உள்ளடக்கத்துக்குச் செல்

எண்டாவ் ஆறு

ஆள்கூறுகள்: 2°40′N 103°38′E / 2.667°N 103.633°E / 2.667; 103.633
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எண்டாவ் ஆறு
Endau River
Sungai Endau
அமைவு
நாடு மலேசியா
சிறப்புக்கூறுகள்
மூலம்எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்கா[1]
 ⁃ அமைவுஎண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்கா
முகத்துவாரம்தென்சீனக் கடல், ஜொகூர்: எண்டாவ், மெர்சிங் மாவட்டம்; பகாங் கோலா ரொம்பின், ரொம்பின் மாவட்டம்

எண்டாவ் ஆறு; (மலாய்: Sungai Endau; ஆங்கிலம்: Endau River) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தின் எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவில் (Endau Rompin National Park) உருவாகி தென் சீனக் கடலில் (South China Sea) சங்கமிக்கும் ஆறு ஆகும்.[2]

இந்த ஆறு ஜொகூர் மாநிலத்தில் உருவாகினாலும், தென் சீனக் கடலில் கலக்கும் போது; பகாங் - ஜொகூர் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இயற்கை எல்லையாக அமைகிறது. அந்த வகையில் எண்டாவ் ஆறு, புவியல் ரீதியாக பகாங் மாநிலத்தின் ஓர் ஆறாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இந்த ஆற்றின் 90 விழுக்காடு பயன்பாடு ஜொகூர் மாநிலத்திலேயே அதிகமாக உள்ளது.

பொது

[தொகு]

இந்த ஆறு தென் சீனக் கடலில் சேர்வதற்கு முன்னர் ஜொகூர் மாநிலத்தின் எண்டாவ் (Endau), மெர்சிங் மாவட்டம் (Mersing District); பகாங் மாநிலத்தின் கோலா ரொம்பின் (Kuala Rompin), ரொம்பின் மாவட்டம் (Rompin District) ஆகிய பகுதிகளைக் கடந்து செல்கிறது.[3]

எண்டாவ் நகரம் எண்டாவ் ஆற்றின் முகப்பில் அமைந்துள்ளது. மீன்பிடி படகுகள்; மீன்பிடி கப்பல்கள் போன்ற படகு போக்குவரத்து துறை சார்ந்த தளவாடங்களை எண்டாவ் துறைமுகத்திலும்; எண்டாவ் பாலத்திற்கு அருகிலும் நிறுத்தப்பட்டு இருப்பதைக் காணலாம்.

பொதுவாக எண்டாவ் நகரம் ஒரு மீன்பிடி நகர கிராமமாகவே அறியப்படுகிறது.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Endau-Rompin is a beautiful national park in the southeastern part of Peninsular Malaysia. Together with Taman Negara and Royal Belum State Park it contains some of the oldest rain forests in the world". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  2. "The name of the national park comes from two rivers that run through it. They are Rompin River to the north and the Endau River to the south". goJohor. 4 February 2014. பார்க்கப்பட்ட நாள் 6 July 2023.
  3. "Established in 1993, the 48,905-ha Endau-Rompin (Johor) National Park is the largest protected area in the southern half of Peninsular Malaysia". Johor National Parks. 20 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • S. Durai Raja Singam. 1980. Place-names in Peninsular Malaysia.
  • MacKinnon K, Hatta G, Halim H, Mangalik A.1998. The ecology of Kalimantan. Oxford University Press, London.


"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்டாவ்_ஆறு&oldid=3750610" இலிருந்து மீள்விக்கப்பட்டது