பாகான் லாலாங்
பாகான் லாலாங் Bagan Lalang | |
---|---|
ஆள்கூறுகள்: 2°36′13″N 101°41′17″E / 2.60361°N 101.68806°E[1] | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | சிப்பாங் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 43950 |
தொலைபேசி எண்கள் | +603-87 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | mpsepang |
பாகான் லாலாங் (மலாய் மொழி: Bagan Lalang; ஆங்கிலம்: Bagan Lalang; சீனம்: 峇眼拉浪) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம். சிப்பாங் தங்கக் கடற்கரை நகரம் (Golden Coast Sepang) என்று பெயர் பெற்றுள்ள இந்த நகரம் மலேசியாவில் பிரசித்தி பெற்ற கடற்கரை நகரங்களில் ஒன்றாக அறியப் படுகிறது.[2]
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 33 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 73 கி.மீ. சிரம்பான் மாநகரில் இருந்து 53 கி.மீ. தொலைவில் உள்ளது. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்டிக்சன் நகரம் இந்த நகரத்திற்கு மிக அருகாமையில் உள்ளது.
பாகான் லாலாங் கடற்கரை (Bagan Lalang Beach) சிலாங்கூர் மாநிலத்தின் தென்மேற்கு கடற்கரையோரத்தில் உள்ள சிறந்த கடற்கரை; மற்றும் கோலாலம்பூருக்கு மிக அருகில் உள்ள கடற்கரைகளில் ஒன்றாகும்.[3]
பொது
[தொகு]பாகான் லாலாங் கடற்கரை நீச்சலுக்குப் பாதுகாப்பானவை. கேளிக்கை விளையாட்டுகள், மகிழுலா, காற்றாடி பறக்க விடுதல் மற்றும் முகாமிடுதல் போன்ற அனைத்து வகையான கடற்கரை நடவடிக்கைகளுக்கு பாகான் லாலாங் கடற்கரையில் வசதிகள் உள்ளன. மலிவான தங்கும் இடங்களும் உள்ளன.
இங்குள்ள கடற்கரைகள் நீச்சல் நடவடிக்கைகளுக்கும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்பானவை. எனினும் சில இடங்கள் கடல் பெருக்கு காரணமாக ஆபத்தானவை என்பதால் பாதுகாப்பு நோக்கங்களுக்காகத் தடைசெய்யப்பட்டு உள்ளன.
சதுப்புநிலக் காடுகள்
[தொகு]இந்த நகரத்தைச் சுற்றிலும் ஏராளமான சதுப்புநிலக் காடுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வண்டல் மண்ணால் உருவான நிலப் படுகைகள் ஆகும். இந்தச் சதுப்புநிலக் காடுகளில் காண்டா நண்டுகள் அதிகமாகக் கிடைக்கின்றன.
பாகான் லாலாங் கடற்கரை நகரத்திற்கு அருகில் சுங்கை பீலேக் எனும் ஒரு நடுதர நகரம் உள்ளது. களிமண் கொண்டு செங்கல் தயாரிக்கும் தொழிலுக்கு சுங்கை பீலேக் நகரம் பிரபலம் பெற்றது. இருப்பினும் அண்மைய காலங்களில் சுங்கை பீலேக்; பாகான் லாலாங் பகுதிகளில் செங்கல் தொழிற்சாலைகள் மிகவும் குறைந்துவிட்டன.[4]
குடியிருப்புகள்
[தொகு]பாகான் லாலாங் கடற்கரை நகரத்திற்கு அருகில் புக்கிட் பாங்கோங் (Bukit Bangkong), பத்து அம்பாட் (Batu Empat), பத்து டுவா (Batu Dua), தெலுக் மெர்பாவ் (Teluk Merbau) மற்றும் சிப்பாங் கெச்சில் (Sepang Kecil) போன்ற குடியிருப்புகள் உள்ளன.
இவற்றுள் புக்கிட் பாங்கோங் முன்பு ஒரு சிறிய பழங்குடியினக் குடியேற்றமாக இருந்தது. ஆனால், தற்போது ஜாவானிய மலாய் மக்கள் (Javanese Malay) அதிகமாக உள்ளனர்.
காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sepang Gold Coast". Find Latitude and Longitude (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 July 2023.
- ↑ "Pantai Bagan Lalang". visitselangor.com. Visit Selangor. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
- ↑ "Bagan Lalang Beach is probably the best beach along the southwest coastline of Selangor state and one of the closest beaches to Kuala Lumpur, being located only about 25 minutes drive from Kuala Lumpur International Airport and the Sepang International Circuit (F1 circuit)". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 5 July 2023.
- ↑ CHEN, GRACE. "Farming still a mainstay at 120-year-old Chinese village". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2022.