibby Road) விளங்குகிறது. ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனத்தின் முதல் நிர்வாகியாகச் சேவை செய்த வில்லியம் பிப்பியின் (William Bibby) பெயர் அந்தச் சாலைக்கு சூட்டப்பட்டது.

ரவுப் நகரில் மேலும் ஒரு முக்கியமான சாலை மேசன் சாலை (Mason Road). ரவுப் மாவட்ட அதிகாரியாக இருந்த ஜே.எஸ்.மேசன் (J S Mason) என்பவரின் பெயர் அந்தச் சாலைக்குச் சூட்டப்பட்டது.[4]

மீண்டும் சுரங்கத் தொழில்[தொகு]

2011-ஆம் ஆண்டில் இருந்து, பெனின்சுலர் கோல்ட் (Peninsular Gold) எனும் ஒரு புதிய நிறுவனம், ரவுப் தங்கச் சுரங்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தது. அதே பழைய இடத்திலேயே தோண்டுதல் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதிகமான அளவில் தங்கம் கிடைக்கவில்லை.

இருப்பினும், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுரங்கத்தில் இருந்து வெளியாகும் சையனைட் தூசுகளால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதாக பொது மக்கள் குறை கூறுகின்றனர்.

மலாயா கம்யூனிஸ்டுகளின் அச்சுறுத்தல்[தொகு]

1940-ஆம் ஆண்டுகளில் மலாயா புரட்சிவாதிகளால் மக்களுக்கு பல்வேறான அச்சுறுத்தல்கள். அப்போது மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக சின் பெங் என்பவர் இருந்தார். மலாயா கம்யூனிஸ்டு கட்சி, பிரித்தானிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதும், அக்கட்சியின் உறுப்பினர்கள் கிராமப்புறப் பகுதிகளில் அடைக்கலம் அடைந்தனர்.

மலாயா கம்யூனிஸ்டுகளினால் கிராமப்புற மக்களின் வாழ்வில் வேதனைகளும் தொல்லைகளும் தொடர்ந்தன. மலாயா கம்யூனிஸ்டுகளின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கச் சில முக்கிய நடவடிக்கைகளை பிரித்தானியா அரசாங்கம் மேற்கொண்டது.

ஈயச் சுரங்கங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈட்டுபட்டது. ’பிரிக்ஸ்’ திட்டத்தை அமல் படுத்தியது. மலாயா கம்யூனிஸ்டுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பொருளுதவிகளைத் துண்டிப்பதுதான் ’பிரிக்ஸ்’ திட்டத்தின் தலையாய நோக்கமாகும். (Briggs Plan)[5]

பிரிக்ஸ் திட்டம்[தொகு]

பிரிக்ஸ் திட்டத்தை உருவாக்கியவர் ஏரால்ட் பிரிக்ஸ் (General Sir Harold Briggs)[6] என்பவர். இவர் அப்போது மலாயாவின் பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கை இயக்குநராக இருந்தார்.

அந்த வகையில், ரவுப் சுற்றுவட்டாரத்தில் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு, பொதுமக்கள் மறுக் குடியேற்றம் செய்யப்பட்டனர். 1948-இல் செரோ, சாங் லீ, சுங்கை ருவான், சுங்கை செத்தாங்; 1949-இல் செம்பாலிட், சுங்கை லூய், திராஸ்; 1960-இல் சுங்கை கிளாவ் போன்ற புதுக் குடியிருப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. பெரும்பாலான இந்தக் குடியிருப்புகளில் சீன வம்சாவளியினர்தான் மிகுதியாகக் குடி அமர்த்தப்பட்டனர்.

ரப்பர் தோட்டங்களில் முள்வேலிகள்[தொகு]

மலாய்க்காரர்கள் பெரும்பாலும் புறநகர்ப் பகுதிகளில் விவசாயம் செய்து வந்ததால், அவர்களுக்கு குறைவான அளவில்தான் புதுக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.

இந்தியர்கள் பெரும்பாலும் தோட்டப்புறங்களில் வாழ்ந்ததால், அவர்கள் வாழ்ந்த ரப்பர் தோட்டக் குடியிருப்புகளில் முள்வேலிகள் அமைத்துத் தரப்பட்டன. தற்சமயம், ரவுப் மக்கள் பல்வகையாக இருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர் சீனர்கள் ஆகும். அவர்கள் தங்கச் சுரங்கங்களில் முன்பு வேலை செய்ய வந்தவர்களின் வழித்தோன்றல்கள் ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

Map of Raub

ரவுப்பில் இருந்த தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்ட பின்னர், அதன் முக்கியப் பொருளாதாரச் செயல்பாடாக விவசாயம் அமைந்தது. பிரதான உற்பத்திப் பொருளாக ரப்பர், கொக்கோ போன்றவை இருந்தன.

உள்நாட்டுப் பழங்களான டுரியான், பலாப்பழங்கள் பயிர் செய்யப்படுகின்றன. ரவுப்பில் உற்பத்தி செய்யப்படும் டுரியான்கள் மலேசியாவிலேயே மிகச் சிறந்தவை என புகழாரம் செய்யப் படுகின்றது.[7]

அரசியல்[தொகு]

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி[தொகு]


நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P80 ரவுப் அரிப் சாப்ரி அப்துல் அசீசு ஜனநாயக செயல் கட்சி

மாநிலச் சட்டமன்றம்[தொகு]


நாடாளுமன்றம் சட்டமன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P80 N6 பத்து தாலாம் அப்துல் அசீசு மாட் கிராம் பாரிசான் நேசனல்
P80 N7 திராஸ் சூங் சியூ ஓன் ஜனநாயக செயல் கட்சி
P80 N8 டோங் சாருடின் மோயின் பாரிசான் நேசனல்

காட்சியகம்[தொகு]


மேற்கோள்[தொகு]

 1. "Senarai Pegawai". pdtraub.pahang.gov.my. Archived from the original on 2020-05-12. பார்க்கப்பட்ட நாள் 2022-06-05.
 2. "Latar Belakang". pdtraub.pahang.gov.my. Archived from the original on 2020-05-12. பார்க்கப்பட்ட நாள் 2022-06-05.
 3. The former Police Station is dated 1906, making it one of the oldest in the country.
 4. Some of the streets in Raub such as Bibby Road (now renamed Jalan Tun Razak) and Mason Road (now Jalan Tengku Abdulla) were named after RAGM managers.
 5. Today we remember it as the Briggs Plan after its founder, Sir Harold Briggs, a General with the British armed forces. It set out to win the "the hearts and minds" of the rural Chinese and the sprawling pockets of squatters just outside the main urban centres throughout the country.
 6. During the Emergency, Lieutenant-General Sir Harold Briggs, as the Director of Operations, conceived an ambitious resettlement programme, known as 'The Briggs Plan'.
 7. Best durians comes from Raub due to its terrain and soil.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவுப்_மாவட்டம்&oldid=3591423" இலிருந்து மீள்விக்கப்பட்டது