கெமாமான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெமாமான் மாவட்டம்
 திராங்கானு
Kemaman District
Chukai, Monica Bay.jpg
கெமாமான் மாவட்டம் is located in மலேசியா
கெமாமான் மாவட்டம்
கெமாமான் மாவட்டம்
மலேசியாவில் கெமாமான் அமைவிடம்
ஆள்கூறுகள்: 4°15′N 103°10′E / 4.250°N 103.167°E / 4.250; 103.167ஆள்கூறுகள்: 4°15′N 103°10′E / 4.250°N 103.167°E / 4.250; 103.167
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம்Flag of Kemaman, Terengganu.svg கெமாமான்
தொகுதிசுக்காய்
உள்ளூராட்சிகெமாமான் நகராண்மைக் கழகம்
அரசு
 • மாவட்ட அதிகாரிசுசுமான் இப்ராகிம் (Jusman Bin Ibrahim)[1]
பரப்பளவு[2]
 • மொத்தம்2,535.60 km2 (979.00 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1,66,434
 • Estimate (2020)[3]2,15,000
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு24xxx
மலேசியத் தொலைபேசி+6-09-8
மலேசியப் போக்குவரத்து எண்T
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1991 1,11,901 —    
2000 1,37,070 +22.5%
2010 1,66,750 +21.7%
2020 2,15,582 +29.3%
Source: [4]

கெமாமான் மாவட்டம் (ஆங்கிலம்: Kemaman District; மலாய்: Daerah Kemaman; சீனம்: 甘马挽县; ஜாவி: كمامن‎) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

கெமாமன் மாவட்டத்திற்கு கிழக்கில் தென் சீனக்கடல்; வடக்கில் டுங்குன் மாவட்டம் (Dungun District); தெற்கிலும் மேற்கிலும் பகாங் மாநிலம் எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தெற்கு நுழைவாயிலாக அமைகின்றது.

கெமாமான் மாவட்டத்தின் நிர்வாக மையம் மற்றும் முக்கியப் பொருளாதார மையம் சுக்காய் நகரம். திராங்கானு - பகாங் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் உள்ளது.

பொது[தொகு]

இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கிய நகரங்கள் கிஜால், கெர்த்தே மற்றும் கெமாசிக். இந்த மாவட்டம் ஒரு நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது. கிட்டத்தட்ட 1000 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டது. உலு திராங்கானு மாவட்டத்திற்கு அடுத்த நிலையில், இது மூன்றாவது பெரிய மாவட்டமாகும்.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

கெமாமான் மாவட்டம் 12 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[5] அவை:

  • பாண்டி - Bandi
  • பங்குல் - Banggul
  • பிஞ்சாய் - Binjai
  • சுக்காய் (தலைநகர்) - Chukai
  • உலு சுக்காய் - Hulu Chukai
  • உலு ஜபூர் - Hulu Jabur
  • கெமாசிக் - Kemasik
  • கெர்த்தே - Kerteh
  • கிஜால் - Kijal
  • பாசிர் செமுட் - Pasir Semut
  • தெபாக் - Tebak
  • தெலுக் கலோங் - Teluk Kalong

மக்கள் தொகையியல்[தொகு]

2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கெமாமான் நகராண்மைக் கழகத்தின் நிர்வாகப் பகுதியில் 167,824 குடியிருப்பாளர்கள் இருந்தனர்.[6] மலாய்க்காரர்கள் - 157,778 சீனர்கள் - 6937 இந்தியர்கள் - 743 பிற இனக் குழுக்கள் - 264

1940-ஆம் ஆண்டுகள் வரையிலான மக்கள்தொகை கணக்கெடுப்புகளில், கோலா திராங்கானு மற்றும் பெசுட் மாவட்டங்களுக்குப் பிறகு இந்தக் கெமாமான் மாவட்டம் தான் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியாகும். 1970-களில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மக்கள்தொகை அமைப்பு மாற்றம் கண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Organisation Chart of Kemaman Municipal Council".
  2. Administrator. "Mengenai Daerah Kemaman". pdtkemaman.terengganu.gov.my.
  3. Administrator. "Pengenalan Daerah Dungun". pdtdungun.terengganu.gov.my.
  4. "TABURAN PENDUDUK MENGIKUT PBT & MUKIM 2010". Department of Statistics, Malaysia. 15 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. http://apps.water.gov.my/jpskomuniti/dokumen/KEMAMAN_PROFIL_MAC_20112.pdf பரணிடப்பட்டது 2017-05-17 at the வந்தவழி இயந்திரம் வார்ப்புரு:Bare URL PDF
  6. "Key Findings Population and Housing Census of Malaysia, 2020". Population and Housing Census of Malaysia. 17 May 2022 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kemaman District
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெமாமான்_மாவட்டம்&oldid=3649535" இருந்து மீள்விக்கப்பட்டது