பத்து ஈத்தாம்

ஆள்கூறுகள்: 3°52′06.4″N 103°22′06.4″E / 3.868444°N 103.368444°E / 3.868444; 103.368444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்து ஈத்தாம்
Batu Hitam
பகாங்
Map
ஆள்கூறுகள்: 3°52′06.4″N 103°22′06.4″E / 3.868444°N 103.368444°E / 3.868444; 103.368444
நாடு மலேசியா
மாவட்டம்குவாந்தான்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு25xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-09
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்C

பத்து ஈத்தாம் (மலாய் மொழி: Batu Hitam; ஆங்கிலம்: Batu Hitam; சீனம்: 黑淡) என்பது மலேசியா, பகாங், குவாந்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம். மலேசியாவில் உள்ள முக்கியமான கடற்கரை நகரங்களில் இந்த நகரமும் ஒன்றாகும். குவாந்தான் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இந்தக் கடற்கரை நகரம் உள்ளது.

மலாய் மொழியில் பத்து (Batu) என்றால் கல்; (Hitam) என்றால் கருமை; பத்து ஈத்தாம் என்றால் கருங்கல் என பொருள்படும். குவாந்தான் மாவட்டத்தில் உள்ள இந்த நகரத்தின் கடற்கரைகளில் அதிகமான கருங்கற்கள் இருப்பதால் பத்து ஈத்தாம் என பெயர் வந்ததாக அறியப்படுகிறது.[1]

பொது[தொகு]

இன்றைய நிலையில் பத்து ஈத்தாம் கடற்கரைகளில் நிறையவே கருங்கற்கள் காணப் படுகின்றன. இங்கு சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் அந்தக் கற்களை நினைவுப் பொருட்களாக எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. கடற்கரைப் பகுதி பெரும்பாலும் வார இறுதிநாட்களில் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து இருக்கும்.[2]

குவாந்தான் மாவட்டம்[தொகு]

குவாந்தான் மாவட்டம், பகாங் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் திராங்கானு மாநிலத்தின் கெமாமான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் ஜெராண்டுட் மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குவாந்தான் மற்றும் பண்டார் இந்திரா மக்கோத்தா (Bandar Indera Mahkota). இதர நகரங்கள் பஞ்சிங், சுங்கை லெம்பிங், கம்பாங் மற்றும் பெசெரா.

மேற்கோள்[தொகு]

  1. "There are many black rock piles along the coastal area. He said the pile of black stones resulted from a natural phenomenon believed to have occurred hundreds of years ago". www.mamapipie.com. பார்க்கப்பட்ட நாள் 6 July 2023.
  2. "Batu Hitam Beach is a beach resort destination located 10km north of Kuantan. The beach gets its name from the unique features along its landscape which are large rock beds that vary in color from gray to black". பார்க்கப்பட்ட நாள் 6 July 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_ஈத்தாம்&oldid=3750902" இலிருந்து மீள்விக்கப்பட்டது